search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admission in"

    • மொடக்குறிச்சி கலை அறிவியியல் கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது.
    • மாணவர்களின் கலந்தாய்வு விவரங்கள் கல்லூரி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் கனகமலையில் உள்ள மொடக்குறிச்சி கலை அறிவியியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 19-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

    பி.எஸ்.சி. கணினி அறிவியல், கணிதம், விலங்கியல், வணிகவியல், பி.காம். சி.ஏ., வணிகவியல் பயன்பாடு, பி.பி.ஏ. சி.ஏ., வணிக நிர்வாகவியல் கணினி பயன்பாடு, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 8 பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

    இணையதளத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள் நேரிடையாக விண்ணப்பங்கள் பெற்று காலியான இடங்க ளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு அடிப்படையில் சேரலாம்.

    கலந்தாய்வுக்கு வரும் மாணவ- மாணவிகள் 19-ந் தேதி காலை 10 மணிக்கு இணைய விண்ணப்பத்தின் நகல், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் நகல், சாதி சான்றிதழ், 2 பாஸ்போஸ்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை ஆகியவற்றின அசல், நகல் மற்றும் படிவம், கல்லூரி கட்டணத்துடன் பெற்றோருடன் வர வேண்டும்.

    மாணவர்களின் கலந்தாய்வு விவரங்கள் கல்லூரி இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு இளங்கலை மற்றும் 2-ம் ஆண்டு முதுகலை மாணவர்களுக்கு வரும் 19-ந் தேதி கல்லூரி திறக்கும் நாள் என கல்லூரி முதல்வர் ஜெ.எபெனேசர் தெவித்துள்ளார்.

    • ஈரோடு மற்றும் கோபி அரசு ஐ.டி.ஐ.யில் புதிய தொழில் பிரிவுகளில் பயிற்சி பெறலாம்.
    • ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தகவல்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மற்றும் கோபி அரசு ஐ.டி.ஐ.யில் எலக்ட்ரீஷியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், ஒயர்மேன், வெல்டர், டெக்ஸ்டைல்ஸ், மெக்கானிக்கல் மோட்டார் வைக்கிள், ஏ.சி.மெக்கானிக் ஆகிய என்ஜினீயரிங் பாடப்பிரிவும்,

    என்ஜினீயரிங் அல்லாத கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், கட்டிட பட வரைவாளர் தொழில் பிரிவுகள், இண்டஸ்டரி 4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய புதிய தொழில் பிரிவுகளில் பயிற்சி பெறலாம்.

    பயிற்சி பெற 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மற்றும் தோல்வி அடைந்தவர்கள் அரசு ஐ.டி.ஐ.யை நேரில் அணுகலாம்.

    பயிற்சி பெறுவோருக்கு மாதம் 750 ரூபாய் உதவித்தொகை, லேப்டாப், சைக்கிள், சீருடை, பாடப்புத்தகம், காலணி, பஸ் பாஸ் இலவசமாக வழங்கப்படும்.

    அரசு பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை படித்த பெண் பயிற்சியாளர்களுக்கு புதுமை பெண் திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும்.

    பயிற்சி வகுப்புடன் 2 ஆண்டு ஐ.டி.ஐ. பயிற்சி மற்றும் 10-ம் வகுப்புடன் 2 ஆண்டு ஐ.டி.ஐ. பயிற்சி முடித்தவர்களுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் முறையே 10-ம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்சி பயிற்சி உதவித்தொ கையுடன் வழங்கப்படும். பிரபல தொழில் நிறுவ னங்கள், மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும்.

    ஆன்லைனில் விண்ணப்ப பதிவு கட்டணம் 50 ரூபாய் செலுத்த ஏ.டி.எம். கார்டு, போன் பே, ஜி பே வசதியுடன் வரலாம். ஆவணங்கள் கொண்டு வர வேண்டும்.

    வரும் ஜூன் மாதம் 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு ஈரோடு அரசு ஐ.டி.ஐ.யை 0424 2275244, 0424 2270044 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×