பாம்பு கடித்து தொழிலாளி சாவு

தூங்கிக்கொண்டிருந்த மணியை பாம்பு ஒன்று கடித்து விட்டது.சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பாம்பு கடித்து தொழிலாளி சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சேவை கவுண்டனூர் காசிலிங்க புரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (42). கூலி தொழிலாளி. இவரது மனைவி கார்த்திகா. இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 14-ந் தேதி கார்த்திகா குருநாத புரம், வாழை குட்டை தோட்டம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அன்று இரவு மனைவியை பார்க்க மணி தனது மாமியார் வீட்டுக்கு வந்தார். இரவு சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்க சென்று விட்டனர். மணி வீட்டு வாசலில் தரையில் பாயை போட்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென தூங்கிக் கொண்டி ருந்த மணியை பாம்பு ஒன்று கடித்து விட்டது. இதனால் அலறிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சை க்காக பெருந்துறை யில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வெள்ளி திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடலை பார்த்து மனைவி, குழந்தைகள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com