என் மலர்
ஈரோடு
- 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவை வளர்ச்சி பாதையில் பா.ஜ.க. அரசு கொண்டு செல்கிறது.
- வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி.
ஈரோடு:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி. கே. வாசன் எம்.பி. தலைமை தாங்கினார்.
இதில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் ஜி.கே.வாசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் காமராஜர் பிறந்த நாளை ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்தி சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 15-ந் தேதி காமராஜர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் பிரம்மாண்ட முறையில் நடைபெற உள்ளது.
மத்திய பா.ஜ.க., தமிழகத்தில் அ.தி.மு.க., த.மா.கா வளர்ச்சியையும், வெற்றியையும் ஜீரணிக்க முடியாமல் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எங்கள் கூட்டணி மீது அவதூறு பேச தொடங்கியுள்ளது. தி.மு.க. கூட்டணியில் முரண்பாடு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை தடுக்க சூழ்ச்சியை செய்ய தொடங்கியுள்ளனர். நேற்று கூட பா.ஜ.க., அ.தி.மு.க. நிர்வாகியை கைது செய்துள்ளனர். இதனை த.மா.கா. வன்மையாக கண்டிக்கிறது. காவல் துறையின் மூலம் பழிவாங்கும் நடவடிக்கையில் தி.மு.க. செயல்படுகிறது. இதனை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்
நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் இந்திய அளவில் சாதனை படைத்த நிலையில் அவர்களுக்கு உரிய பாராட்டை தி.மு.க. அரசு கொடுக்கவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யவேண்டும் என மாணவர்களையும் பெற்றோர்களையும் தி.மு.க. குழப்பி கொண்டிருந்தனர். சாதனை படைத்த மாணவர்களை பாராட்ட வேண்டியது அவர்களின் கடமை.
பா.ஜ.க. மத்தியில் 9 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. மீண்டும் பா.ஜ.க. பாராளுமன்ற தேர்தலில் வெல்ல வேண்டும்.வெல்ல வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கொரோனா காலத்தில் பொருளாதாரத்தை சிறப்பாக கையாண்டது, தடுப்பூசி தயாரித்து பிற நாடுகளுக்கு வழங்கியது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவை வளர்ச்சி பாதையில் பா.ஜ.க. அரசு கொண்டு செல்கிறது. இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் பொருளாதாரத்தில் பின்னோக்கி சென்று கொண்டிருந்தாலும் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்த நிலையில் உள்ளது. சாராயம், கள்ள சாராயம், போதை பொருட்களை நிறுத்த முடியாத செயல் இழந்த அரசாக அரசு உள்ளது.
அமைச்சர் ஊழல் செய்ததற்கு ஆதாரங்கள் இருந்த நிலையில் அமலாக்கத்துறை கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவரை தியாகியாக சித்தரித்து நிரபராதியாக்க தி.மு.க. அரசு முயல்கிறது வேதனையாக உள்ளது. அவரை மீண்டும் இலாக்கா இல்லாத அமைச்சராக்க இந்த அரசு முயல்கிறது.
இதனை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மீண்டும் அவரை அமைச்சராக்க அரசு செயல்படுகிறது. இது விருப்பதகாதது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு குற்றவாளியை காப்பாற்ற முயல்கிறது . இதனை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்
அ.தி.மு.க-பி.ஜே.பி., த.மா.கா. மற்றும் பிற கட்சிகள் மக்கள் விரும்பும் கூட்டணியாக செயல்படுகிறது. திமுக கூட்டணியை எதிர்க்கும் கூட்டணியாக எங்கள் கூட்டணி உள்ளது. இந்த முறை பி.ஜே.பி. 3-வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி. பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் எந்த தொகுதியில் நின்றாலும் அவர் வெற்றி பெறுவார்.
நடிகர் விஜய் கல்வித் துறையில் மாணவர்களுக்கு பயன் தரக்கூடியதை செய்வது பாராட்டக்குறியது. வரவேற்கக் கூடியது.அவர் சொல்லும் நல்ல கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழக ஆளுநர் சாதாரண மக்கள் நிலையை பிரதிபலித்து வருகிறார்.
கீழ்பவானி வாய்க்காலில் காங்கிரீட் தளம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு சுமுகமான முடிவு எடுக்க வேண்டும். அதற்காக இருதரப்பு விவசாயிகளை அழைத்தும் வல்லுநர் கருத்தை கேட்டு அவருக்கு விளக்கம் அளிக்க வேண்டும், இது அரசியல் சார்ந்த விஷயம் அல்ல. தமிழக அரசு நல்ல தீர்வு காண வேண்டும்.
இதேப்போல் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சம்பவத்தன்று அருண்பிரகாஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
- அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
கிருஷ்ணகிரி மாவட்டம் செண்பதம் புதூர், தோனிகோலை கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி பெருமக்கா. இவர்களுக்கு அம்சவேணி என்ற மகளும், அருண்பிரகாஷ் (23) என்ற மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். அருண்பிரகாசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
அவர் கடந்த 2 வருடமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால் மேடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வந்தார்.
அப்போது அருகே குடியிருக்கும் திருமணமான பெண் ஒருவருடன் அருண்பிரகாசுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் 2 பேரையும் அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று அருண்பிரகாஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு அழைத்து சென்ற னர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழிலேயே அருண் பிரகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அருண்பிரகாஷ் பெற்றோ ருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மகன் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவரது பெற்றோர் அரச்ச லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மகன் சார்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது சாவுக்கு இளம்பெண் மற்றும் அவரது கணவர் மீது சந்தேகம் இருப்பதாக பரபரப்பு புகார் அளித்தனர்.
அதன் பேரில் அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சவுந்தர்யா திடீரென ஆஸ்பத்திரி வளாகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
புதுக்கோட்டை மாவட்டம் மன விடுதி, மேலப்பட்டியைச் சேர்ந்தவர் குழந்தைவேலு. இவரது மகள் சவுந்தர்யா (24). இவர் கடந்த இரண்டரை வருடமாக ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து ஆஸ்பத்திரி பின்பகுதியில் தங்கி வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சவுந்தர்யா திடீரென ஆஸ்பத்திரி வளாகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சவுந்தர்யா உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சவுந்தர்யா தற்கொலை செய்வதற்கு முன்பு யாரிடமோ செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதாக தெரிய வந்தது.
இந்நிலையில் புதுக்கோட்டையில் இருந்து சவுந்தர்யா பெற்றோர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தனர். மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது அவர்கள் தங்கள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து மயங்கினார்.
- உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியை சேர்ந்த வர் சாமிநாதன் (68). இவரது மனைவி கண்ணம்மாள் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி லண்டனில் வசித்து வருகிறார்.
இவர்களது மகன் செல்வக்குமார் (43). இவரை பெருந்துறையில் உள்ள தனியார் மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். கடந்த ஒன்றரை மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை தூங்கி கொண்டிருந்த அவர் திடீரென கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து மயங்கினார்.
உடனடியாக மறுவாழ்வு மையத்தினர் பெற்றோர்க ளுக்கு தகவல் கூறி உடனடியாக வர சொல்லி உறவினர்கள் உதவியுடன் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனை க்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து சென்றனர். அவரது உடலை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழி யிலேயே இறந்து விட்டதாக கூறி அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டத்தில் ரயத்து நிறுத்தப்பட்டது என பதிவு செய்யப்பட்ட மனை இனங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- வருவாய் கிராமம் வாரியாக மனுக்களை பெற உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி பகுதியில் நத்தம், நகர நில அளவை கிராம ஆவணங்களில் 'ரயத்து நிறுத்தப்பட்டது' என பதிவு செய்யப்பட்ட ரயத்து மனை, ரயத்து நஞ்சை, ரயத்து புஞ்சை இனங்களுக்கு விசாரணை மற்றும் ஆவண ங்களின்படி பட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக சிறப்பு முகாம் தாசில்தார் மற்றும் தனி தாசில்தார் தலைமையில் கடந்த 2-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தற்போது 38,025 இனங்கள் நிலுவையில் உள்ளது.
இந்நிலங்களுக்கு விசா ரணை மேற்கொண்டு வரும் 30-ந் தேதி வரை மனுக்கள் பெற முகாம் நடக்கிறது. ஈரோடு கிழக்கு உள் வட்டத்துக்கு மாணிக்க ம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம்,
சூரம்பட்டி நில வருவாய் ஆய்வாளர் அலுவ லகம், காசிபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் வரும் 20-ந் தேதி மற்றும் 27-ந் தேதி முகாம் நடக்கிறது.
ஈரோடு மேற்கு உள் வட்டத்துக்கு வில்லரச ம்பட்டி கிராம நிர்வாக அலுவ லகம், புத்தூர் புதுப்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம், நசியனுார் நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வரும் 21-ந் தேதி மற்றும் 28-ந் தேதி வரையும்,
ஈரோடு வடக்கு உள் வட்டத்துக்கு காளிங்கராயன்பாளையம் நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகம், சர்க்கார் பெரிய அக்ரஹா ரம் கிராம நிர்வாக அலுவ லகத்தில் வரும் 22-ந் தேதி மற்றும் 29-ந் தேதி வரை முகாம் நடக்க உள்ளது.
மொடக்குறிச்சி உள் வட்டத்துக்கு மொடக்குறிச்சி நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகம், எழுமாத்தூர் கிராம நிர்வாக அலுவலகம், நஞ்சை ஊத்துக்குளி கிராம நிர்வாக அலுவலகத்தில் வரும் 20-ந் தேதி மற்றும் 27-ந் தேதி வரையும்,
அவல்பூந்துறை உள் வட்டத்துக்கு அவல்பூந்துறை நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கஸ்பாபேட்டை கிராம நிர்வாக அலுவலகம், புதூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் வரும் 21-ந் தேதி மற்றும் 28-ந் தேதி முகாம் நடக்க உள்ளது.
அரச்சலுார் உள் வட்டத்துக்கு அரச்சலூர் நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம், விளக்கேத்தி, முகாசி அனுமன்பள்ளியில் வரும் 22-ந் தேதி மற்றும் 29-ந் தேதி முகாம் நடக்க உள்ளது.
கொடுமுடி உள் வட்டம் வெங்கம்பூர் கிராம நிர்வாக அலுவலகம், கொடுமுடி நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம், எழுநூத்திமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் வரும் 20-ந் தேதி மற்றும் 27-ந் தேதியும்,
கிளாம்பாடி உள் வட்டத்தில் ஊஞ்சலுார்அகிராம நிர்வாக அலுவலகம், புஞ்சை கொளாநல்லி கிராம நிர்வாக அலுவலகம், புஞ்சை கிளாம்பாடி நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வரும் 21-ந் தேதி மற்றும் 28-ந் தேதி முகாம் நடக்க உள்ளது.
சிவகிரி உள் வட்டம் சிவகிரி நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கொல்லன்கோவில் கிராம நிர்வாக அலுவலகம், அஞ்சூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் வரும் 22-ந் தேதி மற்றும் 29-ந் தேதி,
சென்னிமலை உள் வட்டம் சென்னிமலை நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் 20, 22, 27, 29-ந் தேதியிலும் முகாம் நடக்க உள்ளது.
தவிர சிறப்பு குழுவினராக தாசில்தார், தனி தாசில்தார்கள் நியமிக்கப்பட்டு வருவாய் கிராமம் வாரியாக மனுக்களை பெற உள்ளனர்.
- ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
- தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 6 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோட்டில் இருந்து தினமும் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதே போல் மறுமார்க்கத்தில் இருந்தும் ஈரோட்டுக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
ஈரோட்டில் இருந்து தினமும் காலை 6.25 மணிக்கு புறப்படும் ஈரோடு-ஜோலார் பேட்டை ரெயில் (06412) ஜோலார் பேட்டைக்கு மதியம் 12.10 மணிக்கு சென்றடையும்.
இதேபோல் ஜோலார்பேட்டையில் இருந்து மதியம் 3.10 மணிக்கு புறப்படும் ஜோலார் பேட்டை-சேலம் ரெயில் (06411) ஈரோட்டுக்கு இரவு 7.45 மணிக்கு வந்தடையும்.
இந்த நிலையில் ஜோலார் பேட்டையில் தண்டவாள பராமரிப்பு பணிகள்மேற்கொள்ள இருப்பதால் இரு மார்க்கத்திலும் நாளை 18-ந் தேதி மற்றும் 20, 22, 24,26,28 ஆகிய 6 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
- ஒற்றை காட்டு யானை அந்த பகுயில் இருந்த ஒரு பசு மாட்டை தாக்கியது.
- இதில் அந்த மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் புலி, மான், சிறுத்தை மற்றும் காட்டு யானைகள் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசிக்கின்றன.
இதில் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அருகே உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டு உள்ள வாைழகள் உள்பட பல்வேறு பயிர்களையும் தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.
புஞ்சை புளியம்பட்டி அடுத்த ஆலம்பாளையம் பகுதியில் நாகராஜ் என்பவர் குடி யிருந்து விவசாயம் செய்து வருகிறார். மேலும் பசு மாடுகளை வளர்த்து வரு கிறார்.
இந்நிலையில் அருகே உள்ய வனப்பகுதியில் இருந்து ஒற்றை காட்டு யானை வெளியேறியது. தொடர்ந்து அந்த காட்டு யானை நாகராஜின் தோட்டத்துக்குள் புகுந்தது.
இதையடுத்து அந்த ஒற்றை காட்டு யானை அந்த பகுயில் இருந்த ஒரு பசு மாட்டை தாக்கியது. இதில் அந்த மாடு சம்பவ இடத்திலேயே பரி தாபமாக இறந்தது.
இதை கண்டு அங்கு இருந்த மற்ற மாடுகள் சத்தம் போட்டது. அந்த சதத்தத்தை கேட்டு நாகராஜ் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது ஒற்றை காட்டு யானை அங்கு கட்டி வைக்கப்பட்டு இருந்த பசு மாட்டை தாக்கி மிதித்து கொன்றது தெரிய வந்தது.
இதைக் கண்ட அந்த பகுதி பொதுமக்கள் காட்டு யானையை சத்தம் போட்டு வனப்பகுதிக்குள் விரட்டி னர். இது குறித்து பொது மக்கள் விளாமூண்டி வன துறையினருக்கு தகவல் அளித்தனர்.
வன துறையினர் யானை தாக்கி இறந்த பசு மாட்டை ஆய்வு செய்தனர். யானை தாக்கி உயிரிழந்த பசு மாட்டுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதை தொடர்ந்து கால்நடை மருத்துவர் இறந்த பசு மாட்டினை பிரேத பரிசோதனை செய்தார். அதில் அந்த பசுமாடு கர்ப்பம் தரித்த நிலையில் இருந்தது. அதன் வயிற்றில் இருந்த 2 மாதம் ஆன கன்று குட்டியும் இறந்து இருந்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து உயிரிழந்த பசு மாட்டிற்கு பூஜைகள் செய்து விவசாய விளை நிலத்திலேயே புதை த்தனர். மேலும் பசு மாட்டை காட்டு யானை மிதித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறும் போது, வனப்பகுதியில் இருந்து யானைகள் அடிக்கடி வெளியேறி விளை நிலங்களை சேதப்படுத்துவ துடன் கால்நடைகளையும் அடித்து கொன்று வருகிறது. எனவே அட்டகாசம் செய்யும் யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- 2 ஆயிரம் ஆண்டு கொங்கு பாரம்பரிய கலையான வள்ளி கும்மி கலையை மீட்டெடுக்கும் வகையில் இந்த வள்ளி கும்மி நடனம் நடைபெற்றது.
- ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வள்ளி கும்மி நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுக்கா பூந்துறை கிராமம் சின்னியகவுண்டன் வலசில் ஆசிரியர் வெள்ளநத்தம் சண்முகசுந்தரத்தின் மங்கை வள்ளி கும்மி குழுவின் 64-வது அரங்கேற்ற விழா நடைபெற்றது.
2 ஆயிரம் ஆண்டு கொங்கு பாரம்பரிய கலையான வள்ளி கும்மி கலையை மீட்டெடுக்கும் வகையில் இந்த வள்ளி கும்மி நடனம் நடைபெற்றது. சின்னியகவுண்டன் வலசில் வண்ண விளக்குகள் நடுவே 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஒரே வண்ண உடை அணிந்து நாட்டுப்புற பாடல்கள் பாடி அதற்கு ஏற்ப நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வள்ளி கும்மி நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. மேலும் மங்கை வள்ளி கும்மி குழு கொங்கு பாரம்பரிய கலைகளில் ஒன்றாக கருதப்படுவதால் வள்ளி கும்மி நடனத்தை மீட்டெடுக்கும் வகையில் இந்த விழா வெகு விமரிசயைாக நடைபெற்றது.
- அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பருத்தி மின்னணு ஏல விற்பனை நடக்க உள்ளது.
- இத்தகவலை மாவட்ட வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சாவித்ரி தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு வேளாண் விற்பனை குழு சார்பில் அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வரும் 19-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று பருத்தி மின்னணு ஏல விற்பனை நடக்க உள்ளது.
உள்ளூர், வெளியூர், வெளி மாவட்ட வணிகர்கள் பங்கேற்று, பருத்தியை கொள்முதல் செய்ய உள்ளதால் போட்டி மூலம் அதிக விலை கிடைக்கும்.
வணிகர்களால் கொள்முதல் செய்யப்படும் பருத்திக்குரிய தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக இ-நாம் மூலம் வரவு வைக்கப்படும்.
வெடித்து நன்கு மலர்ந்த பருத்தியை அதிகாலை நேரத்தில் செடியில் இருந்து பறித்து நிழலில் நன்கு உலர்த்தி அதில் கலந்துள்ள இலை சருகுகள், கொட்டு பருத்திகளை நீக்கி, ரகம் வாரியாக தனித்தனியாக பிரித்து, சாக்குகளில் நிரப்பி ஏல விற்பனைக்கு கொண்டு வர வேண்டும்.
இத்தகவலை மாவட்ட வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சாவித்ரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.76 அடியாக உள்ளது.
- அணைக்கு வினாடிக்கு 432 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாத தாலும், தொடர்ந்து பாசனத்தி ற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதாலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் கடந்த 3 நாட்களாக பவானிசாகர் அணைக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.76 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 432 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,105 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32.59 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.21 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.28 அடியாகவும் உள்ளது.
- வீட்டில் ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது.
- கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் அடுத்த அத்தியூர் கேர்மாளம் பகுதியை சேர்ந்த பெரியசாமி (49) என்பவர் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்து பயன்படுத்தி வரு வதாக கடம்பூர் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கடம்பூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவி தலை மையிலான போலீசார் கடம்பூர் அடுத்த அத்தியூர் கேர்மாளம் பகுதிக்கு சென்று பெரியசாமி என்பவரின் வீட்டை சோதனை செய்தனர்.
இதில் சட்ட விரோதமாக வீட்டில் ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து உடனடி யாக கடம்பூர் போலீசார் நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டா வுக்கு பயன்படுத்திய மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தனர். அவரை கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்த னர்.
- ராஜம்மாள் வீட்டின் வெளியே உள்ள காலி இடத்திற்கு சென்று தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டார்.
- சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம், சூரி குட்டை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கரிய கவுண்டர். இவரது மனைவி ராஜம்மாள் (65). இவர்களுக்கு தர்மன் என்ற மகன் உள்ளார். கரிய கவுண்டருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2 வருடமாக கரிய கவுண்டர், ராஜம்மாள் இருவரும் சிக்கரசம்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவரது தோட்டத்தில் குடியிருந்து விவசாய வேலை பார்த்து வந்தனர்.
ஒரு வருடத்திற்கு முன்பு சொத்து தகராறில் அவரது மகன் தர்மன் தாய், தந்தையிடம் கோபித்து கொண்டு சென்று விட்டார். ஒரு வருடமாக பெற்றோரிடம் பேச்சுவார்த்தை இல்லை.
இந்நிலையில் சம்பவத்தன்று வயதான காலத்தில் உடல்நிலை சரியில்லாமல் நாம் தனியாக வாழ்வதைவிட சாவதே மேல் என்று கரிய கவுண்டர், ராஜம்மாள் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் கணவன்-மனைவி இருவரும் தூங்க சென்று விட்டனர்.
அதிகாலை 3 மணி அளவில் எழுந்த ராஜம்மாள் வீட்டில் இருந்த மண்எண்ணை கேனை எடுத்துக் கொண்டு வீட்டின் வெளியே உள்ள காலி இடத்திற்கு சென்று தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டார்.
இதை தோட்டத்தில் வேலை செய்யும் பழனிச்சாமி என்பவர் பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராஜம்மாள் மீது எரிந்த தீயை அணைத்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே ராஜம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






