என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பணம் வாங்கியவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஈரோடு சாஸ்திரி நகர் 3-வது விதியைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா (46) என்பவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

    அப்போது அவர் தான் மறைத்து வைத்திருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பெட்ரோல் பாட்டிலை அவரிடம் இருந்து பிடுங்கி தண்ணீரை எடுத்து அவர் மீது பீய்ச்சி அடித்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது முகமது அலி ஜின்னா கூறியதாவது:-

    எனக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நான் திருப்பூரில் கடந்த 12 வருடமாக கார்மெண்ட்ஸ் நடத்தி வருகிறேன். இந்நிலையில் எனக்கு அறிமுகமான 3 பேர் என்னிடம் துணிகளை வாங்கினர் அதற்கு உண்டான பணம் கொடுக்க வில்லை. மேலும் தொழில் சம்பந்தமாக அவர்கள் என்னிடம் பணம் கேட்டனர். அதில் ஒருவர் 15 லட்சமும், மற்ற 2 பேர் ரூ.3.80 பணமும் தராமல் ஏமாற்றி வந்தனர்.

    பலமுறை அவர்களிடம் பணம் கேட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தேன். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் மனு அனுப்பினேன். ஆனாலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    மேலும் பணம் வாங்கியவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • கள்ளச்சாராயத்தை தடுக்க முதலமைச்சர் ஆலோசனைகள் வழங்கி உள்ளார்.
    • டாஸ்மாக் கடைகளில் தவறு ஏதும் நடக்கவில்லை.

    ஈரோடு:

    ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கள்ளச்சாராயத்தை தடுக்க முதலமைச்சர் ஆலோசனைகள் வழங்கி உள்ளார். அதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பில் இருதரப்பு விவசாயிகளும் சமாதானமாக செல்ல வேண்டும் என்பதே அரசின் நோக்கம். எந்த தரப்பிற்கும் நாங்கள் ஆதரவாக இல்லை. இதில் சட்டத்தை மீறி யார் செயல்பட்டாலும் அது தவறு. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூடுவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். டாஸ்மாக் கடைகளில் தவறு ஏதும் நடக்கவில்லை. டாஸ்மாக் மூலம் அரசுக்கு அதிக வருமானம் கிடைப்பதற்காக இலக்கு நிர்ணயிப்பதில்லை. தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை குறைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் 800 குளங்களுக்கு தண்ணீர் நிரப்பும் சோதனை முடிவடைந்துள்ளது.
    • கீழ்பவானி வாய்க்கால் பராமரிப்பு பணியை அரசியலாக்கக் கூடாது.

    ஈரோடு:

    ஈரோட்டில், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டாஸ்மாக்கில் சில குறைபாடுகள் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து சரி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதுகுறித்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

    எங்கோ ஓரிரு இடங்களில் தெரியாமல் நடந்துள்ள சிறிய பிரச்சினைகளை கூட அரசியல் காரணங்களுக்காக பூதாகரமாக்கி கூறி வருகின்றனர்.

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் 800 குளங்களுக்கு தண்ணீர் நிரப்பும் சோதனை முடிவடைந்துள்ளது. இந்த திட்டத்தில் முழுமையாக நிலத்தைக் கையகப்படுத்தாமல் அ.தி.மு.க. அரசு விட்டுச் சென்றுவிட்டது. அதை தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் விவசாயிகளிடம் பேசி பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.

    சில இடங்களில் பைப்புகள் மற்றும் தண்ணீர் அளவிடும் கருவி திருட்டுப்போய் உள்ளது. பணிகள் முடிவடைந்ததும், காவலர்கள் நியமிக்கப்பட்டு, அத்தகைய திருட்டுகள் நடைபெறாமல் தடுக்கப்படும். அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் அனைத்து பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.

    கீழ்பவானி வாய்க்கால் பராமரிப்பு பணியை அரசியலாக்கக் கூடாது. விவசாயிகளிடம் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து, பழைய கட்டுமான பணிகள் புதுப்பிக்கப்படும். கீழ்பவானி வாய்க்காலின் அடித்தளத்தில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட மாட்டாது என நீர்வளத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

    அதன்படி, பழைய கட்டுமானங்கள் மற்றும் பலவீனமான கரைகள் மட்டுமே புதுப்பிக்கப்படுகின்றன. விவசாயிகள் சில இடங்களில் அவர்களுக்குள்ள பிரச்னைகளைக் கூறும்போது அவற்றை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை இடிக்க பொக்லைன், ஜே.சி.பி. எந்திரத்தை இன்று காலை கொண்டு வந்தார்.
    • முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட சக்தி நகர் என்ற பகுதியில் 25 ஆண்டு காலமாக 13 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    கடந்த 2001-ம் ஆண்டு நத்தம் புறம்போக்கு நிலத்தில் 13 குடும்பத்தினருக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா வழங்கினர். இதைத்தொடர்ந்து 13 குடும்பத்தினரும் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் 13 வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலம் தனக்கு சொந்தமானது என்று கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பொதுமக்கள் தரப்பில் சரியாக ஆஜராகாத நிலையில் தனி நபருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

    இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் வீடுகளை காலி செய்து கொள்ளுமாறு அந்த நபர் பேனர் வைத்தார். ஆனால் பொதுமக்கள் யாரும் வீட்டை காலி செய்யவில்லை.

    இதையடுத்து அந்த நபர் போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை இடிக்க பொக்லைன், ஜே.சி.பி. எந்திரத்தை இன்று காலை கொண்டு வந்தார். காலை 6.40 மணி அளவில் வீடுகளை இடிக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக மின் இணைப்புகள் துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதுபற்றி தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த 13 குடும்பத்தை சேர்ந்தவர்களும் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி. பாலமுருகன், தாசில்தார் உத்திரசாமி, இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • ஒரு ஒற்றை யானை சாலைஓரம் சுற்றி கொண்டு இருந்தது.
    • யானையிடம் செல்பி எடுக்க முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான கார், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருகிறது.

    புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள சாலை என்பதால் அடிக்கடி இந்த சாலையை யானை, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையை கடப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. வனவிலங்குகள் சாலையை கடக்கும் போது வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்றும், வனவிலங்குகளை போட்டோ, செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்த நிலையில் சத்தியமங்கலம்-மைசூர் சாலையில் காரப்பள்ளம் என்ற பகுதியில் நேற்று மாலை ஒரு ஒற்றை யானை சாலைஓரம் சுற்றி கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனத்தை இயக்கி அந்த பகுதியை கடந்து சென்றனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதில் இருந்து இறங்கிய நபர் திடீரென ஒற்றையானையை நோக்கி சென்றார். பின்னர் யானை உடன் சேர்த்து செல்பி எடுக்க முயன்றார். அப்போது திடீரென ஆத்திரம் அடைந்த யானை அந்த நபரை நோக்கி வேகமாக ஓடி வந்தது. இதைப்பார்த்த அந்த நபர் வேகமாக ஓடிவந்து காரில் ஏறி தப்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. யானையிடம் செல்பி எடுக்க முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

    • மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால் மீன்கள் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த வியாபாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
    • இன்று ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டிற்கு வெறும் 5 டன்கள் மீன்கள் மட்டுமே வரத்தாகி இருந்தது.

    ஈரோடு:

    தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் கடந்த 2 மாதமாக இருந்து வந்தது. இந்த காலகட்டத்தில் மீன்களின் வரத்து குறைந்து மீன்கள் விலையும் கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தது.

    ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் இங்கு அதிக அளவில் மீன்கள் வரத்தாகி வருகிறது.

    இந்த மார்க்கெட்டிற்கு பொதுவாக சாதாரண நாட்களில் 15 டன்கள் வரை மீன்கள் வரத்தாகி வந்தது. வார இறுதி நாட்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் தடைக்காலத்தையொட்டி மீன்கள் வரத்து 5 டன்னாக குறைந்தது. இதனால் ஒரு சில மீன்கள் விலையும் உயர்ந்தது.

    இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால் மீன்கள் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த வியாபாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    இன்று ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டிற்கு வெறும் 5 டன்கள் மீன்கள் மட்டுமே வரத்தாகி இருந்தது.

    இன்று சந்தையில் விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:

    அயிலை-300, மத்தி-200, வஞ்சரம்-1200, விளமீன்-500, தேங்காய் பாறை-500, முரல்-450, நண்டு-400, இறால்-550-600, சீலா-450, கவுரி-600, வெள்ளை வாவல்-1000,

    கருப்பு வாவல்-800, பாறை-500, மயில் மீன்-600, பொட்டு நண்டு-450, கிளி மீன்-600, மதன மீன்-500, மஞ்சள் கிளி-300, கடல் விலாங்கு-300.

    • அடையாளம் தெரியாத வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் சம்பத் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்து நால்ரோடு டானா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (42). இவர் பால் சொசைட்டி நடத்தி வருகிறார்.

    இவர் பால் எடுத்து வருவதற்காக நால் ரோட்டில் இருந்து செல்லப்பம்பாளையத்திற்கு கோவை ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது அந்த வழியாக அடையாளம் தெரியாத வந்த வாகனம் அவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சம்பத் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவருக்கு சுகுணா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முதல்-அமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் கே.மேட்டுப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.
    • அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    கோபி:

    தமிழக முதல்-அமைச்ச ரின் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பொம்ம நாயக்கன் பாளை யம் அடுத்த கே.மேட்டு ப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி யில் நடந்தது. இதில் 1062 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    இந்த முகாமில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். முன்னதாக கோபிசெட்டி பாளையம் வட்டார சுகா தார மேற் பார்வையாளர் செல்வன் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். செந்தில்குமார் திட்ட விளக்கவுரையாற்றி னார். பொம்மநாயக்கன் பாளையம் ஊராட்சி முன் னாள் தலைவர் சண்முக த்தரசு முன்னிலை வகித்தார்.

    மாவட்ட ஊராட்சி உறு ப்பினர் சிவகாமி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் துளசிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 67 கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, 127 பேருக்கு ஈசிஜி பரிசோதனை, 56பேரு க்கு கர்ப்பப்பை வாய் புற்று நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    மேலும் 539 பேருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை, 64 பேருக்கு விடிஆர்எல் பரிசோதனை, 890 பேருக்கு சிறுநீரில் உப்பு, சர்க்கரை ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இதில் 5 பேர் கண் அறுவை சிகி ச்சைக்கு அனுப்பி வைக்க ப்பட்டனர். காச நோயால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    முகாமில் அமைக்கப்பட்ட டெங்கு, தொழு நோய், மக்களை தேடி மருத்துவம், காச நோய், எய்ட்ஸ் கட்டுப் பாடு, ஊட்டச்சத்து கண் காட்சியை ஏ.ஜி.வெங்கடா ச்சலம் எம்.எல்.ஏ. பார்வை யிட்டார். சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் கல்பனா 138 பேருக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளித்தார்.

    கூகலூர் ஆரம்ப சுகா தார நிலைய டாக்டர் 124 பேருக்கு பல் சிகிச்சை அளித்தார். பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனை மூலம் காது, மூக்கு, தொண்டை நிபுணர், தோல் டாக்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோபி செட்டிபாளையம் தஷின் மருத்துவ மனை குழுவின ரும், கோபிசெட்டிபாளை யம் எம்.எஸ். மருத்துவ மனை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட த்தின் கீழ் மருத்துவ பரிசோதனை மேற் கொள்ள ப்பட்டது.

    இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற் பார்வை யாளர் செல்வன் தலைமை யில் சுகாதார ஆய்வாளர்கள் சேதுராமன், சுகந்த், வேலு மணி, நவீன்குமார், சிவா, சக்திவேல், கிரண், செவிலி யர்கள் சுலோச்சனா, லதா ராணி உள்பட பலர் செய்திருந்தனர்.

    • நிறுவனங்களை நம்பவைத்து சிம் கார்டுகளை பெற்றுள்ளது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பரிதியை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த சிம்கார்டு விற்கும் முகவர் இளம்பரிதி (33) என்பவர் போலியாக ஆவணம் தயாரித்து சிம் கார்டுகளை விற்பனை செய்வ தாக ஈரோடு சைபர் கிரைம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடை த்தது. இதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசுதா தலைமை யிலான போலீசார் இளம்பரிதியை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் ஆதாயம் அடையும் வகையில், ஒரு சிலரின் புகைப்படத்தை பல்வேறு நபர்களின் அடை யாள ஆவணங்களுக்கு பயன்படுத்தி போலியான ஆவணம் தயார் செய்தும், ஆள்மாறாட்டம் செய்தும் சம்பந்தப்பட்ட தொலை தொடர்பு நிறுவ னங்களுக்கு உண்மையான ஆவணம் போல் ஆன்லைனில் அனுப்பி அந்த நிறுவனங்களை நம்பவைத்து சிம் கார்டுகளை பெற்றுள்ளது தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பரிதியை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த ப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்ப ட்டார்.

    இந்த நிலையில் கைதான இளம்பரிதியிடம் இருந்து போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்ட சிம்கார்டுகளை வாங்கியவர்கள் யார்? யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்ற னர். மேலும் இவர் எத்தனை பேருக்கு போலி ஆவணம் மூலம் சிம்கார்டு கொடுத்து உள்ளார். அந்த சிம்கார்டு பெற்றவர்கள் குற்ற பின்னணி யில் உள்ளவர்களா? என்றும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகர் கூறியதாவது:

    சிம் கார்டுகளை விற்ப னை செய்யு ம் முக வர்கள் இதுபோன்று போலியான ஆவ ணங்களை வைத்து சிம் கார்டுகளை ஆக்டிவேட் செய்து விற்பனை செய்தால் சம்பந்தப்ப ட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ப்படும்.

    சிம் கார்டு வாங்கும்போது பொதுமக்கள் தங்களது பெயரில் உள்ள சிம்கார்டு மட்டும்தான் ஆக்டிவேட் செய்கிறார்களா? என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் ஆன்லைன் மோசடி மூலம் பணம் இழப்பு ஏற்பட்டால் உடனடியாக சைபர் கிராம் உதவி எண் 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரி வித்தால் இழந்த பணத்தை மீட்க அதிக வாய்ப்பு உள்ளது.

    அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து அல்லது தெரியாத செல்போன் எண்ணில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி எந்த விபரங்களையும் அப்டேட் செய்ய வேண்டாம். வங்கிகளில் இருந்து தொலை பேசி மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் எந்த தகவலையும் கேட்க மாட்டார்கள். எனவே பொதுமக்கள் மிகவும் விழிப்பு டன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • ஜீப் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு அந்த வாலிபர் சர்வீஸ் ரோட்டிற்கு வந்து இறந்தது தெரிய வந்தது.
    • விபத்தை ஏற்படுத்திய ஜீப் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள சித்தோடு சேலம்-கோவை பைபாஸ் ரோடு, நொச்சிப்பாளையம் பிரிவு சர்வீஸ் ரோட்டில் உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதனையடுத்து போலீசார் சம்பவயி டத்திற்கு வந்து பார்த்த போது இறந்து கிடந்தது சுமார் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க வட மாநில நபர் என்பதும், அவர் யார்? எந்த ஊரை சேர்ந்த வர் என தெரியவில்லை.

    அதேபோல் அருகிலுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்ததில் அதிகா லை 5 மணியளவில் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்த ஜீப் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு அந்த வாலிபர் சர்வீஸ் ரோட்டிற்கு வந்து இறந்தது தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் இறந்த வட மாநில வாலிபர் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தை ஏற்படுத்திய ஜீப் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆன்லைன் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
    • போலீசார் 2 பேரையும் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

    பவானி:

    பவானி தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவர் தன்னிடம் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகளை வாங்க சொல்லி வற்புறுத்தி வரும் 2 பேர் குறித்து பவானி போலீசாரிடம் புகார் அளித்தார்.

    இதனைத்தொடர்ந்து சம்பவயிடம் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பவானி வர்ணபுரம் பகுதியை சேர்ந்த தனபால் (47) மற்றும் பழனிபுரம் பகுதியை சேர்ந்த குமரேசன் (47) ஆகிய 2 பேரும் ஆன்லைன் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. 

    • அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக செந்தில்குமார் பொறுப்பேற்று கொண்டார்.
    • அவருக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பணி நிறைவு பெற்று சென்றார்.

    அதனைத்தொடர்ந்து அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அம்மாபேட்டை, பவானி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தனர்.

    இந்த நிலையில் கோவை மாவட்டம் காரமடை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இன்று அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று கொண்டார்.

    அவருக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி, தனபால் உள்ளிட்ட போலீசார் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.

    ×