என் மலர்
ஈரோடு
- ஒரு கும்பல் சீட்டாட்டம் விளையாடி கொண்டிருந்தனர்.
- போலீசார் 8 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து சீட்டுகள் மற்றும் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே பணிக்கம்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணிக்கம்பாளையம் பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு ஒரு கும்பல் சீட்டாட்டம் விளையாடி கொண்டிருந்தனர்.
போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தின்.
விசாரணையில் அவர்கள் வட மாநிலத்தை சேர்ந்த சுகுமார் சர்தார் (24), பிரோசெஸ்திரா (24), அருண் காயல் (28), சானு ஹால்டர் (28), சாந்தனு குமார் ஆரி (26), நித்யானந்தா போன்டல் (32), சுகுமார் (25), மந்தும் சர்தர் (30) ஆகிய 8 பேர் என தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் 8 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 52 சீட்டுகள் மற்றும் ரூ.700 ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.
- ஈரோட்டில் போலீஸ் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- திருநங்கைகளுக்கான சுய தொழில் மற்றும் வேலை வாய்ப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஈரோடு:
ஈரோட்டில் டவுன் போலீஸ் சப்- டிவிசனுக்கு உட்பட்ட பகுதிகளில் சமீப நாட்களாக சில திருநங்கை கள் குற்ற செயல்களிலும், சிலா் சட்ட விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருவதும் தொடர்ந்து அதிகரித்தது.
இதனை தடுத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார். இதன்பேரில் ஈரோட்டில் போலீஸ் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமை தாங்கினார். பயிற்சி ஏ.எஸ்.பி. ஷ ஹ்னாஸ் முன்னிலை வகி த்தார். இதில் திருநங்கைகள் சிலர் குற்ற செயல்களிலும், சட்ட விரோத செய ல்களிலும் ஈடுபடுகின்றனர். இனி திருநங்கைகள் குற்ற செயல்களில் ஈடுபட்டால் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அறிவுறுத்தி னா்.
மேலும் தனியார் தொண்டு நிறுவனத்தின் தலைவர் அசோக், ஒருங்கி ணைப்பாளர் சந்தாதேவி ஆகியோர் பங்கேற்று திருநங்கைகளுக்கான சுய தொழில் மற்றும் வேலை வாய்ப்பு குறித்தும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து போலீசார் திருநங்கைகளிடம் அவர்களது கோரிக்கை களை கேட்டறிந்து அவற்றை மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய தீர்வு காண ப்படும் என உறுதியளி த்தனா்.
இந்த கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தெய்வராணி, சண்முகம் மற்றும் திருநங்கைகள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- வேலைக்கு செல்பவர்களும், மாணவர்களும் உரிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை.
- காந்திபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு பகுதியான நாச்சிபாளையம், காந்திநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் பெரும்பாலும் விவசாயக் கூலி தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இதேபோல் நம்பியூர் அரசு பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் பஸ் ஏறுவதற்காக ஒரு கிலோ மீட்டர் தொலைவை கடந்து அய்யன்கோவில் பஸ் நிறுத்தத்திற்கு சென்று அங்கிருந்து நம்பியூருக்கு சென்று வருகின்றனர்.
இதனால் வேலைக்கு செல்பவர்களும், மாணவர்களும் உரிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை. இதனையடுத்து காந்திபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்று செல்ல வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்காக அப்பகுதி மக்கள் பலமுறை நம்பியூர் அரசு போக்குவரத்து பணிமனைக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து மனுக்களும் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள், மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை 9 மணி அளவில் திடீரென சக்தி- நம்பியூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த திடீர் போராட்டத்தால் சாலையின் இருபுறம் வாகனங்கள் நீண்ட தொலைவில் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நம்பியூர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் நம்பியூர் அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் குமரேசன் ஆகியோர் பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகள் உங்கள் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்து காந்தி நகர் பகுதியில் பஸ் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதனை ஏற்று பொதுமக்களும், மாணவர்களும் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் ஒரு மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.
- நீண்ட தூரத்தில் உள்ள இந்த மையத்துக்கு எப்படி குழந்தைகளை அனுப்ப முடியும்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு பேச்சு வார்த்தை நடத்தினர்.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள நிச்சாம் பாளையம் அடுத்த அண்ணா நகர் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் விவசாய கூலி தொழில் செய்து வருகிறார்கள்.
அண்ணாநகர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் இடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் தங்கள் குழந்தைகளை மையத்தில் விட்டு வந்தனர்.
இதைதொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் அண்ணாநகர் பகுதியில் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைத்துக்கு தனி கட்டிடம் கட்டி அதில் அங்கன்வாடி மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் மனு கொடுத்து கோரிக்கை வைத்து வந்தனர்.
மேலும் கிராம சபை கூடங்களிலும் இது குறித்து அவர்கள் வலியுறுத்தி வந்தனர். மேலும் ஊராட்சி மன்ற கூட்டத்திலும் அங்கன்வாடிக்கு சொந்த கட்டி அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 15-ந் தேதி அண்ணாநகர் பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிச்சாம்பாளையம் பகுதிக்கு மாற்றப்பட்டு அங்கு செயல்பட்டு வருகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் அங்கன்வாடி மையம் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை அண்ணாநகர் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் திடீரென அந்த பகுதியில் பந்தல் அமைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்கள், பெண்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, அண்ணாநகர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. தற்போது 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிச்சாம்பாளையத்துக்கு அங்கன்வாடி மையம் மாற்றபட்டு உள்ளது. இதனால் மிகவும் சிரமமாக உள்ளது. நீண்ட தூரத்தில் உள்ள இந்த மையத்துக்கு எப்படி குழந்தைகளை அனுப்ப முடியும். எனவே எங்கள் பகுதிலேயே சொந்த கட்டிடத்தில் அரசு அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டும் என்றனர்.
இது பற்றி தகவல் கிடைத்தும் கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் பெருந்துறை தாசில்தார் பூபதி மற்றும் கோபிசெட்டிபாளையம் டி.எஸ்.பி. பவித்ரா மற்றும் அதிகாரிகள் அந்த பகுதிக்கு போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தி நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
- அணையில் தனியாருக்கு விடப்பட்ட மீன்பிடி ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்தது.
- சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழகத்தின் 2-வது பெரிய அணையாக பவானிசாகர் அணை இருந்து வருகிறது.
அணையில் மிருகால், லோகு, கெண்டை, கெழுத்தி, விலாங்கு, ஜிலேபி உள்பட பல்வேறு வகையான மீன்கள் உள்ளது. அணையில் இருந்து தினமும் சுமார் 1 டன் (1000 கிலோ) மீன்கள் பிடிக்கப்படுகிறது.
இங்கு பிடிக்கப்படும் மீன்கள், ஈரோடு, சத்தியமங்கலம், புளியம்பட்டி, கோபிசெட்டிபாளையம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் கோவை, திருப்பூர், சேலம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பவானிசாகர் அணை மீன்கள் கொண்டு செல்லப்படுகிறது.
அணையின் நீர் தேக்க பகுதியில் மீன் பிடிப்பதற்காக உரிம ஒப்பந்தம் செய்யப்பட்டு மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அணையில் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 622 மீனவர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மீன் பிடி தொழிலாளர்கள் என 1000-க்கும் மேற்பட்டவர்கள் மீன் பிடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அணையில் தனியாருக்கு விடப்பட்ட மீன்பிடி ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து பவானி சாகர் அணையில் மீன் பிடிக்கும் உரிமத்தை மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் பவானிசாகர் அருகே உள்ள வெள்ளாள பாளையத்தில் நடந்தது.
கூட்டத்தில் பவானிசாகர் அணையில் மீன் பிடிக்கும் உரிமத்தை பவானிசாகர் மற்றும் சிறுமுகை மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன் பிடிக்கும் உரிமத்தை வழங்கலாம் என ஐகோர்ட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.
எனவே கோர்ட்டு உத்தரவுப்படி மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன் பிடிக்கும் உரிமத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை தொடர்ந்து பவானிசாகர் அணை பகுதியில் மீன் பிடிக்கும் உரிமத்தை மீனவர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பவானிசாகர் அணை பகுதி மீனவர்கள் தங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை இன்று (செவ்வாயக்கிழமை) தொடங்கினார்கள்.
இதையொட்டி பவானி சாகர் கரையோர பகுதிகள், சுஜில் குட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் படகு, பரிசல்களை கவிழ்த்து போட்டு இருந்தனர்.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். இதனால் பவானிசாகர் நீர் பிடிப்பு பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
- குழந்தைகளை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் இங்கு நேரடியாக வந்து எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இவற்றில் மலையாளி இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய பணியில் ஈடுபட்டு வரும் இம்மக்களுக்கு வருவாய் துறை மூலம் வழங்கப்படும் சாதி சான்றிதழில் இதர வகுப்பினர் (ஓசி) என வழங்கப்படுகிறது.
இதே மலையாள இனத்தை சேர்ந்த மக்கள் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அந்த மாவட்டங்களில் வருவாய் துறை மூலம் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் (எஸ்டி)எனக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் கடம்பூர் மலைப்பகுதியில் வசிக்கும் மலையாளி இன மக்கள் தங்களுக்கு இதர வகுப்பினர் என சாதி சான்றிதழ் வழங்கப்படுவதற்கு பதிலாக தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் என சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரை வழங்கப்படவில்லை. இதற்காக அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் மலையாளி இனத்தை சேர்ந்த மலை கிராம மக்கள் அரசு பணி மற்றும் அரசிடமிருந்து கிடைக்கப்படும் உதவிகள் எதுவும் வராததால் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களுக்கான வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருவதாக கடம்பூர் மலையாளி பழங்குடியின சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில் கடம்பூர் மலைப்பகுதியில் வசிக்கும் மலையாளி இன மக்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி தங்கள் குழந்தைகளை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று காலை கடம்பூர் பஸ் நிலையம் அருகே மிகப்பெரிய அளவில் சாமியான பந்தல் அமைத்து அதில் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என 2000-க்கும் மேற்பட்ட மக்கள் பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் 2 மணி வரை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் பேச்சுவார்த்தை நடத்த எந்த அதிகாரிகளும் முன்வராததால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடம்பூர் பெட்ரோல் பங்க் அருகே சக்தி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோபி ஆர்.டி.ஓ பிரியதர்ஷினி சம்பவ இடத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் இங்கு நேரடியாக வந்து எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினர்.
இதனால் போராட்டம் இரவு வரை தொடர்ந்து நடந்தது. இரவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை. தொடர்ந்து இரவு போராட்டம் நீடித்தது.
இந்நிலையில் நள்ளிரவு 12.30 மணியளவில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கடம்பூருக்கு நேரடியாக வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் எங்களுக்கு தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, இதற்கு முன்பு இருந்த கலெக்டர் ஏற்கனவே இது சம்பந்தமாக ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் அனுப்பி உள்ளார். நானும் உங்கள் கோரிக்கை குறித்து அரசிடம் பேசி அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்.
எனவே உங்கள் போராட்டத்தை உடனடியாக கைவிடுங்கள் என்றார். இதனை ஏற்று பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் 14 மணி நேரம் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
- திருச்செந்தூர் கோவில் சென்று விட்டு திரும்பும் போது விபரீதம் ஏற்பட்டுள்ளது.
- விபத்தில் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (41). இவரது மனைவி நந்தினி வயது (34 ) . இவர்களுக்கு மித்ரா ஸ்ரீ (8) என்ற மகளும், சாய் மகிலன் (5) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கண்ணன் திருச்செந்தூர் செல்வதற்கு வேண்டி ஆம்னி வேனில் தனது மனைவி, மகன், மகள், உறவினர்களான பவானி, அம்மாபேட்டை பாரதி வீதியை சேர்ந்த கந்தசாமி என்பவர் மனைவி சாந்தி (59), சதீஷ்குமார் வயது (31), அவரது மனைவி சவுமியா (வயது 27) ஆகியோருடன் கிளம்பி சென்றார்.
இந்நிலையில் சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்கு வேண்டி ஆம்னி வேனில் திருச்செந்தூரில் இருந்து அம்மாபேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வேனை கண்ணன் ஒட்டி வந்தார்.
இந்நிலையில் இன்று நள்ளிரவு 1.20 மணி அளவில் ஆம்னி வேன் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த கணபதி பாளையம் அருகே உள்ள சின்னம்மாபாளையம் பிரிவில் வந்து கொண்டிருந்த போது திடீரென வேன் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரம் இருந்த புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் அவரது மனைவி நந்தினி, மகள் மித்ரா ஸ்ரீ, மகன் மகிலன், உறவினர் சாந்தி, சதீஷ்குமார், சவுமியா ஆகியோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மலையம்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வந்தது.
விபத்தில் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- நிலை தடுமாறி கீழே விழுந்த என்னை மது பாட்டிலால் எனது வலது கண்ணில் அடித்தனர்.
- சம்பந்தப்பட்ட பார் பொறுப்பாளர் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு ரெயில்வே லோகோ செட் விவேகானந்தர் நகரை சேர்ந்த சந்தோஷ் (34) என்பவர் தனது மனைவி குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறேன். இந்நிலையில் சம்பவத்தன்று நானும், எனது நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து திண்டலில் உள்ள ஒரு தனியார் பாருக்கு சென்றோம்.
மது ஆர்டர் செய்து விட்டு உணவுப் பொருட்களுக்கும் ஆர்டர் கொடுத்தோம். அப்போது உணவை பரிமாறும் பணியாளர் இரவு ரொம்ப நேரமாக ஆகிவிட்டது பணத்தை செலுத்தி விடுங்கள் என்று கூறினார்.
உடனே நான் கடன் அட்டையை பயன்படுத்தி பணத்தை செலுத்தினேன். பின்னர் நாங்கள் அங்கிருந்து கிளம்பும்போது என்னுடைய விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் திடீரென மாயமானது.
இதுகுறித்து பணியாளரிடம் கேட்டபோது, அவர் டிப்ஸ் பணம் கொடுங்கள் சார் போனை கண்டுபிடித்து தருகிறேன் என்றார். அதற்கு நான் பணம் தன்னிடம் இல்லை கடன் அட்டை பயன்படுத்தி தான் பில்லை செலுத்தியுள்ளேன் என்றேன்.
அப்போது அந்த பணியாளர் தரை குறைவாக பேசினார். இதுகுறித்து தனியார் பாரின் பொறுப்பாளரிடம் தகவல் தெரிவித்தேன்.
அவர் உடனடியாக அங்குள்ள பணியாளர்களை வைத்து என்னையும் எனது நண்பர்களையும் தாக்க சொன்னார். அவர்களும் மது பாட்டில்களால் என்னையும் எனது நண்பர்களையும் தாக்கினர்.
இதில் எனது மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த என்னை மது பாட்டிலால் எனது வலது கண்ணில் அடித்தனர். இதில் என்னுடைய வலது கண் பார்வை முற்றிலும் பறிபோனது. இடது கண்ணிலும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது.
இதனால் நான் வேலைக்கு செல்ல முடியாமல் என் வாழ்வாதாரம் கேள்விக்குறி யாகி உள்ளது.
இதுகுறித்து போலீஸிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. மேலும் சம்பந்தப்பட்ட பார் பொறுப்பா ளர்கள் பணியாளர்கள் என்னை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட பார் பொறுப்பாளர் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் எனது இரண்டு குழந்தைகளையும் கருணை கொலை செய்து விட்டு நானும் எனது மனைவியும் தற்கொலை செய்து கொள்வோம் இதைத் தவிர வேறு வழி இல்லை.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- இன்று காலை நில வரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.43 அடியாக உள்ளது.
- அணைக்கு வினாடிக்கு 236 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததா லும், தொடர்ந்து பாசனத்தி ற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதாலும் பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. அதே நேரம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நில வரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.43 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 236 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடியும், காளி ங்கராயன் பாசனத்திற்கு 100 கனடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனடியும், கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,105 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதே போல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 32.53 அடியா கவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.08 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.15 அடியாகவும் உள்ளது.
- ஜன்னல் வழியே பார்த்த போது சுந்தர்ராஜ் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிரு ப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சுந்தர் ராஜ் (46). துணி வியாபாரி. கடந்த ஒரு வாரத்துக்கு முன் ஈரோடு வந்து நேரு வீதியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.
நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவரது அறை திறக்கப்ப டவில்லை. அறையை தூய்மைபடுத்தும் தொழிலா ளர்கள் நீண்ட நேரம் கதவை தட்டி பார்த்தனர்.
பின்னர் ஜன்னல் வழியே பார்த்த போது சுந்தர்ராஜ் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிரு ப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக லாட்ஜ் நிர்வாகத்தினர் இது குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
டவுன் போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர்.
சுந்தர்ராஜன் எந்த காரணத்துக்காக தற்கொலை செய்து கொ ண்டார் என தெரியவில்லை. இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விவசாயிகளின் விலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்ப னை நடைபெறும்.
- தற்போதுமுதல் பட்டம் மாசி மாதத்தில் பருத்தி வரத்து இருந்து வந்தது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அத்தாணி சாலை வாரச்சந்தை எதி ர்ப்புறம், அமைந்துள்ளது.
இதில் விவசாயிகளின் விலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்ப னை நடைபெறும். அந்த வகையில் தற்போதுமுதல் பட்டம் மாசி மாதத்தில் பருத்தி வரத்து இருந்து வந்தது.
தற்போது இரண்டாம் பட்டம் பருத்தி வரத்து அந்தியூர், தவிட்டு ப்பாளையம், வெள்ளிய ம்பாளையம், வட்டக்காடு, புதுக்காடு, காந்திநகர், சங்கரா பாளையம், எண்ண மங்கலம், சின்னத்தம்பி பாளையம், பச்சம் பாளையம், கள்ளிமடை குட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்ட பருத்தி வெள்ளி க்கிழமை முதல், திங்கட்கி ழமை வரை ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடத்தில் வைக்க ப்பட்டு அதன் ஏலம் இன்று திங்கட்கிழமை அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணி ப்பாளர் ஞான சேகர், செயலாளர் சாவி த்திரி, ஏ.ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னி லையில் நடை பெற்றது.
இந்த ஏலத்தில் புளியம்பட்டி, அன்னூர், கொங்கணாபுரம், சத்திய மங்கலம், அவிநாசி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதி களில் இருந்து வியா பாரிகள் வந்து பருத்தியின் விளைச்சலுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயித்து வாங்கி சென்றனர்.
- இது குறித்து சத்திய மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.
- 15 மது பாட்டில்கள், ரொக்க பணம் ரூ 3,900 பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கடத்தூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.
அப்போது கோபி அடுத்த அக்கரை கொடி வேரி, காமராஜ் புறம் பகுதியில் ஒரு கடையில் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான ஹான்ஸ் பாக்கெட், விமல் பாக்கு, கூலிப் ஆகியவற்றை விற்பனைக்கு வைத்தி ருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிர மணியம் (50) என்பவரை கைது செய்தனர். கடையில் இருந்து ஒரு கிலோ 266 கிராம் போதைப் பொரு ட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேப்போல் சத்திய மங்கலம் சப்- இன்ஸ்பெ க்டர் விஜயன் சத்தி-புது குய்யனூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தபோது ஒருவர் சந்தேக ப்படும் படி நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார்(23) என்பதும் சட்ட விரோதமாக மது விற்பனை யில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இது குறித்து சத்திய மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மது பாட்டில்கள், ரொக்க பணம் ரூ 3,900 பறிமுதல் செய்யப்பட்டது.






