என் மலர்tooltip icon

    ஈரோடு

    • போராட்டத்திற்கு பல்வேறு விவசாய சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
    • விவசாயிகளின் ஒரு பிரிவினர் வேகமாக கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பெருந்துறை ரோட்டுக்கு வந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் மலர் சாகுபடி செய்து வருகின்றனர்.

    அவர்கள் இணைந்து தமிழ்நாடு மலர்கள் உற்பத்தியாளர்கள் தலைமை சங்கம் என்ற பெயரில் 1999-ம் ஆண்டு சங்கத்தை தொடங்கினர். விவசாயிகளால்- விவசாயிகளுக்காக மலர்கள் சந்தையையும் தொடங்கி 2000-க்கும் மேற்பட்ட மலர் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு சங்கம் இயங்கி வருகிறது.

    கடந்த 2013-ம் ஆண்டு சங்கத்தில் நிர்வாகம் சரியில்லை என்றும், முறைகேடுகள் நடைபெற்று வருகிறது என்று பிரச்சினைகளை கிளப்பி இறுதியாக தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டு 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாக்களித்து தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாக குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர்.

    ஆண்டுதோறும் பொதுக்குழு, செயற்குழுவை நடத்துவது எனவும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வைத்து நிர்வாகிகளை தேர்வு செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் சங்கத்தின் சார்பில் வங்கி கணக்கு தொடங்கி வரவு செலவு செய்யாமல் தனிப்பட்ட முறையில் வங்கி கணக்கு தொடங்கி வரவு செலவு செய்து அதற்கு முறையாக கணக்கை செயற்குழு, பொதுக்குழுவில் தாக்கல் செய்யாமலும், சங்கங்களின் பதிவாளர் முன்பும் தாக்கல் செய்யாமலும், மிகப்பெரிய அளவில் மோசடி செய்துள்ளனர்.

    இவற்றையெல்லாம் மறைப்பதற்காக கடந்த 2016-ம் ஆண்டு 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சொந்தமான சங்கத்தின் சொத்துக்களான வியாபாரம், சுங்க பணம் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும், 32 பேரை மட்டும் கொண்டு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கம் என்கிற சங்கத்தை புதிதாக தொடங்கி மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து பல்வேறு சமயங்களில் கேள்வி கேட்ட விவசாயிகளை சந்தையில் பூ விற்க விடாமல் புறக்கணிப்பு செய்து மிக பெரிய மோசடி செய்துள்ளனர்.

    இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையிலும், வருவாய்த்துறையிலும் உரிய வகையில் புகார் கொடுக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    மேலும் சங்கங்களின் பதிவாளரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சொந்தமான சொத்துக்களோடு, சுங்க பணத்தோடு இயங்கி வரும் சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தில் அனைத்து விவசாயிகளையும் உறுப்பினராக சேர்த்து தேர்தல் நடத்த கோரியும், நடைபெற்ற ஊழல், மோசடி குறித்து ஆதாரத்தோடு கொடுக்கப்பட்ட புகாரின் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

    இந்த போராட்டத்திற்கு பல்வேறு விவசாய சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். ஆனால் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. எனினும் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.

    இதனால் இன்று காலை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை ஈரோடு சம்பத் நகரில் உள்ள கொங்கு கலையரங்கம் முன்பு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் குடும்பத்துடன் வர தொடங்கினர். பின்னர் அவர்கள் ஒன்று சேர்ந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.

    அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே விவசாயிகளின் ஒரு பிரிவினர் வேகமாக கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பெருந்துறை ரோட்டுக்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர்களும் பெருந்துறை ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து கலெக்டர் அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் கொங்கு கலையரங்கம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 280-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டு அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதனால் இன்று காலை கலெக்டர் அலுவலகம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • மீன்பிடி தொழிலில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைப்பார்த்து வருகிறார்கள்.
    • கடந்த 2 நாட்களாக போராட்டம் காரணமாக மீன்கள் பிடிக்கவில்லை.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையில் ஏராளமான மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மீன்கள் மீன்வளத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டு வருகிறது.

    மீன்பிடி தொழிலில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைப்பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் தனியார் ஒப்பந்த காலம் நேற்று முன்தினம் முடிவடைந்ததது. இதையடுத்து மீன் பிடிக்கும் உரிமையை தங்களுக்கு வழங்க கோரி மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மீனவர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தம் தொடங்கினர். இன்று 2-வது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது.

    பவானி சாகர் அணையில் இருந்து பிடிக்கப்படும் மீன்கள் ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தினமும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக போராட்டம் காரணமாக மீன்கள் பிடிக்கவில்லை. எனவே மீன் விலை உயரும் நிலை உருவாகி இருக்கிறது. மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லாததால் நீர்பிடிப்பு பகுதிகளில் கரையோரம் பரிசல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

    • மொடக்குறச்சி, கொடுமுடி, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
    • மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

    சென்னிமலை:

    அக்னி நட்சத்திரம் முடிந்தும் ஈரோடு மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதே போல் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அனல் காற்று வீசியது. சென்னிமலை பகுதியில் நேற்று மாலை திடீரென வெயில் குறைந்த வானில் கருமேங்கள் திரண்டு காணப்பட்டது. பின்னர் மாலை 5 மணியளவில் திடீரென இடியுடன் கனமழை கொட்டியது. சுமார் 1 மணி நேரம் இடைவிடாமல் மழை கொட்டியது.

    இதே போல் மொடக்குறச்சி, கொடுமுடி, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. ஈரோடு மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    தாளவாடி-2.40, கொடுமுடி-3.20, மொடக்குறிச்சி-15.20, சென்னிமலை-22.

    • வெளியே சென்ற பாலகிருஷ்ணன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
    • பள்ளத்தில் நீரில் மூழ்கி பாலகிருஷ்ணன் இறந்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் அறிய சாந்தி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பால கிருஷ்ணன்(39). இவரது மனைவி அந்தோணி அம்மாள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    தவிட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மில்லில் பாலகிருஷ்ணன் வேலை பார்த்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி மது அருந்தி மீன் பிடிக்க செல்வது வழக்கம். அதேப்போல் சம்பவத்தன்று வெளியே சென்ற பால கிருஷ்ணன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் ஆர்.வி.எஸ்.நகர் அருகே மந்தக்காடு பகுதியில் உள்ள பள்ளத்தில் நீரில் மூழ்கி பாலகிருஷ்ணன் இறந்தது தெரிய வந்தது.

    அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று கூடிய சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் அறவே வரவில்லை.
    • இதனால் ஜவுளி சந்தை ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் கனி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரச்சந்தை, தினசரி கடைகள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இங்கு நடைபெறும் வாரச்சந்தை உலக புகழ்பெற்றது. திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறுகிறது.

    விடிய விடிய நடை பெறும் இந்த ஜவுளி சந்தை யில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, நேபாளம் போன்ற மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் வந்து மொத்த விலையில் ஜவுளிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.

    இதேபோல் பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஆன்லைன் மூலம் ஆர்டரின் பெயரில் ஜவுளி வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதேபோல் உள்ளூர் மாவட்டத்தில் இருந்தும் அதிக அளவில் வியாபாரிகள் வருவார்கள்.

    இந்நிலையில் ஆனி மாதம் பிறந்ததையொட்டி கடந்த சில நாட்களாகவே ஜவுளி வியாபாரம் மந்த நிலையில் இருந்து வருகிறது. இந்த மாதத்தில் எந்த ஒரு விசேஷமும் இருக்காது என்பதால் விசேஷம் தொடர்பான வியாபாரமும் சூடு பிடிக்கவில்லை.

    இந்நிலையில் இன்று கூடிய சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் அறவே வரவில்லை. இதனால் ஜவுளி சந்தை ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் அதே சமயம் உள்ளூர் வியாபாரிகள் ஒரு சிலர் வந்திருந்தனர். இன்று மொத்த வியாபாரம் 15 சதவீதம் மட்டுமே நடை பெற்றது. சில்லரை வியாபாரம் 20 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரி கள் தெரிவித்தனர்.

    இந்த மாதம் முழுவதும் ஜவுளி வியாபாரம் மந்த நிலையில் இருக்கும் என வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். ஆடி மாதம் பிறந்தால் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கிவிடும் என்று நம்பிக்கை தெரிவித்த னர். 

    • ஈரோடு மாவட்ட அணை பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
    • இந்த திடீர் மழையால் ஈரோடு புறநகர் மாவட்ட பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்து சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்தது. அக்னி நட்சத்திர வெயில் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று வெயிலின் தாக்கம் குறைந்து கரும் மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. மாலை முதல் இரவு வரை ஈரோடு மாவட்ட அணை பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடிவேரி அணை பகுதியில் 22 மி.மீ மழை பதிவாகி இருந்தது.

    இதேப்போல் நம்பியூர், எலந்த குட்டைமேடு, பவானிசாகர், சத்திய மங்கலம், வரட்டுப்பள்ளம், குண்டேரி பள்ளம் போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    எதிர்பாராத வகையில் பெய்த இந்த திடீர் மழையால் ஈரோடு புறநகர் மாவட்ட பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    கொடிவேரி அணை-22, நம்பியூர், எலந்த குட்டை மேடு-18, பவானிசாகர்-16.40, சத்தியமங்கலம்-15, குண்டேரி பள்ளம் அணை-11.60, வரட்டுப்பள்ளம் அணை-10.80, தாளவாடி-1.50.

    • தொட்டிமடவு பள்ளம் பகுதியில் கள்ள சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • பிளாஸ்டிக் குடங்களில் சுமார் 20 லிட்டர் சாராய ஊரல் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் ஒருங்கிணைந்து அனுமதியின்றி மது விற்பனை, கள்ள சாராய விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியிலும் சோதனைகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது முடிக்கடவு அருகே தொட்டிமடவு பள்ளம் பகுதியில் கள்ள சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது அனுமதியின்றி சட்ட விரோதமாக 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 பிளாஸ்டிக் குடங்களில் சுமார் 20 லிட்டர் சாராய ஊரல் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக அதே பகுதி சேர்ந்த மகேந்திரன் (58), ரங்கா (57) ஆகியோர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். 20 லிட்டர் சாராய ஊரல் கைப்பற்றப்பட்டு அவை கொட்டி அழிக்கப்பட்டது.

    • கழிவுகளை ஏற்றி கொண்டு ஒரு லாரி அத்தாணி பகுதியில் சென்று கொண்டு இருந்தது.
    • இதையடுத்து பொதுமக்கள் அந்த லாரியை சிறை பிடித்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி செம்புளிசாம் பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு நார் மில் இயங்கி வருகிறது.

    இந்த நிறுவனத்தில் இருந்து வெளியாகும் கழிவுகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி அத்தாணி பகுதியில் சென்று கொண்டு இருந்தது.

    இந்த நிறுவத்தில் இருந்து உற்பத்தியாகும் தென்னை நார் கழிவுகளை சாலை ஓரங்களிலும், பட்டா நிலங்களிலும், ஓடைக ளிலும் கொட்ட ப்படுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் அந்த லாரியை சிறை பிடித்தனர்.

    தென்னை நார் கழிவுகளை சாலையின் ஓரங்களிலும், நிலங்க ளிலும், ஓடைகளிலும் கொட்டு வதால் நிலத்தடி நீர் மாசுபடுகின்றது.

    மேலும் குடிநீர் ஆதாரங்கள் மாசடை கின்றன. நாற்கழிவுகளின் துகள்கள் காற்றில் பறந்து காற்று மாசுபடுகின்றன என்று கூறி பாரப் புளிமேடு, செம்புளிசாம் பாளையம் பகுதியை சேர்ந்த பொது மக்கள் தென்னை நார் கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை சிறை பிடித்தனர்.

    இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் பானு ரேகா, நில வருவாய் ஆய்வாளர் பெரியசாமி, அத்தாணி பேரூராட்சி அலுவலர் பூபதி ராஜா, ஆகியோர் பொது மக்களி டத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இனி இதுபோல் கழிவுகளை ஏற்றி வந்து கொட்டினால் அந்த நிறுவ னத்தின் மீதும் வாகனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க ப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைய டுத்து பொதுமக்கள் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர். 

    • யானைகள் அங்கு வைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை இடித்து தள்ளி சேதப்படுத்தியது.
    • இதனால் அந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே வனப்பகுதியை ஒட்டி உள்ள அண்ணா நகர், இரட்டை சாலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. இப்பகுதியில் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை வீட்டு இரண்டு காட்டு யானைகள் வெளியேறி பவானிசாகர் சாலைக்கு வந்தது. பின்னர் குப்பை கிடங்கு பகுதிக்கு வந்த யானைகள் அங்கு வைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை இடித்து தள்ளி சேதப்படுத்தியது.

    இதை கண்டதும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் யானைகளை பட்டாசு வெடித்து வன பகுதிக்குள் விரட்டினர். இதனால் அந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது,

    வனத்துறை சார்பில் வெட்டப்பட்ட அகழிகள் ஆழமாக இல்லாமல் மண் மூடி கிடக்கிறது. இதன் காரணமாக யானைகள் ஊருக்குள் சுலபமாக புகுந்து விடுகின்றன.

    பயிர்களையும் சேதம் செய்து வருகிறது. எனவே மீண்டும் அகழி வெட்ட வேண்டும். மேலும் அடர்ந்த வனப் பகுதிக்குள் யானைகளை விரட்ட வனத்துறையினர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.29 அடியாக உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 198 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானி சாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதி யாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாத தாலும், தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதாலும் பவானி சாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    அதே நேரம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவ ரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.29 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 198 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடியும், காளி ங்கராயன் பாசனத்திற்கு 100 கனஅடியும்,

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனடியும், கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,105 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 

    • ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழா இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் 4 இடங்களில் நடைபெற உள்ளது.
    • வரும் 24-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை நடக்கிறது.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் வரும் முன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்த கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதல்- அமை ச்சரின் வழிகாட்டுதலின்படி சுகாதாரத்துறை அமை ச்சரின் அறிவுறுத்தலின் படி வரும் 24-ந் தேதி (சனி க்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகம் முழுவதும் 100 இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாம்களில் தாய் சேய் நல மருத்துவம், இருதய நோய், சரக்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் சிகிச்சை, அறுவை சிகிச்சை மருத்துவம், எலும்பு, தோல், கண், பல், காது, மூக்கு தொண்டை சிகிச்சை மருத்து வம், மனநல மருத்துவம், பொது நல மருத்துவம், பெண்நல மருத்துவம், புற்றுநோய் பரிசோதனை மற்றும் பொது மருத்துவம், சித்த மருத்துவம் ஆகியவை களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மேலும் ஸ்கேன் வசதி, செமி ஆட்டோ அனலைசர் மூலம் ரத்தப்பரிசோதனை, ரத்தம், சர்க்கரை, கொழுப்பு, மலேரியா பரிசோதனை, அல்ட்ராசோனோ கிராம், கண்புரை ஆய்வு, கர்ப்ப ப்பை வாய் புற்று நோய் பரிசோதனை ஆகிய பிரிவுகள் செயல்பட்டு மேல்சிகி ச்சைக்காக பரி ந்துரை செய்யப்பட உள்ளது.

    மேல்சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் முதல்- அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின்கீழ் இலவசமாக செய்யப்படும். காப்பீட்டு திட்ட பழைய அட்டை உள்ளவர்கள் புதுப்பித்து மாற்றிக் கொள்ளவும், புதிய அட்டை தேவைப்படு பவர்கள் தங்களது குடும்ப அட்டை ஆண்டு வருமானம் ரூ.1,20,000-க்கு கீழ்வருமா னம் உள்ளவர்கள் கிராம நிர்வாக அலுவலரின் சான்றையும் ஆவணங்களாக எடுத்து வருமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது.

    இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழா இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் 4 இ டங்களில் நடைபெற உள்ளது. முகாம்கள் ஈரோடு ராஜாஜிபுரம் காமராஜர் மேல்நிலைப்பள்ளி, பவானி அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி, கவுந்த ப்பாடி, அந்தியூர் வட்டா ரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி, அந்தியூர், சத்தியமங்கலம் வட்டாரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி, ரங்கசமுத்திரம் பகுதிகளில் வரும் 24-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை நடக்கிறது.

    எனவே ஈரோடு மாவட்ட பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளுக்கு அருகா மையில் நடைபெறும் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை, பரி சோதனையும் செய்து கொள்ளலாம் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    • முட்டைக்கோஸ் லோடு ஏற்றி வந்த சரக்கு வாக னத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
    • ஆன்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி செல்வது தெரிய வந்தது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதி யில் குட்கா மறறும் போதை பொருட்கள் கடத்திச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் புளியம்பட்டி அடுத்து நால்ரோடு டானா புதூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக முட்டைக்கோஸ் லோடு ஏற்றி வந்த சரக்கு வாக னத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் முட்டைக்கோஸ் மூட்டை க்குள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்ததும் அதை கடத்திச் செல்வது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த போதை பொருட்கள் மற்றும் அதை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகரை சேர்ந்த முபீஸ் (20), தாளவாடி பயஸ் பாஷா (30), சத்திய மங்கலம் சஞ்சய் ராஜ் (30) என்பது தெரிய வந்தது.

    இவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்ஸ் குட்கா உள்ளிட்ட புகை யிலை போதை பொரு ட்களை கர்நாடகா மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிய வந்தது. இந்த போதை பொருட்களின் மதிப்பு 2.50 லட்சம் இருக்கும் என போலீசார் தெரி வித்தனர்.

    இதையடுத்து போதை பொருட்களை கடத்தி வந்த 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை போலீ சார் கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×