பவானிசாகர் அணைக்கு 198 கன அடியாக நீர்வரத்து குறைந்தது

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.29 அடியாக உள்ளது.அணைக்கு வினாடிக்கு 198 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பவானிசாகர் அணைக்கு 198 கன அடியாக நீர்வரத்து குறைந்தது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானி சாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதி யாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாத தாலும், தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதாலும் பவானி சாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.

அதே நேரம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவ ரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.29 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 198 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடியும், காளி ங்கராயன் பாசனத்திற்கு 100 கனஅடியும்,

குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனடியும், கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,105 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com