பணம் வைத்து சூதாடிய 8 வடமாநில வாலிபர்கள் கைது

ஒரு கும்பல் சீட்டாட்டம் விளையாடி கொண்டிருந்தனர்.போலீசார் 8 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து சீட்டுகள் மற்றும் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.
பணம் வைத்து சூதாடிய 8 வடமாநில வாலிபர்கள் கைது
Published on

பெருந்துறை:

பெருந்துறை அருகே பணிக்கம்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணிக்கம்பாளையம் பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு ஒரு கும்பல் சீட்டாட்டம் விளையாடி கொண்டிருந்தனர்.

போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தின்.

விசாரணையில் அவர்கள் வட மாநிலத்தை சேர்ந்த சுகுமார் சர்தார் (24), பிரோசெஸ்திரா (24), அருண் காயல் (28), சானு ஹால்டர் (28), சாந்தனு குமார் ஆரி (26), நித்யானந்தா போன்டல் (32), சுகுமார் (25), மந்தும் சர்தர் (30) ஆகிய 8 பேர் என தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் 8 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 52 சீட்டுகள் மற்றும் ரூ.700 ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com