புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக செந்தில்குமார் பொறுப்பேற்று கொண்டார்.அவருக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.
புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
Published on

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பணி நிறைவு பெற்று சென்றார்.

அதனைத்தொடர்ந்து அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அம்மாபேட்டை, பவானி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தனர்.

இந்த நிலையில் கோவை மாவட்டம் காரமடை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இன்று அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று கொண்டார்.

அவருக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி, தனபால் உள்ளிட்ட போலீசார் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com