ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் வரத்து குறைந்தது

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால் மீன்கள் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த வியாபாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.இன்று ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டிற்கு வெறும் 5 டன்கள் மீன்கள் மட்டுமே வரத்தாகி இருந்தது.
ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் கடல் மீன்கள் விற்பனை நடந்த போது எடுத்த படம்.
ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் கடல் மீன்கள் விற்பனை நடந்த போது எடுத்த படம்.
Published on

ஈரோடு:

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் கடந்த 2 மாதமாக இருந்து வந்தது. இந்த காலகட்டத்தில் மீன்களின் வரத்து குறைந்து மீன்கள் விலையும் கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தது.

ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் இங்கு அதிக அளவில் மீன்கள் வரத்தாகி வருகிறது.

இந்த மார்க்கெட்டிற்கு பொதுவாக சாதாரண நாட்களில் 15 டன்கள் வரை மீன்கள் வரத்தாகி வந்தது. வார இறுதி நாட்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் தடைக்காலத்தையொட்டி மீன்கள் வரத்து 5 டன்னாக குறைந்தது. இதனால் ஒரு சில மீன்கள் விலையும் உயர்ந்தது.

இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால் மீன்கள் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த வியாபாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இன்று ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டிற்கு வெறும் 5 டன்கள் மீன்கள் மட்டுமே வரத்தாகி இருந்தது.

இன்று சந்தையில் விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:

அயிலை-300, மத்தி-200, வஞ்சரம்-1200, விளமீன்-500, தேங்காய் பாறை-500, முரல்-450, நண்டு-400, இறால்-550-600, சீலா-450, கவுரி-600, வெள்ளை வாவல்-1000,

கருப்பு வாவல்-800, பாறை-500, மயில் மீன்-600, பொட்டு நண்டு-450, கிளி மீன்-600, மதன மீன்-500, மஞ்சள் கிளி-300, கடல் விலாங்கு-300.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com