என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elephant also died"

    • ஒற்றை காட்டு யானை அந்த பகுயில் இருந்த ஒரு பசு மாட்டை தாக்கியது.
    • இதில் அந்த மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் புலி, மான், சிறுத்தை மற்றும் காட்டு யானைகள் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசிக்கின்றன.

    இதில் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அருகே உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டு உள்ள வாைழகள் உள்பட பல்வேறு பயிர்களையும் தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.

    புஞ்சை புளியம்பட்டி அடுத்த ஆலம்பாளையம் பகுதியில் நாகராஜ் என்பவர் குடி யிருந்து விவசாயம் செய்து வருகிறார். மேலும் பசு மாடுகளை வளர்த்து வரு கிறார்.

    இந்நிலையில் அருகே உள்ய வனப்பகுதியில் இருந்து ஒற்றை காட்டு யானை வெளியேறியது. தொடர்ந்து அந்த காட்டு யானை நாகராஜின் தோட்டத்துக்குள் புகுந்தது.

    இதையடுத்து அந்த ஒற்றை காட்டு யானை அந்த பகுயில் இருந்த ஒரு பசு மாட்டை தாக்கியது. இதில் அந்த மாடு சம்பவ இடத்திலேயே பரி தாபமாக இறந்தது.

    இதை கண்டு அங்கு இருந்த மற்ற மாடுகள் சத்தம் போட்டது. அந்த சதத்தத்தை கேட்டு நாகராஜ் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது ஒற்றை காட்டு யானை அங்கு கட்டி வைக்கப்பட்டு இருந்த பசு மாட்டை தாக்கி மிதித்து கொன்றது தெரிய வந்தது.

    இதைக் கண்ட அந்த பகுதி பொதுமக்கள் காட்டு யானையை சத்தம் போட்டு வனப்பகுதிக்குள் விரட்டி னர். இது குறித்து பொது மக்கள் விளாமூண்டி வன துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    வன துறையினர் யானை தாக்கி இறந்த பசு மாட்டை ஆய்வு செய்தனர். யானை தாக்கி உயிரிழந்த பசு மாட்டுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    இதை தொடர்ந்து கால்நடை மருத்துவர் இறந்த பசு மாட்டினை பிரேத பரிசோதனை செய்தார். அதில் அந்த பசுமாடு கர்ப்பம் தரித்த நிலையில் இருந்தது. அதன் வயிற்றில் இருந்த 2 மாதம் ஆன கன்று குட்டியும் இறந்து இருந்ததும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து உயிரிழந்த பசு மாட்டிற்கு பூஜைகள் செய்து விவசாய விளை நிலத்திலேயே புதை த்தனர். மேலும் பசு மாட்டை காட்டு யானை மிதித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

    இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறும் போது, வனப்பகுதியில் இருந்து யானைகள் அடிக்கடி வெளியேறி விளை நிலங்களை சேதப்படுத்துவ துடன் கால்நடைகளையும் அடித்து கொன்று வருகிறது. எனவே அட்டகாசம் செய்யும் யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×