என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "canceled for 6 days"

    • ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 6 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இருந்து தினமும் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதே போல் மறுமார்க்கத்தில் இருந்தும் ஈரோட்டுக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    ஈரோட்டில் இருந்து தினமும் காலை 6.25 மணிக்கு புறப்படும் ஈரோடு-ஜோலார் பேட்டை ரெயில் (06412) ஜோலார் பேட்டைக்கு மதியம் 12.10 மணிக்கு சென்றடையும்.

    இதேபோல் ஜோலார்பேட்டையில் இருந்து மதியம் 3.10 மணிக்கு புறப்படும் ஜோலார் பேட்டை-சேலம் ரெயில் (06411) ஈரோட்டுக்கு இரவு 7.45 மணிக்கு வந்தடையும்.

    இந்த நிலையில் ஜோலார் பேட்டையில் தண்டவாள பராமரிப்பு பணிகள்மேற்கொள்ள இருப்பதால் இரு மார்க்கத்திலும் நாளை 18-ந் தேதி மற்றும் 20, 22, 24,26,28 ஆகிய 6 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ×