குளியலறையில் வழுக்கி விழுந்த முதியவர் பலி

அப்புசாமி குளியலறைக்கு சென்ற போது வழுக்கி தவறி கீழே விழுந்தார்.இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
குளியலறையில் வழுக்கி விழுந்த முதியவர் பலி
Published on

ஈரோடு:

ஈரோடு கஸ்பாபேட்டை, செல்லப்பம்பாளையம், மேற்கு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் அப்புசாமி (57). இவரது மகன் சிவன். அப்புசாமி மகனுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 1½ வருடத்திற்கு முன்பு பாறை உடைக்கும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அப்புசாமி விபத்தில் சிக்கி அவரது பார்வை பறிபோனது.

இதனால் அவர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்புசாமி குளியலறைக்கு சென்ற போது வழுக்கி தவறி கீழே விழுந்தார்.

இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சேலம் அரசு குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அப்புசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com