வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

சமையல் அறையில் அய்யப்பன் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருந்தார்.சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு சென்னிமலை ரோடு மணல்மேடு பகுதி யைச் சேர்ந்தவர் அய்யப்பன் (38). அவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அய்யப்பன் கிடைக்கும் வேலைக்கு சென்று வந்து கொண்டி ருந்தார். அவரது மனைவி தறிப்பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் அய்யப்ப னுக்கு குடிப்பழ க்கம் இருந்துள்ளது. குடிப்ப ழக்கத்திற்கு அடிமையாகி சரிவர சாப்பிடாமல், சரியாக வேலைக்கு செல்லா மல் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி யுடன் தகராறில் ஈடுபட்டு ள்ளார். மேலும் தனக்கு தானே கை, கால்களை அறுத்து ரத்த காயத்தை ஏற்படுத்திக் கொண்டு ள்ளார்.

இந்நிலையில் சம்ப வத்தன்று இரவு தனக்கு வாழ பிடிக்கவில்லை எனவும், பேசாமல் செத்து விடலாம் என்றும் அய்யப்பன் கூறியுள்ளார். அப்போது அவருக்கு மனைவி மகன்கள் ஆறுதல் கூறியுள்ளனர். பின்னர் அனைவரும் சாப்பிட்டு தூங்க சென்று விட்டனர்.

நேற்று அதிகாலை வேலைக்கு செல்ல வேண்டி சித்ரா எழுந்தபோது வீட்டில் உள்ள சமையல் அறையில் அய்யப்பன் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் ஆம்புலன்ஸ் மூலம் அய்யப்பனை சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அய்யப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அய்யப்பனின் உடலை பார்த்து அவரது மனைவி, மகன்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

X

Maalai Malar
www.maalaimalar.com