search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The Collector inspects"

    • உருவச் சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படவுள்ள இடத்தினை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட சென்னிமலை- முருங்க த்தொழுவு ரோட்டில் குன்னி மரம் என்ற இடத்தில் சுதந்திர போராட்ட தியாகி குமரனுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் உருவச் சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படவுள்ள இடத்தினை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக கலெக்டர் பெருந்துறை பகுதியில் கூட்டுறவுத்துறையின் கீழ் வேளாண்மை உற்பத்தியா ளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் செயல்ப டும் பசுமை சமையல் எண்ணெய்கள் மற்றும் மங்களம் பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடியினை நேரில் சென்று பார்வையிட்டார்.

    தொடர்ந்து சென்னிமலை யூனியன் அலுவலகத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் மற்றும் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 22 கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்பா ட்டிற்காக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து, சென்னிமலை பேரூராட்சிக் குட்பட்ட வார்டு எண்.5, அம்மாபாளையம், கே.வி.பி.நகர் பகுதியில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப் பட்டுள்ளதையும்,

    முகாசிபிடாரியூர் டி.எம்.எம்.புரம் பகுதியில் மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.1.10 லட்சம் சமுதாய முதலீட்டு நிதியுதவியுடன் கைத்தறி எந்திரம் மூலம் பெட்சீட் உற்பத்தி செய்யும் மையத்தினையும்,

    குமாரவலசு ஊராட்சி, பாலாஜி கார்டன் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2.23 லட்சம் மதிப்பீட்டில் சந்தன மரக்கன்றுகள் நடும் பணியினையும், வெள்ள முத்துக்கவுண்டன் வலசு பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.482.36 கோடி மதிப்பீட்டில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சிகளை சேர்ந்த 434 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக கட்டப்பட்டு வரும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தி னையும் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக பெருந்துறை அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் 623 மதிப்பெண்கள் பெற்ற மாணவன் கமல்நா த்தை கலெக்டர் ராஜகோ பால் சுன்கரா பாராட்டினார்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ச.சந்தோஷினிசந்திரா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், துணைப்பதி வாளர் நர்மதா, சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், செயல் அலுவலர் ராம கிருஷ்ணன், பெருந்துறை தாசில்தார் பூபதி, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சிவகுமார், உதவி திட்ட அலுவலர்கள் சாந்தா, அன்பழகன், சரவணகுமார், சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், பாஸ்கர் பாபு, உதவிபொறியாளர் பிரகாஷ், வட்டார பொறியாளர் ருக்மணி தேவி உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×