search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government welfare schemes"

    • படவல்கால்வாய் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை தீர்ப்பது தான் இம்முகாமின் முக்கிய நோக்கமாக உள்ளது.

    அம்மாபேட்டை:

    பவானி வட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் படவல்கால்வாய் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் இந்திரா காந்தி ஓய்வூதிய திட்டம், கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியம், பட்டா மாறுதல்,புதிய குடும்ப மின்னணு அட்டை வழங்குதல், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட துறைகள் மூலம் 98 பயனாளிகளுக்கு ரூ.64 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் விஜயநிர்மலா சரவணபவா, துணைத் தலைவர் குமரவேல், மாவட்ட கவுன்சிலர்கள் மோகனசு ந்தரம், சதாசிவம், படவல் கால்வாய் ஊராட்சி மன்ற தலைவர் ஆராயி,பூனாச்சி ஊராட்சி மன்ற தலைவர் சின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் பேசுகையில்,

    முகாம் என்பது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இம்மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது.

    மேலும் இம்முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை தீர்ப்பது தான் இம்முகாமின் முக்கிய நோக்கமாக உள்ளது. குறிப்பாக மகளிர் திட்டம் மூலம் பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவது குறித்து பயிற்சிகள் வழங்கப்படு கிறது.

    இந்த முகாமில் அனைத்து துறை அதிகாரி களும் வந்து தங்களது துறை சார்ந்த குறைகளை பொது மக்கள் நிவர்த்தி செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எடுத்துரைத்தனர். இதனை பொதுமக்கள் அந்தந்த காலகட்டத்தில் செய்து கொள்ள வேண்டும் உதார ணமாக ஒரு சாதி சான்று குழந்தைகளுக்கு எடுப்பதாக இருந்தால் கடைசி நேரத்தில்தான் நாம் அதிகாரிகளை அணுகு கிறோம்.

    அதனைத் தவிர்த்து பட்டா மாறுதலாக இருந்தா லும் சரி, வாரிசு சான்றிதழாக இருந்தாலும் சரி அந்தந்த கால தேவைகளை அப்போதே அதிகாரிகளை அணுகி நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

    அரசு வழங்கும் நல திட்டங்களை பொது மக்கள் அந்தந்த கால கட்டத்தில் விழிப்பு ணர்வுடன் தெரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அதற்கான சில உதார ணங்களை நகைச்சுவை உணர்வுடன் பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பேசினார். முன்னதாக காட்டூரில் உள்ள அரசு தொடக்க ப்பள்ளி குழந்தைகளை சந்தித்து கலந்துரையாடி புத்தகங்களை வழங்கினார். பின்னர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி, மாவட்ட அளவிலான அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன் வரவேற்று பேசினார். முடிவில் பவானி தாசில்தார் தியாகராஜன் நன்றி கூறினார். 

    • அரசின் நலத்திட்டங்கள் வழங்குவதில் லஞ்சம் கேட்கும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வசந்தம்கார்த்திக்கேயன் எம்.எல்.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • இந்த விஷயத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கண்காணிப்பில், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மேற்பார்வையில் இலவச நலத்திட்டங்களை வழங்குவதற்கு தகுதி அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்து 100 சதவீதம் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது. இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளிடம் இடைத்தரகர்கள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. ஆளும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த செயலை இத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது. இந்த விஷயத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என முதல்-அமைச்சர் கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார். எனவே இதுபோன்ற தவறுகள் இனியும் தொடர்ந்து நடைபெற்றால் பாதிக்கப்படும் பயனாளிகள் மூலம் போலீஸ் நிலையத்தில் புகார் தரப்பட்டு சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

    ×