என் மலர்
ஈரோடு
- சுமை தூக்கும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் ரூ.200 கோடி மதிப்பிலான பார்சல்கள் தேக்கம் அடைந்துள்ளன.
- ஈரோடு மாநகர பகுதியில் உள்ள மஞ்சள் குடோன் ஜவுளி, குடோன்களில் பொருட்கள் அப்படியே தேங்கி இருக்கின்றன.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி பகுதியில் பார்க் ரோடு, மூல பட்டறை, குப்பைகாடு போன்ற பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட லாரி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த லாரி மூலமாக வெளிமாநிலங்களுக்கு ஜவுளி, மஞ்சள் உள்பட அத்தியாவசிய பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 50 ஆண்டுகளாக இந்த நிறுவனங்களில் அவர்கள் சுமை தூக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஈரோடு கூட்ஸ் ட்ரான்ஸ்போர்ட் அசோசியேசனுடன் அனைத்து தொழிற்சங்கம் நிர்வாகம் ஒப்பந்தம் செய்து மூன்றாண்டுக்கு ஒரு முறை ஒப்பந்தம் கையெழுத்தாகி கூலி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.
கடைசியாக 2016-ம் ஆண்டு முதல் தற்போது வழங்கிக் கொண்டிருக்கும் கூலியிலிருந்து 41 சதவீத கூலி உயர்வு மற்றும் இரவு 8 மணிக்கு மேல் லோடு ஏற்றுவதாக இருந்தால் இரவு சாப்பாட்டுக்கு 75 ரூபாய் வழங்குவதென்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் நிர்வாக தரப்பினர், தொழிலாளர் தரப்பினர் கையெழுத்திட்டு ஒப்பந்தம் தயார் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு சொன்னபடி சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை.
எனவே ஈரோடு கூட்ஸ் ட்ரான்ஸ்போர்ட் அசோசியேசினும் மற்றும் ரெகுலர் லாரி சர்வீஸ் நிறுவனங்களில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 1000 பேர் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சுமை தூக்கும் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் இன்று 2-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
இன்றும் 1000-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் ஈரோடு ஸ்டார் தியேட்டர் அருகே பார்க் ரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈரோடு மாவட்ட அனைத்து சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
சுமை தூக்கும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் ரூ.200 கோடி மதிப்பிலான பார்சல்கள் தேக்கம் அடைந்துள்ளன. ஈரோடு மாநகர பகுதியில் உள்ள மஞ்சள் குடோன் ஜவுளி, குடோன்களில் பொருட்கள் அப்படியே தேங்கி இருக்கின்றன. இதனால் வெளிமாநில ஆர்டர் கொடுத்த வியாபாரிகள் தவித்து வருகின்றனர். உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றது.
- பேச்சு போட்டியில் 86 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றது.
பேச்சுப்போட்டிக்கு முதுகலை தமிழாசிரியர்கள் கலைச்செல்வன், கருப்பு சாமி, பட்டதாரி ஆசிரியர் ஷீலாதேவி ஆகியோர் நடுவர்களாகவும், கட்டுரை போட்டிக்கு முதுகலை தமிழாசிரியர்கள் கந்தசாமி, யுவராணி, காயத்ரி தேவி ஆகியோர் நடுவர்களாகவும் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் ஈரோடு மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் ரெஜினா ள்மேரி ஒருங்கிணை ப்பாளராகச் செயல்பட்டார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டியில் 86 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சி.ஆகாஷ் முதல்பரிசு ரூ.10,000-ம், மீனாட்சி சுந்தரனார் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி மாணவன் மைந்தன்குமார் 2-ம் பரிசு ரூ.7,000-ம், கலைமகள் கல்வி நிலையம் பெண்கள் மேல்நிலை ப்பள்ளி மாணவி நித்யாஸ்ரீ 3-ம் பரிசு ரூ.5,000-ம் பெற்றனர்.
பள்ளி மாணவ, மாணவி களுக்கான கட்டுரை போட்டியில் 91 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ர.விஷால் முதல்பரிசு ரூ.10,000-ம், சென்னிமலை, கொமரப்பா செங்குந்தர் மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவி மோனிஷா 2-ம் பரிசு ரூ.7,000-ம், பட்டிமணி யக்காரன் பாளையம் அரசு மாதிரிப்பள்ளி மாணவி லோ.ச.அம்பிகா 3-ம் பரிசு ரூ.5,000-ம் பெற்றுள்ளனர்.
- மேம்பாலங்கள் போல் தற்காலிக நடைபாதை அமைத்து கடைகளை நடத்தி வருகின்றார்கள்.
- சந்தைக்கு பொருட்கள் வாங்க வந்த மூதாட்டி ஒருவர் தடுமாறி கீழே விழுந்தார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தையில் திங்கட்கிழமை தோறும் காய்கறி சந்தை, மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகள் விற்பனை நடைபெறும். இதனை வாங்குவதற்கு அந்தியூர் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்து செல்வார்கள்.
இந்த நிலையில் அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் இருந்து வாரச் சந்தை வளாகம் எல்லை வரை மழைநீர் வடிகால் பணி நடக்க பள்ளங்கள் தோண்டப்பட்டு அப்படியே போடப்பட்டு ள்ளது.
இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் ஆங்காங்கே கடை வைத்திருப்பவர்கள் மேம்பாலங்கள் போல் தற்காலிக நடைபாதை அமைத்து கடைகளை நடத்தி வருகின்றார்கள்.
இதேபோல் வாரச்சந்தை வளாகத்தில் நுழைவதற்கும் நுழைவாயிலில் தற்காலிக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடக்க முடியாமல் சந்தைக்கு வரும் வயதான பெண்கள் தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் சந்தைக்கு பொருட்கள் வாங்க வந்த மூதாட்டி ஒருவர் தடுமாறி கீழே விழுந்தார்.
எனவே அரசு உடனடியாக இந்த பகுதிக்கு விரைவில் மழை நீர் வடிகால் அமைத்து தரவேண்டும் என்று அந்தியூர் பகுதி பொது மக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையை சுத்தம் செய்து தாய்மார்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வந்தனர்.
- தேங்கி கிடந்த குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்து கொடுத்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பஸ் நிலையத்தில் தாய்மார்க ளுக்காக திறக்கப்பட்ட பாலூட்டும் அறை பயன்பா ட்டில் இல்லாமல் சில மாதங்களாக பூட்டியே கிடந்தது.
எனவே பஸ் நிலையத்தில் உள்ள குழந்தைகளுக்கான பாலூட்டும் அறையை உடனடியாக சரி செய்து தாய்மார்களின் பயன் பாட்டிற்காக கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இது தொடர்பான செய்தி கடந்த ஒரு வாரத்தி ற்கு முன்பு மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.
அதைத்தொடர்ந்து செய்தி எதிரொலியாக உடனடியாக நகராட்சி அதிகாரிகள் பஸ் நிலையம் வந்து குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையை சுத்தம் செய்து தாய்மார்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வந்தனர்.
தொடர்ந்து நகராட்சிக்கு ட்பட்ட தினசரி மார்க்கெட் மற்றும் பல பகுதிகளில் தேங்கி கிடந்த குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்து கொடுத்தனர்.
இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் மற்றும் மேலாளர் உள்ளிட்ட அதிகாரி களுக்கு சமூக ஆர்வல ர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு களை தெரிவித்து வருகின்ற னர்.
- குள்ளம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது என்று மின்செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு:
குள்ளம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஏ.ஜி.பாளையம், கல்லாகுளம், லட்சுமிவேல் மில் மற்றும் பொன்முடி மின் பாதைகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
அதனால் ஆயிகவுண்டன் பாளையம், பொன்முடி, குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், காத்தாமடை புதூர், கல்லாகுளம், பட்டகாரன் பாளையம், கோபி கவுண்டன்பாளையம்,
பொன்முடி காலனி, வெள்ளியம் பாளையம் புதூர், மேட்டுப்பாளையம், சாவடிப் பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது என்று மின்செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.
- 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- பின்னர் போலீசார் கைதான 3 பேரையும் பெருந்துறை கிளை சிறையில்அடைத்தனர்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள சென்னிமலை சாலை விக்னேஷ் நகரை சேர்ந்தவர் சேகர். இவர் திருப்பூரில் சொந்தமாக நூல் நிறுவனம் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்று விட்டார். அப்போது நள்ளிரவில் இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு இருந்த பீரோவில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.1.30 லட்சம் பணத்தை திருடி சென்றனர்.
இதே போல் பக்கத்து வீட்டை சேர்ந்த துர்க்கை ராஜ்-மீனாட்சி ஆகியோரும் வெளியூர் சென்று இருந்தனர். அப்போது அவர்களது வீட்டிற்குள்ளும் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை திருடி சென்றனர்.
இது குறித்து தெரியவந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.அப்போது 2 மர்ம நபர்கள் முகத்தை மறைத்தப்படி வீட்டிற்குள் புகுந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் பெருந்துறையில் இருந்து வெள்ளோடு செல்லும் சாலையில் பெருந்துறை போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் பேசினர்.
தொடர்ந்து போலீசாரின் தீவிர விசாரணையில் அவர்கள் பெருந்துறை மற்றும் காஞ்சிக்கோவில் பகுதியில் தொடர் திருட்டு மற்றும் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டதும், நூல் கம்பெனி உரிமையாளர் சேகர், துர்க்கை ராஜ்-மீனாட்சி ஆகியோர் வீட்டில் நடந்த திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் திருவாரூரை சேர்ந்த சதீஷ், தூத்துக்குடியை சேர்ந்த இசக்கிதுரை, நெல்லையை சேர்ந்த சுபாஷ் என்று தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் இவர்களது கூட்டாளிகள் நெல்லையை சேர்ந்த விக்னேஷ், திருவண்ணாமலையை சேர்ந்த ராமஜெயம் ஆகிய 2 பேர் ஏற்கனவே வேறு ஒரு திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர். பின்னர் போலீசார் கைதான 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெருந்துறை கிளை சிறை யில்அடைத்தனர்.
- கோபத்தில் அவசரப்பட்டு பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டதாக கூறினார்.
- வீட்டில் பொன்னுசாமி தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு உறவின ர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (28). இவரது மனைவி செல்லாயம்மாள்(23). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
ஸ்ரீதர் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். ஸ்ரீதருக்கு மது அருந்து பழக்கம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.
ஸ்ரீதரின் பெற்றோர் இக்கரை தத்தப்பள்ளியில் வசித்து வருகின்றனர். அவர்களை பார்ப்பதற்காக ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி சென்றுள்ளனர்.
பெற்றோர் வீட்டில் வைத்தும் ஸ்ரீதர் மது குடித்து உள்ளார். இதனால் கோப மடைந்த அவரது மனைவி கோவில் விசேஷத்திற்காக வந்த இடத்தில் மது அருந்தி வந்துள்ளீர்களே என்று கேட்டுள்ளார்.
இதனால் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு ஸ்ரீதர் வெளியே சென்று விட்டார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு மது போதையில் வந்துள்ளார்.
அப்போது ஸ்ரீதர் வாந்தி எடுத்துள்ளார். இது குறித்து அவரது மனைவி கேட்டபோது உன்னிடம் தகராறு செய்து விட்டு கோபத்தில் அவசர ப்பட்டு பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டதாக கூறினார்.
இதைக்கேட்ட அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு சிகி ச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் ஸ்ரீதர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கங்கம்பாளையம் வண்ணக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (60). இவரது மனைவி ஜனகரத்தினம். கணவன்-மனைவி இருவரும் விவசாய கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் பொன்னு சாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று பொன்னுசாமியின் மனைவி உறவினர் வீட்டுக்கு சென்று வந்தார்.
அப்போது மனைவியை பொன்னுசாமி யாரை கேட்டு ஊருக்கு சென்று வந்தாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பொன்னுசாமி அங்கிருந்து சென்று விட்டார்.
பின்னர் நீண்ட நேரமாக அவர் வீட்டுக்கு வராததால் அவரை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். அப்போது மண்ணாங்காடு தோட்ட த்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் பொன்னுசாமி தூக்குபோட்டு தொங்கி கொண்டி ருப்பதை கண்டு உறவின ர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பொன்னுசாமி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு இன்று நீர்வரத்து குறைந்தது.
- அணைக்கு வினாடிக்கு 639 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.
இந்த அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வந்தது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு இன்று நீர்வரத்து குறைந்தது.
இன்று காலை நிலவ ரப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 79.38 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 639 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
காளிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீர் வெளி யேற்ற ப்பட்டு வருகிறது.
தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கனஅடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
- தண்ணீர் தேவை உள்ள வார்டு பகுதிகளுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இன்னும் 3 நாட்களில் பணி நிறைவு பெற்று குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னிமலை:
சென்னிமலை பேரூரா ட்சியில் 15 வார்டுகள் உள்ளது. மக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்ய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
நாள் ஒன்றுக்கு இந்த திட்டத்தில் 22 லட்சம் லிட்டர் தண்ணீர் குடிநீர் வடிகால் வாரியத்தில் பணம் செலுத்தி பெற்று மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
வழக்கமாக சென்னிமலை நகர பகுதிக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை தான் வீடுகளுக்கு குடிநீர் சப்பளை செய்யப்படு கிறது.
மக்கள் பல முறை கோரிக்கை வைத்த பின்பு கடந்த 6 மாதங்களாக வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த 20 நாட்க ளுக்கு மேலாக குடிநீர் சப்பளை செய்யப்பட வில்லை.
வசதியானவர்கள் லாரி தண்ணீர் வாங்கி பயன்ப டுத்தி கொள்கின்றனர். ஏழைகள் குடிநீருக்காக மிகவும் கஷ்டபடுகிறார்கள்.
மேலும் 15 வார்டு பகுதியில் சவரத் தொழிலாளர்கள் காலனியில், சவரத் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக லாரி தண்ணீர் வாங்கி பொதுமக்களுக்கு வீடுகளுக்கு 30 குடம் என வழங்கி உள்ளனர்.
குடிநீர் விநியோகம் செய்யாததால் வார்டு கவுன்சிலர்கள் தெருவில் செல்ல முடியவில்லை என கூறி புலம்பி வருகின்றனர்.
இது குறித்து பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக்யிடம் கேட்ட போது கூறியதாவது:
ஈங்கூர் ரெயில்வே லைன் அடியில் மெயின் குழாய் உடைப்பு ஏற்பட்டு விட்டது. இதை சரி செய்ய மத்திய ரெயில்வே துறையில் உரிய அனுமதி வாங்கி போர்கால அடிப்படையில் பணிகள் நடக்கிறது.
மாலை 5 மணிக்கு மேல் பணி செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும், ரெயில்வே அதிகாரிகள் உடன் வைத்து பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் பணி நடந்து வருகிறது.
இன்னும் 3 நாட்களில் பணி நிறைவு பெற்று குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை தண்ணீர் தேவை உள்ள வார்டு பகுதிகளுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் லாரி மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது என்றார்.
- பண்டக சாலையில் துணை விதிகளுக்கு முரணாக சுமார் ரூ.57 லட்சம் கையாடல் நடந்திருப்பது தெரியவந்தது.
- ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான பண்டகசாலை சென்னிமலை அருகே எம்.பி.என் காலனியில் உள்ளது. இது ஈரோடு சரக துணை பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இந்த பண்டக சாலையில் கடந்த 1.4.2015 முதல் 31.3.2016 வரை நடைபெற்ற வரவு செலவுகளின் உண்மை தன்மையினை கண்டறியும் வகையில் கணக்கு தணிக்கை செய்ய ப்பட்டது. இந்த தணிக்கை யில் அனைத்து வகை சங்க பதிவேடு ஆதாரங்கள் குறித்து கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது 2015-2016-ம் ஆண்டில் பண்டக சாலையில் துணை விதிகளுக்கு முரணாக சுமார் ரூ.57 லட்சம் கையாடல் நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்க துணை பதிவாளர் நர்மதா மூலம் சென்னையில் உள்ள வணிக குற்றப்பிரிவு (புலனாய்வு பிரிவு) கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் பண்டக சாலையில் ஸ்டோர் மேலாளராக பணிபுரிந்த சென்னிமலை அருகே உள்ள எம்.பி.என் காலனி சரவணபுரியை சேர்ந்த கணேசன் (55), பண்டக சாலையின் தலைவராக இருந்த முகாசிபிடாரியூர் 1010 நெசவாளர் காலனியை சேர்ந்த தேவராஜ் ( 61) மற்றும் விற்பனையாளராக இருந்த ரவிச்சந்திரன் (61) ஆகிய 3 பேர் ரூ.57 லட்சத்தை கையாடல் செய்தது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
- நெல் விதைகளை பொட்டாசியம் குளோரைடு கரைசலில் ஊறவைப்பதால் முளைப்பு திறன் மற்றும் வீரியத்தை அதிகரிக்கும்.
- காய்கறி விதைகளுக்கு உலர் விதை நேர்த்தி முறையை பயன்படுத்தலாம்.
ஈரோடு:
விதை நேர்த்தி என்பது பூஞ்சாணக்கொல்லி, பூச்சிக்கொல்லி போன்ற வற்றை தனித்தோ அல்லது ஒருங்கிணைத்து விதை களின் மேல் இடுதல் அவற்றை மண் மூலம் பரவும் நோய்கள் மற்றும் சேமிப்பில் விதைகளைத் தாக்கும் பூச்சிகள் போன்றவற்றில் இருந்து காத்து தொற்று நீக்குதலே ஆகும்.
விதை நேர்த்தி செய்வதன் மூலம், பயிர் நோய்கள் பரவாமல் தடுக்கிறது. விதை அழுகல் மற்றும் நாற்றுக்கழுகல் போன்றவற்றிலிருந்து காக்கிறது. முளைப்புத் திறனை மேம்படுத்துகிறது.சேமிப்பில் தாக்கும் பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கிறது. மண்ணில் உள்ள பூச்சி களை கட்டுப்படுத்து கிறது.
உலர் விதை நேர்த்தி மற்றும் ஈர விதை நேர்த்தி என இரு முறைகளில் விதை நேர்த்தி செய்யலாம். நெல் விதைகளுக்கு உலர் விதை நேர்த்தி மற்றும் ஈர விதை நேர்த்தி முறைகளை பயன்படுத்தலாம். காய்கறி விதைகளுக்கு உலர் விதை நேர்த்தி முறையை பயன்படுத்தலாம்.
நெல் விதைகளை 1 சதவிகிதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலில் 12 மணி நேரம் ஊறவை ப்பதால் முளைப்பு திறன் மற்றும் வீரியத்தை அதிகரிக்கும்.
மக்காச்சோள விதை களை சோடியம் குளோ ரைடு 1 சதவிகிதம் அல்லது பொட்டாசியம் டை ஹைட்ரஜன் ஆர்த்தோ பாஸ்பேட் 1 சதவிகிதம் கலவையில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பயறு வகைகளுக்கு துத்த நாக சல்பேட், மக்னீசியம் சல்பேட் மற்றும் மாங்கனீசு சல்பேட் கரைசலில் 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
விதை நேர்த்தி மூலம் விதை கிருமிகளை நீக்குதல், விதை கிருமிகளை அழித்தல் மற்றும் விதைகளை காத்துக்கொள்ளலாம்.
விதைகளை நேர்த்தியினை காய மடைந்த விதைகள், நோயு ற்ற விதைகள், சாதகமி ல்லாத மண்ணின் தன்மை கள் மற்றும் நோயற்ற விதைகளுக்கு செய்ய வேண்டும்.
ஈரோடு மாவட்டத்திற்கு ஏற்ற நெல் ரகங்களான ஏ.டி.டி. 36, ஏ.டி.டி. 37, ஏ.டி.டி. 43, ஏ.டி.டி. (ஆர்) 45, ஏ.டி.டி. 53, சி.ஓ. 51, டி.பி.எஸ். 5 மற்றும் ஏ.எஸ்.டி. 16 ஆகியவற்றை பயிரிடலாம். பயிரிடப்படும் விதைகள் தரமானதாக இருந்தால் அதிகளவில் மகசூல் கிடைக்கும்.
விதையின் தரத்தினை பரிசோதனை செய்ய விதை பரிசோதனை நிலையங்களில் விதை களை கொடுத்து அதன் தரத்தை பரிசோதித்த பின் விதைப்பது நல்லது. அவ்வாறு தங்களிடம் இருப்பில் உள்ள காய்கறி விதைகளை மாதிரி எடுத்து வரும் பட்சத்தில் விதை மாதிரிகளை கீழ்க்காணும் அளவுகளில் கொண்டு வர கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தக்காளி, காலிபிளவர், கத்தரி, வெங்காயம், முட்டைகோஸ், முள்ளங்கி மற்றும் மிளகாய் விதை மாதிரிகளுக்கு 10 கிராமும், கேரட், பீட்ரூட், கொத்த வரை மற்றும் கீரை வகைகளுக்கு 50 கிராமும்,
பூசணி, சுரைக்காய், வெண்டை மற்றும் தர்பூசணிக்கு 100 கிராமும், பீர்க்கன், பாகல் மற்றும் புடலை கொடி காய்களுக்கு 150 கிராம் ஆகிய அளவு களில் விதை மாதிரிகள் கொடுத்து விதையின் முளைப்புத் திறன் அறிந்து பயிரிட ஈரோடு விதை பரிசோ தனை நிலைய வே ளாண்மை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
- 2 துணை சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள்பபட்டு வருகின்றது.
- 240 பயனாளிகளுக்கு ரூ.50.80 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டம் பழைய தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 240 பயனாளிகளுக்கு ரூ.50.80 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.
முகாமில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது:
இம்முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்ப டும் மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை தீர்ப்பது தான் இம்முகாமின் முக்கிய நோக்கமாக உள்ளது. இம்முகாமில் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் மூலமாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பகுதி விவசாயம் தொழில் சார்ந்த பகுதியாகும். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மதிப்புகூட்டுப்பொருட்களாக விற்பனை செய்யும்போது வருவாய் அதிகமாகும்.
மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பின ர்களும் விவசா யம் சார்ந்த பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய முன்வர வேண்டும்.
மேலும் தாளவாடி பகுதியைச் சார்ந்த பொது மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்ட ப்பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி இங்குள்ள மாணவர்களின் நலனுக்காக உயர்க்கல்வியினை பெறும் வகையில் அரசுக்கலை க்கல்லூரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மேலும் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கலைக்கல்லூ ரிக்கான கட்டுமான ப்பணிகள் நடைபெற்று வருகின்றது. விரைவில் பணிகள் முடிவடைந்து அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கட்டிடத்தில் இயங்கும்.
பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் இப்பகுதியில் 2 துணை சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள்பபட்டு வருகின்றது.
மேலும் தாளவாடி அரசு மருத்துவமனையில் உயர்ரக நவீன வசதியுடன் கூடிய எக்ஸ்ரே மையம் அமைக்க ப்பட்டு வருகின்றது மற்றும் மருத்துவமனை வளாகத்தில் பிரேத பரிசோதனை நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றது.
இன்று நடைபெறும் மனுநீதி முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலா ண்மைத்துறை, வே ளாண்மை உழவர்நலத்துறை மற்றும் தோட்டக்க லைத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 240 பயனாளிகளுக்கு ரூ.50.80 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கலெக்டர் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கிடும் வகையில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்து வத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்தி ட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை த்துறை ஆகிய துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டார்.
முன்னதாக இம்முகாமில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சிறுதானியம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பாக பள்ளி மாணவியர்கள் பங்குபெற்ற விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியினையும் கலெக்டர் பார்வையிட்டார்.
இம்முகாமில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. திவ்யபிரிய தர்ஷினி, தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) குமரன், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரங்கநாதன்,
மாவட்ட வழங்கல் அலுவலர் இலாஹிஜான், இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) பழனிவேல், துணை இயக்குநர் (வேளாண்மை) முருகேசன் ,செயற்பொறி யாளர் (வேளாண்மை பொறியியல் துறை) விஸ்வ நாதன், மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தாமணி,
உதவி இயக்குநர் (மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்ச்சித்துறை) ராதிகா, மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலர் கோதைச்செல்வி, ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கோதை,
தாளவாடி ஊராட்சி ஒன்றிய தலைவர் ரத்தினம்மா, தாளவாடி தாசில்தார் ரவிசங்கர், தாளவாடி ஊராட்சி மன்றத் தலைவர் தாட்சாயினி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






