என் மலர்
ஈரோடு
- புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- விசாரணை நடத்தி 3 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள பெத்தாம்பாளையம் அருகே உள்ள கீழ்பவானி கால்வாயின் அருகே பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான இடத்தின் அருகே பெத்தாம்பாளையம் பகுதியில் இருந்து சூரியம்பாளையம் பகுதிக்கு செல்ல புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த தார் சாலை அமைக்கும் பணிக்காக பொதுப்பணி த்துறைக்கு சொந்தமான நிலத்தில் இருந்து மண்ணை பேரூராட்சி துணை தலைவர் தன் நிலத்துக்கு பயன்படுத்தாக கூறி அதிகாரிகள் மற்றும் பாரதிய ஜனதா கச்சியை சேர்ந்த மாவட்ட பொதுச்செயலாளர் ராயல் சரவணன் காஞ்சிக்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரைத்தொடர்ந்து பெருந்துறை இஸ்பெக்டர் மசுதா பேகம் நேரில் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து தங்கவேலுவிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது அவர் தப்பி ஓடி தலைமறை வானார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 3 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.
- சம்பவத்தன்று மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
- அப்போது அவர் நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் பகுதியை சேர்ந்தவர் மகுடேஸ்வரன் (61). விவசாய கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
இதையடுத்து அவர் கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேடு பகுதியில் மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது அவர் நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மகுடேஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆடிப்பெரும் தேர்த்திருவிழா இந்த ஆண்டு நடைபெற உள்ளது.
- 26-ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த புது பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகு விமரிசையாக மாட்டுச்சந்தை, குதிரை சந்தையுடன் தேர் திருவிழா நடைபெறும்.
இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக நடை பெறாமல் இருந்த ஆடிப் பெரும் தேர்த்திருவிழா இந்த ஆண்டு நடைபெற உள்ளது. வரும் 19-ந் தேதி பூச்சாட்டுடன் பண்டிகை தொடங்க உள்ளது. 26-ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது.
இதனைத்தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் 2-ந் தேதி முதல் பூஜையும், 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ஆடிப்பெரும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. தொடர்ந்து 16-ந் தேதி பால் பூஜையுடன் பண்டிகை நிறைவடைகிறது.
இதற்காக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துதல், தற்காலிக கடைகள் புதுப்பாளையம் தண்ணீர்பந்தல் பகுதியில் இருந்து கெட்டிசமுத்திரம் ஏரி பகுதி வரை அமைப்பதற்கான ஏலம் அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலர் ஆனந்த் தலைமையில் நடைபெற உள்ளது.
இதேபோல் அந்தியூர் வெள்ளைப்பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து புதுப்பாளையம் தண்ணீர் பந்தல் வனப்பிரிவு வரையான பகுதிக்கு கெட்டிசமுத்திரம் ஊராட்சியில் தலைவர் மாறன் தலைமையில் ஏலம் நடைபெற உள்ளது.
மேலும் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செயல் அலுவலர் மோகனப்பிரியா, மற்றும் பரம்பரை தர்மகர்த்தா பி.எஸ்.எஸ்.சாந்தப்பன் ஆகியோர் செய்து வருகின்றார்கள்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.33 அடியாக உள்ளது.
- இன்று முதல் காளிங்கராயன் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.
இந்த அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.33 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,012 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
காளிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் காளிங்கராயன் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,005 கன அடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
- ஈரோட்டில் இருந்து வாரம் தோறும் வார இறுதி நாட்கள் பல பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
- சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்என ஈரோடு மண்டல பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோட்டில் இருந்து வாரம் தோறும் வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஈரோடு மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்தூர் உள்பட பல்வேறு ஊர்களுக்கு ஏற்கனவே பல பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த வழித்தடங்களில் வார இறுதி நாட்களில் கூடுதலாக 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்என ஈரோடு மண்டல பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.
- பயனாளிகளான ரேஷன் கார்டுகாரர்கள் விண்ணப்பங்களை அளிக்க முகாம் நடத்தப்படும்.
- விண்ணப்பத்துடன் டோக்கன் வழங்கப்படும்.
ஈரோடு:
மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதனை யடுத்து இந்த திட்ட த்தில் சேர தகுதியான பயனா ளிகளை தேர்ந்தெ டுக்கும் பணி தொடங்கியு ள்ளது.
இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்ட த்தில் பயனாளிகளான ரேஷன் கார்டுகாரர்கள் விண்ணப்பங்களை அளிக்க முகாம் நடத்தப்படும்.
கார்டுகளின் எண்ணிக்கை படி 3 கட்டமாக முகாம் நடக்க உள்ளது. முதற்கட்ட முகாம் வரும் 24-ந் தேதி தொடங்கி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதி வரை நடை பெறுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 7,67,448 ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷனில் விண்ண ப்பம் வழங்கினாலும் அவற்றை பூர்த்தி செய்து பெறுவதற்காக அந்தந்த பகுதி ரேஷன் கடை அருகே சமுதாயக் கூடம், பள்ளிகளில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் தினமும் 84 பேரிடம் மனு பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்படும். விண்ணப்பத்துடன் டோக்கன் வழங்கப்படும்.
டோக்கன் படி அதற்கான நாளில் முகாமுக்கு சென்று விரல் ரேகை பதிவு செய்து ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை தெரிவித்து விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கால் வலி தாங்க முடியாமல் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டதாக கூறினார்.
- சிகிச்சை பலனின்றி அய்யாவு பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் இரட்டிபாளையம் மேல் வீதியை சேர்ந்தவர் அய்யாவு (55). இவர் கடந்த 5 வருடமாக முட்டி வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று ஆடு, மாடுகளை மேய்த்து விட்டு வீட்டுக்கு வந்தபோது வாந்தி எடுத்துள்ளார்.
இது குறித்து அவரது மனைவி கேட்டபோது கால் வலி தாங்க முடியாமல் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டதாக கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அய்யாவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் “இ சேவை” தளம் வழியாக விண்ணப்பங்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
- இந்த மாத இறுதி வரை இ-சேவை மூலமாகவும், நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு "இ சேவை" தளம் வழியாக கல்வி உதவித்தொகை விண்ணப்பம், உதவி உப கரணங்கள் பெறு வதற்கான விண்ணப்பம், வங்கி கடன் மானிய விண்ணப்பம், திருமண உதவித்தொகை விண்ணப்பம், மாதாந்திர உதவி த்தொகை விண்ணப்பங்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் இந்த சேவைகளை பொது மக்கள்பயன்படுத்த தங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspxvdw என்ற இணைய தளம் மூலம் விண்ண ப்பிக்க வேண்டும்.
இந்த மாத இறுதி வரை இ-சேவை மூலமாகவும், நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.
அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் மேற்காணும் திட்டங்களுக்கான அனைத்து விண்ணப்பங்களும் இணைய தளம் மூலமாக மட்டுமே விண்ணப்பித்து மாற்றுத்திறனாளிகள் பயன்பெறலாம் என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
- செந்தில்குமார் மனைவி பிரிந்த ஏக்கத்தில் இருந்துள்ளார்.
- மண் எண்ணையை ஊற்றி தீ பற்றவைத்து கொண்டு தற்கொலை செய்ய முயன்றார்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் ஆலமரத்து காட்டை சேர்ந்த வர் செந்தில்குமார் (35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கோமதி.
இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக கோமதி ஆலாம்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து வந்தார். இதனால் செந்தில்குமார் மனைவி பிரிந்த ஏக்கத்தில் இருந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு வீட்டில் தனியாக இருந்த செந்தில்குமார் வீட்டில் இருந்த மண் எண்ணையை ஊற்றி தீ பற்றவைத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றார்.
அப்போது சத்தம் போட்டு துடித்த செந்தில்குமாரை அக்கம் பக்கத்து வீட்டினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சிகிச்சையில் இருந்த செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார்.
இறந்த செந்தில்கு மாருக்கு பவித்ரன், கோகுல் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒருவர் வீடுகள் உள்ள நிலம் தனக்கு சொந்தமானது எனக்கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
- ஜே.சி.பி. எந்திரம் மூலம் வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட சக்தி நகரில் சுமார் 30ஆண்டு காலமாக 13 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த 2001-ம் ஆண்டு நத்தம் புறம்போக்கு நிலத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா வழங்கினர். அதைத்தொ டர்ந்து 13 குடும்பத்தினரும் வீடு கட்டி வசித்து வருகி ன்றனர்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் 13 வீடுகள் உள்ள நிலம் தனக்கு சொந்தமானது எனக்கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் பொது மக்கள் தரப்பில் சரியாக ஆஜராகாத நிலையில், தனி நபருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.
இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முதல் வீடுகளை காலி செய்து கொள்ளுமாறு தனியார் சார்பில் பேனர் வைக்க ப்பட்டது.
கடந்த மாதம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை இடித்து அப்புறப்படுத்த முயன்றனர். அதற்காக மின் இணை ப்புகள் துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த வீடுகளில் குடியிருந்தவர்கள் வீடுகளை காலி செய்தனர். இந்த நிலையில் இன்று காலை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அந்த 13 வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப ட்டுள்ளது.
- வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறியதால் பிரபாகரன் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து ஏடிஎம் மையத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட வாலிபரை தேடிவந்தனர்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள சித்தோடு வசுவபட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (75). இவர் ஆவினில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சம்பவத்தன்று சித்தோடு நால்ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றார்.
அப்போது பணம் எடுப்பதில் சிரமம் இருந்ததால் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரிடம் பணம் எடுக்க உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். பிரபாகரனிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கி கொண்ட அந்த வாலிபர் பிரபாகரனிடம் ஏ.டி.எம். பின் நம்பரை கேட்டு பணம் எடுத்து கொடுப்பது போல் நடித்துள்ளார்.
பின்னர் உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று வருகிறது. எனவே வங்கிக்கு சென்று கேளுங்கள் என்று அந்த வாலிபர் கூறியுள்ளார். அப்போது பிரபாகரனின் ஏ.டி.எம். கார்டை தான் வைத்துக்கொண்டு தன்னிடம் இருந்த மற்றொரு ஏ.டி.எம். கார்டை முதியவர் பிரபாகரனிடம் கொடுத்துள்ளார்.
இதை கவனிக்காத பிரபாபரன் ஏ.டி.எம். மையத்தை விட்டு வெளியே சென்றதும் பிரபாகரனின் ஏ.டி.எம். கார்டு பயன்படுத்தி அந்த வாலிபர் ஒவ்வொரு முறையும் ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் 5 முறை ரூ.50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவானார். வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறியதால் பிரபாகரன் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளார்.
அப்போது வங்கி அதிகாரிகள் பிரபாகரனின் வங்கி கணக்கை ஆய்வு செய்த போது சிறிது நேரத்திற்கு முன்பு 5 முறை மொத்தம் ரூ.50 ஆயிரம் பணம் உங்கள் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். தனக்கு உதவி செய்வது போல நடித்த வாலிபர் பணத்தை சுருட்டிக்கொண்டு சென்றுவிட்டார் என்பதை உணர்ந்த பிரபாகரன் இது குறித்து சித்தோடு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து ஏடிஎம் மையத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட வாலிபரை தேடிவந்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய ராமநாதபுரம் மாவட்டம், முதுகளத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்த வினோத்(30) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது வினோத் இதே பாணியில் பலரிடம் கைவரிசை காட்டியதும் அவர் மீது 6 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. பின்னர் வினோத் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி செங்காடு பகுதியில் விவசாய தோட்டங்களில் பயிர்களை சேதப்படுத்தியது.
- கடந்த 6 மாதமாக இந்த ஒற்றை யானை இரவு நேரங்களில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானைகள் அவ்வப்போது குடிநீர், உணவு தேடி இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலை கிராமம் செங்காடு, ஏரியூர், பூதிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதமாக ஒற்றை யானை இரவு நேரங்களில் வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இதே போல் இன்று அதிகாலை அந்த ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி செங்காடு பகுதியில் விவசாய தோட்டங்களில் பயிர்களை சேதப்படுத்தியது. இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் யானையை சைரன் ஒலி எழுப்பி விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் நீண்ட போராட்டத்துக்கு பிறகு ஒரு வழியாக யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும் போது, கடந்த 6 மாதமாக இந்த ஒற்றை யானை இரவு நேரங்களில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த ஒற்றை யானையை இங்கிருந்து வேறு இடத்துக்கு வனத்துறையினர் அப்புறப்படுத்த வேண்டும் என்றனர்.






