என் மலர்
நீங்கள் தேடியது "ஒட்டுச்செடிகள்"
- விவசாயிகளுக்கு மானிய விலையில் பழவகை ஒட்டுச்செடிகள் வழங்கபட உள்ளது
- இதில் பயன்பெற 5 செடிகள் வளர்க்க போது மான இடவசதி இருக்க வேண்டும்
ஈரோடு,
கொடுமுடி தோட்ட க்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் 2023-24 ம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் மற்றும் மாநில தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் ஆகிய திட்டங்களில் பழவகை ஒட்டுச்செடிகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. அதன் படி கொய்யா, மா, மாதுளை, சப்போட்டா மற்றும் எலுமிச்சை போன்ற பழவகை செடிகள் தொகுப்பாக வழங்கப்படுகிறது. தொகுப்பு ஒன்றின் விலை ரூ.200 ஆகும். அரசின் மானியம் நீங்கலாக ரூ.50 செலுத்தி மேலே குறிப்பிடப்பட்டுள்ள செடிகளை பெற்றுக்கொள்ளலாம்.
இதில் பயன்பெற 5 செடிகள் வளர்க்க போதுமான இடவசதி இருக்க வேண்டும. மேலும் மாநில தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வீட்டு மாடிகளில் வீட்டுக்கு தேவையான காய்கறி செடிகள் வளர்க்க தேவையான 6 பைகள், 6 வகையான காய்கறி விதைகள், மக்கிய தேங்காய் நார் கழிவுக் கட்டிகள், வேப்ப எண்ணை, அசோஸ்பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா, சூடோ மோனாஸ் போன்ற பொருட்கள் அடங்கிய மாடி வீட்டுத் தொகுப்பு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
தொகுப்பு ஒன்றின் விலை ரூ.900 ஆகும். அரசின் மானியம் நீங்கலாக ரூ.450 செலுத்தி மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாடி தோட்ட தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். மேலும் இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் ஆதார் கார்டு நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள போட்டோவுடன் www.tnhorticulture.tn.gov.in/kit என்ற இணையதளங்களில் பதிவு செய்து தோட்டக்கலைத் துறை மூலம் மாடி வீட்டுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.






