என் மலர்
உள்ளூர் செய்திகள்

அத்தாணி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி
- அத்தாணி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
- நெல் அறுவடை இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள் குறித்து விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் பயிற்சியளித்தார்
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில் பயிர் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களை ேசர்ந்த தனியார் விதை உற்பத்தியாளர்கள் விதைப்பண்ணை அமைத்துள்ளனர். இவ்விதை உற்பத்தியாளர்களுக்கு அத்தாணி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஈரோடு மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் தலைமையில் தரமான சான்று விதை உற்பத்தி குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
இப்பயிற்சியின் போது விதைப்பண்ணை அமைக்கும் விவசாயிகள் பின்பற்ற வேண்டிய விதை நேர்த்தி தொழில்நுட்பம், பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பம், கலவன்களை அகற்றும் முறைகள், வல்லுநர் விதைகளைக் கொண்டு திருந்திய முறையில் நெல் சாகுபடி செய்தல், நெல் அறுவடை இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள் குறித்து விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் பயிற்சியளித்தார்.
மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் புதிதாக வெளியிடப்பட்ட ரகங்களான ஏடிடி 51, ஏடிடி 54, கோ 54, கோ 55 மற்றும் எஸ்டி 21 ரகங்களின் சிறப்பியல்புகள், பயிரிப்பட வேண்டிய பருவங்கள் பற்றியும் தெரிவித்தார். பெருந்துறை விதை சான்று கணேசமூர்த்தி விதைப்பண்ணையை பதிவு செய்யும் முறைகள், வயல் மட்டவிதைகளை முத்திரையிட்டு விதைசுத்தி நிலையம் கொண்டு செல்லும் முறை பற்றி பயிற்சியளித்தார். பவானி விதைச்சான்று அலுவலர் தமிழரசு விதைசுத்தி பணியின்போது கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் மற்றும் விதை மாதிரி எடுக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளித்தார்.
கோபிசெட்டி பாளையம் விதைச்சான்று அலுவலர் மாரிமுத்து நெற்பயிரை தாக்கும் நோய்கள் மற்றும் பூச்சிகள் அவற்றின் மேலாண்மை முறைகள் குறித்து பயிற்சி அளித்தார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை விதைச்சான்று அலுவலர்கள் ராதா, நாகராஜ், ஹரிபி ரசாத், ஹேமாவதி, கவிதா மற்றும் உதவி விதை அலுவலர்கள் சக்திவேல், தமிழ் செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.






