என் மலர்
திண்டுக்கல்
- திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக காய்ச்சல் வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திண்டுக்கல்:
தமிழகம் முழுவதும் பருவநிலை மாற்றம் காரணமாக டெங்கு, வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை எதிர்கொள்ள தமிழக அரசு துரிதமான நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பரிசோதனைக்கு 3 இடங்களில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
காய்ச்சல் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு நிலவேம்பு கசாயம், ஓ.ஆர்.எஸ். கரைசல் தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு தேவையான சத்தான உணவு வழங்கப்படுகிறது. இதில் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக காய்ச்சல் வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கொசு கடிக்க கூடாது என்பதற்காக படுக்கையை சுற்றி கொசு வலை அமைக்கப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் காய்ச்சலுக்காக 23 புற நோயாளிகள் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். அதேபோல் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 52 பேர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 6 பேர் டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 133-ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
- கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் 1940 மற்றும் விதிகள் 1945இல் அட்டவணைகளில் குறிப்பிட்டுள்ள அனைத்து மருந்ததங்களிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 133-ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
தவறும் பட்சத்தில் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் அல்லது மருந்து ஆய்வாளர் ஆய்வின் போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
- கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
- சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்த காரணத்தினால் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலை காண வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் பல்வேறு சுற்றுலா இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. ஆனால் தற்போது கொடைக்கானலில் மேகமூட்டத்துடன் கூடிய இதமான சீதோசனம் நிலவி வருகிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை, காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையையொட்டி இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, பைன்பாரஸ்ட், குணாகுகை, மோயர் பாயிண்ட், தூண்பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர். அவ்வப்போது பெய்த சாரல் மழை சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது.
கடந்த சில நாட்களாக மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, பூம்பாறை பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மன்ன வனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையம், எழு ம்பள்ளம் ஏரியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் அங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமாக வாங்கி சென்றனர். தொடர்மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்த காரணத்தினால் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. தொடர் விடுமுறையையொட்டி இனி வரும் நாட்களில் மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், வாழ்வா தாரத்தை மேம்படுத்திடும் வகையில் ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
- இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொடங்கி வைக்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பொருளூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு 1189 பயனாளிகளுக்கு ரூ.980.44 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகளை வழங்கினார். வேலுச்சாமி எம்.பி. முன்னிலை வகித்தார்.
விழாவில் பயிர்கடன், கால்நடை பராமரிப்பு மூலதான கடனுதவிகள், வேளாண் மத்திய கால கடனுதவிகள், தானிய ஈட்டுக்கடனுதவிகள், பொது நகைக்கடனுதவிகள், மகளிர் சுய உதவிக்குழு கடனுதவிகளை வழங்கினார்.
இதில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், வாழ்வா தாரத்தை மேம்படுத்திடும் வகையில் ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் அன்றாட பயணச் செலவு களை தவிர்த்திடும் வகையில் நகர பஸ்களில் கட்டணமில்லா பயணத் திட்டத்தினை ஏற்படுத்தி யுள்ளார். பெண்கள் உயர்கல்வி கற்று, தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் ரூபாய் 1,000 வழங்கப்படுகிறது. மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொடங்கி வைக்கப்பட்டது.
தற்போது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தகுதியான இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம். இத்திட்டத்தில் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 1,06,50,000 மகளிர் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை த்தொகை கிடைக்க ப்பெறாதவர்கள் இ-சேவை மையத்தில் பதிவு செய்ய வேண்டும். தகுதி உடைய அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். எந்த மாநி லத்திலும் செயல்ப டுத்தப்படாத அற்புதமான திட்டத்தை முதல்-அமைச்சர் செயல்ப டுத்தியுள்ளார்.
பொருளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 296 விவசாயிகளுக்கு ரூ.556.10 லட்சம் மதிப்பிலான பயிர்கடன், 21 விவசாயிகளுக்கு ரூ.12.74 லட்சம் மதிப்பிலான கால்நடை பராமரிப்பு மூலதன கடன், 1 விவசாயிக்கு ரூ.5.94 லட்சம் மதிப்பிலான வேளாண் மத்திய காலக்கடன், 2 விவசாயிகளுக்கு ரூ.20.00 லட்சம் மதிப்பிலான தானிய ஈட்டுக்கடன், 604 விவசாயிகளுக்கு ரூ.274.49 லட்சம் மதிப்பிலான பொது நகைக்கடன், 264 நபர்களுக்கு ரூ.110.67 லட்சம் மதிப்பிலான மகளிர் சுய உதவிக்குழு கடன், 1 மாற்றுதிறனாளிக்கு ரூ.0.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் என மொத்தம் 1189 நபர்களுக்கு ரூ.980.44 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்க ப்பட்டுள்ளது. என பேசினார்.
இதில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன்ராஜ், பழனி வருவாய் கோட்டாட்சியர் சரவணன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அன்பரசு, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சத்தியபுனா ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் முருகாத்தாள், ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராணி மோகனபிரபு, ஒட்டன்சத்திரம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் ராஜாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் தஷீரா உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பேரூராட்சியில் 15 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் பேரூராட்சி கூட்டம் ஒவ்வொரு முறையும் 10 நிமிடங்களே நடப்பதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
- மேலும் வார்டு வளர்ச்சிப்பணிகள், குறைகள் குறித்து கவுன்சிலர்கள் பேச கூட் டத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலை பண்ணைக்காடு பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவர் முருகேஸ்வரி தலைமை தாங்கினார். துணைதலைவர் லதா முன்னிலை வகித்தார்.செயல் அலுவலர் சுதர்சன் வரவேற்றார். பண்ணைக்காடு பேரூராட்சியில் 15 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் பேரூராட்சி கூட்டம் ஒவ்வொரு முறையும் 10 நிமிடங்களே நடப்பதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் வார்டு வளர்ச்சிப்பணிகள், குறைகள் குறித்து கவுன்சிலர்கள் பேச கூட் டத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது. பேரூராட்சித்தலைவரின் கணவர் கூட்ட அரங்கில் தலையிடுவதும், நிர்வாக விஷயங்களில் முழுமையாக தலையிடுவதாக ஆளும் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே புகார் அளிக்கின்றனர். உதயகுமார் காங்கிரஸ், 11-வது வார்டு கவுன்சிலர் பேசுகையில், பேரூராட்சி நிர்வாகத்தில் தலைவர் கணவர் ஆதிக்கமே மேலோங்கி உள்ளது. தலைவருக்கு நிர்வாக விஷயத்தில் எவ்வித விபரங்களும் தெரியவில்லை. கூட்ட அரங்கில் தலைவரின் கணவர் பதிலளிக்கும் நிலை உள்ளது. பேரூராட்சியில் செய்யப்படும் வளர்ச்சிப்பணிகளில் ஏராளமான முறைகேடுகள் அரங்கேறு கின்றன.
தற்போது தீர்மானத்தில் கூட ஒரே பணி இரு இடங்களில் வந்துள்ளது. இது குறித்து கேட்டதற்கு முறையான பதில் அளிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் 10 நிமிடமே கூட்டங்கள் நடக்கின்றன. கவுன்சிலர்களுக்கு பேசும் அதிகாரம் மறுக்கப்படுகின்றது. ஆளும் கட்சி கவுன்சிலர்களுக்கு வாய் பூட்டப்பட்டு அவர்கள் மிரட்டப்படுகின்றனர். அதிகாரிகளும் இதற்கு துணை புரிகின்றனர். தலைவரின் தன்னிச்சையான போக்கு அனைத்து கவுன்சிலர்களுக்குமே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாகம் சுதந்திரமாக நடக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- சமையல் எரிவாயு பயன்படுத்தும் முறை மற்றும் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்
- சமையல் எரிவாயு பயன்படுத்தும் முறை மற்றும் தீ விபத்து ஏற்படாமல் பாதுகாப்பது குறித்து முகாமில் விளக்கப்பட்டது.
செம்பட்டி:
செம்பட்டி அருகே ஆத்தூர் ஊராட்சி பகுதியில் சமையல் எரிவாயு பயன்படுத்தும் முறை மற்றும் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் பூஞ்சோலை 10-வது வார்டு, மாதா கோவில் தெரு, வெள்ளாளர் தெரு, அக்ரஹார தெரு, ஆலம்பட்டி, நந்தனார் தெரு, சவேரியார் கோவில் தெரு, பூஞ்சிலை தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடைபெற்றது.
சமையல் செய்யும் பெண்களுக்கு கேஸ் நிறுவனம் சார்பில் சமையல் எரிவாயு பயன்படுத்தும் முறை மற்றும் தீ விபத்து ஏற்படாமல் பாதுகாப்பது குறித்து முகாமில் விளக்கப்பட்டது.
- இடையகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் கோபி கிருஷ்ணா தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
- சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.
ஒட்டன்சத்திரம்:
இடையகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் கோபி கிருஷ்ணா தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர் அபிநயா கலந்து கொண்டார்.
ரத்ததான முகாமில் இடையகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
மேலும் ரத்ததானம் செய்த நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- மதுரை- நத்தம் 4 வழிச்சாலையில் உள்ள வலையபட்டி பிரிவு பகுதியில் திரும்பிய போது மதுரையில் இருந்து நத்தம் நோக்கி வந்த கார் அவர்கள் மீது மோதியது.
- இதில் கீழே தவறி விழுந்த அவர்கள் பலத்த காயமடைந்தனர்.
நத்தம்:
நத்தம் அருகே எல்.வலையபட்டியை சேர்ந்தவர் அழகன்(வயது75). இவர் சொந்த வேலையாக வேம்பரளி பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் தனது மனைவி, பேரனுடன் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். வண்டியை லோகேஸ்வரன் ஓட்டி வந்தார்.
இந்நிலையில் மதுரை- நத்தம் 4 வழிச்சாலையில் உள்ள வலையபட்டி பிரிவு பகுதியில் திரும்பிய போது மதுரையில் இருந்து நத்தம் நோக்கி வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் கீழே தவறி விழுந்த அவர்கள் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் காயமடைந்த அழகன், அழகுநாச்சி, (70) லோகேஷ்வரன் (16) ஆகியோரை சிகிச்சைக்காக நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மலைக்கோவிலின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் காணப்பட்டது.
- பழனியில் ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையம், பாதவிநாயகர் கோவில் பகுதி என 3 இடங்களில் செல்போன்கள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பழனி:
தமிழகத்தின் சிறந்த ஆன்மீக தலமாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக திருவிழா காலங்கள் மட்டுமின்றி சுபமுகூர்த்தம், பண்டிகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி இன்று முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மலைக்கோவிலில் முருகனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சிலர் பால்குடம், காவடி எடுத்தும், படிப்பாதையில் படிப்பூஜை செய்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இந்த கல்வியாண்டில் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கிடவும், இளைஞர்கள் தொழிலில் முன்னேற்றம் காணவும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். மலைக்கோவிலின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் காணப்பட்டது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் சிலர் மலைக்கோவிலில் மூலவரை செல்போனில் புகைப்படம் எடுக்கும் சம்பவம் நடந்து வந்தது. ஆகவே பழனி கோவிலில் செல்போனுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் தனிநபர் ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த ஐகோர்ட்டு பழனி முருகன் கோவிலில் செல்போனுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து பழனி கோவில் நிர்வாகமும் இன்று முதல் பழனி கோவிலில் செல்போன் கொண்டுவர தடை விதித்துள்ளது. மேலும் படிப்பாதை, ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் செல்போன்கள் வாங்கப்படும் என்றும், அதற்கான பாதுகாப்பு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.
பழனியில் ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையம், பாதவிநாயகர் கோவில் பகுதி என 3 இடங்களில் செல்போன்கள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 30 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு அவர்களுக்கு சிறப்புபயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இன்று பாதவிநாயகர் கோவில் அருகே வைக்கப்பட்டுள்ள செல்போன் சேகரிப்பு மையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பழனி முருகன் கோவிலில் செல்போனுக்கு தடை என்பதால் அடிவார பகுதியில் இதுபற்றிய அறிவிப்பு பலகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளது.
- கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
- புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக வார விடுமுறை, தொடர் விடுமுறை உள்ளிட்ட நாட்களில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம்.
தமிழகத்தில் தற்போது காலாண்டு விடுமுறை, வார இறுதி நாட்கள் மற்றும் காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை வருவதன் காரணமாக புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக கொடைக்கானலில் இரவு நேரத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக, சுற்றுலாவை அனுபவிக்க செல்லும் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
- மழை பெய்தாலே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதும், அதனை கடந்து செல்ல வாகனங்கள் செல்ல சிரமப்படுவதும் வாடிக்கை யாக உள்ளது.
- சுரங்கப்பாதையில் சிக்கிக்கொள்ளும் மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி வருவது தொடர்ந்து வருகிறது.
வடமதுரை:
திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் அருகே தென்புறமாக சுரங்கப்பாதை உள்ளது. மழை பெய்தாலே இந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதும், அதனை கடந்து செல்ல வாகனங்கள் செல்ல சிரமப்படுவதும் வாடிக்கை யாக உள்ளது.
அதன்பிறகு ெஜன ரேட்டர் மூலம் தண்ணீர் அகற்றப்பட்ட பின்பு தேங்கி உள்ள தண்ணீர் துர்நாற்றம் வீசி அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரப்பும் மையமாக மாறி உள்ளது.
இது பல வருடங்களாக சீனாவின் பெருந்துயரம் போல அய்யலூர் சுரங்கப்பாதையில் நடந்து வருகிறது. இந்த பாலத்தை கடந்து பெட்டிநாயக்கன்ப ட்டி, கருஞ்சின்னானூர், குமரம்பட்டி, சுக்காவழி உள்ளிட்ட கிராம மக்கள் கடந்து சென்று வருகின்றனர். மழை பெய்தால் ஒதுங்க கூட இடம் கிடைக்காமல் சுரங்கப்பாதையில் சிக்கிக்கொள்ளும் மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி வருவது தொடர்ந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அக்ேடாபர் முதல் தேதி தூய்மை இந்தியா திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய நாள் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரெயில் நிலையம், பஸ் நிலையம், ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளிட்ட இடங்களை ெபாதுமக்கள் அனைவரும் அந்தந்த துறை அதிகாரிகளோடு இணைந்து சுத்தப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தூய்மை இந்தியா தினம் நாளை நாடு முழுவதும் கடை பிடிக்க ப்படுகிறது. இன்றைய நாளிலாவது இந்த சுரங்கப்பா தைக்கு விடிவு காலம் பிறக்குமா என பொதுமக்கள் எதிர்பார்க்கி ன்றனர்.
- பஸ் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் வியாபாரிகள் நடைபாதையை ஆக்கிர மித்து வைத்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர்.
- மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் ஏ.எம்.சி. சாலையில் நடைபாதையின் ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல்லின் மத்திய பகுதியில் பஸ் நிலையம் உள்ளது. இங்கு பல்வேறு ஊர்களுக்கு தினமும் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாவட்டத்தின் தலைநகராக திண்டுக்கல் உள்ளதால் பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்க ணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
பஸ் நிலையம் எப்போதும் நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரைக்கும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் பஸ்கள் வெளியே செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இந்த நிலையில் பஸ் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் வியாபாரிகள் நடைபாதையை ஆக்கிர மித்து வைத்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,
திண்டுக்கல் பஸ் நிலையம் ஏற்கனவே நெருக்கடி சூழலில் சிக்கித் தவிக்கிறது. இந்த நிலை யில் ஏ.எம்.சி. சாலையில் உள்ள வியாபாரிகள் நடைபா தையை ஆக்கிரமித்து துணிக்கடை, செப்பல் கடை உள்ளிட்ட பல்வேறு கடை களை வைத்துள்ளனர். இந்த கடைகளுக்கு வரக்கூடிய பொதுமக்கள் வாகன ங்களை சாலையின் ஓரத்தி லே நிறுத்தி விடுகின்றனர்.
இதனால் இந்த பகுதி முழுவதும் நெருக்கடியான சூழலில் சிக்கித் தவிக்கிறது. காலை, மாலை நேரங்களில் இந்த வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் நடைபாதை ஆக்கிரப்பின் காரணமாக நடு ரோட்டில் நடந்து செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது. இதனால் அவ்வப்போது விபத்தும் ஏற்படுகிறது. ஆகவே பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் ஏ.எம்.சி. சாலையில் நடைபாதையின் ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்க கோரிக்கைவிடுத்தனர்.






