என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 பேருக்கு பாதிப்பு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில்  டெங்கு காய்ச்சலுக்கு தனிவார்டு
    X

    கோப்பு படம்.

    3 பேருக்கு பாதிப்பு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு தனிவார்டு

    • திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக காய்ச்சல் வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் பருவநிலை மாற்றம் காரணமாக டெங்கு, வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை எதிர்கொள்ள தமிழக அரசு துரிதமான நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பரிசோதனைக்கு 3 இடங்களில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

    காய்ச்சல் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு நிலவேம்பு கசாயம், ஓ.ஆர்.எஸ். கரைசல் தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு தேவையான சத்தான உணவு வழங்கப்படுகிறது. இதில் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக காய்ச்சல் வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கொசு கடிக்க கூடாது என்பதற்காக படுக்கையை சுற்றி கொசு வலை அமைக்கப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் காய்ச்சலுக்காக 23 புற நோயாளிகள் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். அதேபோல் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 52 பேர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 6 பேர் டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×