search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொருளூரில் 1189 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி கடன் உதவிகளை வழங்கினார்.

    பொருளூரில் 1189 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், வாழ்வா தாரத்தை மேம்படுத்திடும் வகையில் ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
    • இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொடங்கி வைக்கப்பட்டது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பொருளூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு 1189 பயனாளிகளுக்கு ரூ.980.44 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகளை வழங்கினார். வேலுச்சாமி எம்.பி. முன்னிலை வகித்தார்.

    விழாவில் பயிர்கடன், கால்நடை பராமரிப்பு மூலதான கடனுதவிகள், வேளாண் மத்திய கால கடனுதவிகள், தானிய ஈட்டுக்கடனுதவிகள், பொது நகைக்கடனுதவிகள், மகளிர் சுய உதவிக்குழு கடனுதவிகளை வழங்கினார்.

    இதில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், வாழ்வா தாரத்தை மேம்படுத்திடும் வகையில் ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் அன்றாட பயணச் செலவு களை தவிர்த்திடும் வகையில் நகர பஸ்களில் கட்டணமில்லா பயணத் திட்டத்தினை ஏற்படுத்தி யுள்ளார். பெண்கள் உயர்கல்வி கற்று, தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் ரூபாய் 1,000 வழங்கப்படுகிறது. மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொடங்கி வைக்கப்பட்டது.

    தற்போது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தகுதியான இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம். இத்திட்டத்தில் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 1,06,50,000 மகளிர் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை த்தொகை கிடைக்க ப்பெறாதவர்கள் இ-சேவை மையத்தில் பதிவு செய்ய வேண்டும். தகுதி உடைய அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். எந்த மாநி லத்திலும் செயல்ப டுத்தப்படாத அற்புதமான திட்டத்தை முதல்-அமைச்சர் செயல்ப டுத்தியுள்ளார்.

    பொருளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 296 விவசாயிகளுக்கு ரூ.556.10 லட்சம் மதிப்பிலான பயிர்கடன், 21 விவசாயிகளுக்கு ரூ.12.74 லட்சம் மதிப்பிலான கால்நடை பராமரிப்பு மூலதன கடன், 1 விவசாயிக்கு ரூ.5.94 லட்சம் மதிப்பிலான வேளாண் மத்திய காலக்கடன், 2 விவசாயிகளுக்கு ரூ.20.00 லட்சம் மதிப்பிலான தானிய ஈட்டுக்கடன், 604 விவசாயிகளுக்கு ரூ.274.49 லட்சம் மதிப்பிலான பொது நகைக்கடன், 264 நபர்களுக்கு ரூ.110.67 லட்சம் மதிப்பிலான மகளிர் சுய உதவிக்குழு கடன், 1 மாற்றுதிறனாளிக்கு ரூ.0.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் என மொத்தம் 1189 நபர்களுக்கு ரூ.980.44 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்க ப்பட்டுள்ளது. என பேசினார்.

    இதில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன்ராஜ், பழனி வருவாய் கோட்டாட்சியர் சரவணன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அன்பரசு, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சத்தியபுனா ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் முருகாத்தாள், ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராணி மோகனபிரபு, ஒட்டன்சத்திரம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் ராஜாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் தஷீரா உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×