என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்- சாரல் மழையால் உற்சாகம்
- கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
- சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்த காரணத்தினால் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலை காண வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் பல்வேறு சுற்றுலா இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. ஆனால் தற்போது கொடைக்கானலில் மேகமூட்டத்துடன் கூடிய இதமான சீதோசனம் நிலவி வருகிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை, காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையையொட்டி இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, பைன்பாரஸ்ட், குணாகுகை, மோயர் பாயிண்ட், தூண்பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர். அவ்வப்போது பெய்த சாரல் மழை சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது.
கடந்த சில நாட்களாக மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, பூம்பாறை பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மன்ன வனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையம், எழு ம்பள்ளம் ஏரியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் அங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமாக வாங்கி சென்றனர். தொடர்மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்த காரணத்தினால் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. தொடர் விடுமுறையையொட்டி இனி வரும் நாட்களில் மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்