என் மலர்
திண்டுக்கல்
- சுகாதார நிலையத்தில் கிராமப்புற சுகாதார செவிலியர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
- சாலையில் கிழக்குப் பகுதியில் கால்வாய் வசதி இல்லாமல் கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே கோவிலூரில் வேடசந்தூர் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. துணை சுகாதார நிலையம் திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிறுத்தம் பகுதியில் செயல்பட்டு வருகிறது.
இந்த சுகாதார நிலையத்தில் கிராமப்புற சுகாதார செவிலியர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் - கரூர் இடையே 4 வழிச்சாலை விரிவாக்கப்பணிகளுக்காக கோவிலூர் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் கிழக்குப் பகுதியில் கால்வாய் வசதி இல்லாமல் கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. துணை சுகாதார நிலையத்துக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
சாலை விரிவாக்க பணிகளுக்காக கோவிலூர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் நிலம் கையகப்படுத்தும் பணிகளை தொடங்கியுள்ளனர். 2 நாட்களில் அதற்கான அளவீட்டு பணிகள் தொடங்கும். இதன் பிறகு இந்த சாலையை ஒட்டி கிழக்கு பகுதியில் கழிவு நீருக்கான கால்வாய் அமைக்கும் பணி ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி கூறினார்.
- திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.
- இதில் 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அமிர்தா கடேஸ்வரர் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் டாக்டர் அப்துல் ஹமீது, துணைத் தலைவர் ஹேமலதா ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
முகாமில் இளைஞர் அணி நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.
நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் காமாட்சி, துணைத் தலைவர் நாகராஜன், பொருளாளர் சத்தியமூர்த்தி, மாநகர செயலாளர் துணை மேயர் ராஜப்பா, மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், வடக்கு பகுதி செயலாளர் ஜானகிராமன், பொதுக்குழு உறுப்பினர் அக்பர், மாவட்ட இலக்கிய அணி தலைவர் முருகானந்தம், மாவட்ட இலக்கிய அணி இலக்கண்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- நத்தம் அருகே சிறுகுடியில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
- பொது மக்களுக்கு சர்க்கரை, உப்பு, இ.சி.ஜி.உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர்.
நத்தம்:
நத்தம் அருகே சிறுகுடியில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோகிலாவாணி வீரராகவன் தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார்.
முகாமில் திண்டுக்கல் எம்.எம். சிறுநீரக சர்க்கரை நோய் சிகிச்சை மைய மருத்துவர்கள் பாலமுருகன், அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு சர்க்கரை, உப்பு, இ.சி.ஜி.உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இதைப்போலவே நத்தம் வெள்ளக்குட்டு பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது. இதில் தொகுதி தலைவர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் பூங்கொடி காந்தியடிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, குத்துவிளக்கேற்றி தீபாவளி கதர் சிறப்பு முதல் விற்பனை தொடக்கம்.
- அனைத்து அரசு அலுவலர்களுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்ற பணியாளர்களுக்கும் எளிய கடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் அமைந்துள்ள கதர் அங்காடியில், கதர் கிராம தொழில்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் காந்தியடிகளின் 155-வது பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை தொடக்க விழா இன்று நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் பூங்கொடி காந்தியடிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, குத்துவிளக்கேற்றி தீபாவளி கதர் சிறப்பு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி முன்னிலை வகித்தார்.
பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது,
நாட்டின் இதயமாக விளங்கும் கிராமப்புற ஏழை, எளிய நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் உயரிய சேவையை முதற்குறிக்கோளாகக் கொண்டு தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனையாக ரூ.35 லட்சம் மதிப்பில் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நமது மாவட்டத்திற்கு விற்பனை இலக்காக ரூ.245 லட்சம் மதிப்புள்ள கதர் ரகங்களை விற்பனை செய்திட தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கதர் விற்பனையை ஊக்கப்படுத்துவதற்கும், வாடிக்கையாளர்களின் நலன் கருதியும், கதர் விற்பனை அங்காடியில் மத்திய, மாநில அரசுகள் கதர், பட்டு, பாலிஸ்டர் ரகங்களுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. விற்பனை இலக்கினை முழுமையாக எய்திடும் பொருட்டு, அனைத்து அரசு அலுவலர்களுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்ற பணியாளர்களுக்கும் எளிய கடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
முன்னதாக திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தியடிகளின் உருவச்சிலைக்கு மாவட்ட கலெக்டர் பூங்கொடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா, தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரிய உதவி இயக்குநர் முருகேசன் மற்றும் கதர் வாரிய பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
- அய்யலூர் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்.
- எனவே அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
வடமதுரை:
அய்யலூர் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அய்யலூர், குருந்தம்பட்டி, தங்கம்மாபட்டி, வளவிசெட்டிபட்டி, வடுகபட்டி, மாமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இதே போல் நத்தம் அருகே உள்ள எஸ்.வளையபட்டியில் பராமரிப்பு பணிகள் காரணமாக புதுக்கோட்டை, ரெட்டியபட்டி, வத்திப்பட்டி காசம்பட்டி, லிங்கவாடி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பெருமாள்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (45) சமூக ஆர்வலர். இவர் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
- தேங்காய், பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்களை சாலையில் உடைப்பதை தவிர்த்து. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத இடத்தில் உடைக்கலாம்.
நத்தம்,:
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (45) சமூக ஆர்வலர். இவர் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பஸ் நிலையம், வாரச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் சாலை பாதுகாப்பு குறித்து சாலையில் தேங்காய், திருஷ்டி பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்களை உடைக்க வேண்டாம் என்றும், சாலை பாதுகாப்பான பயணத்திற்கு மட்டுமே என நூதன முறையில் கையிலும், கழுத்திலும் பதாகைகளை தொங்க விட்டு விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், திருஷ்டி கழிக்க வேண்டும் என சிலர் பூசணிக்காய் மற்றும் தேங்கா ய்களை சாலையிலேயே உடைக்கின்றனர். இதனால் பைக்கில் வரும் நபர்கள் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் நடந்து செல்பவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே தேங்காய், பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்களை சாலையில் உடைப்பதை தவிர்க்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத இடத்தில் உடைக்கலாம். இதற்காக பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றேன் என்றார்.
- நிகழ்ச்சியில், கோலப்போட்டி, சைக்கிள் பேரணி, பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற நிகழ்ச்சிகள், பொதுமக்கள் பங்களிப்புடன் நடைபெற்றது.
- சித்தையன்கோட்டை பேரூராட்சியில் அனைத்து பகுதிகளிலும் சாலைகள் மற்றும் தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டது.
செம்பட்டி:
சித்தையன்கோட்டை பேரூராட்சி அனைத்து வார்டு பகுதியில், ஒட்டு மொத்த தூய்மை பணி முகாம் மற்றும் உறுதி மொழி எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கோலப்போட்டி, சைக்கிள் பேரணி, பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற நிகழ்ச்சிகள், பொதுமக்கள் பங்களிப்புடன் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, சித்தையன்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் போதும்பொண்ணு முரளி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜாகிர் உசேன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் சிவக்குமார் வரவேற்று பேசினார். மேலும், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர், அப்துல் கரீம், இளநிலை உதவியாளர், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், சித்தையன்கோட்டை பேரூராட்சியில் அனைத்து பகுதிகளிலும் சாலைகள் மற்றும் தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டது.
- நேற்று விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
- சுமார் 250க்கும் மேற்பட்டோர் ரூ.2000 கட்டணம் செலுத்தி தங்கரதம் இழுத்து வழிபட்டனர்.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தினந்தோறும் மலைக்கோவிலில் தங்கரதம் இழுத்து வழிபாடு செய்வது வழக்கம். இதற்காக ரூ.2000 கட்டணம் செலுத்தி பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.
சாதாரண நாட்களில் சராசரியாக 100 பக்தர்கள் வரை தங்க ரதம் இழுத்து வழிபாடு செய்வார்கள். சித்ரா பவுர்ணமி, மாத கார்த்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்கரதம் இழுத்து வழிபாடுவார்கள்.
இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். சுமார் 250க்கும் மேற்பட்டோர் ரூ.2000 கட்டணம் செலுத்தி தங்கரதம் இழுத்து வழிபட்டனர். இதனால் மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும் நேற்று முதல் கோர்ட்டு உத்தரவுப்படி செல்போன் மற்றும் கேமராக்களுக்கு கட்டணம் வசூலித்து அவை பாதுகாப்பு அறையில் வாங்கி வைக்கப்பட்டதால் கூட்ட நெரிசல் அதிகரித்தது.
கோவில் பாதுகாப்பு அலுவலர்கள் பக்தர்களிடம் சோதனை நடத்தி செல்போன் மற்றும் கேமராக்களை வாங்கி வைத்தனர். அதனால் கூட்டம் அதிகரித்ததால் சோதனை நடத்துவது நிறுத்தப்பட்டு மீண்டும் பணிகள் தொடங்கியது.
இரவு 10 மணி வரையிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பஸ் நிலையத்தில் வெளியூர் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தங்கள் ஊர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
- நத்தத்தில் விஸ்வகர்மா தமிழ்நாடு தச்சு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விஸ்வகர்மா குரு ஜெயந்தி விழா நடந்தது.
- விஸ்வகர்மா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நத்தம்:
நத்தத்தில் விஸ்வகர்மா தமிழ்நாடு தச்சு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விஸ்வகர்மா குரு ஜெயந்தி விழா நடந்தது. இதற்கு வட்டார தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். செயலாளர் செல்லப்பா, பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ., நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விஸ்வகர்மா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் வேலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், வட்டார துணை தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் மாணிக்கம், ஆலோசகர்கள் கணபதி, கேசவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கபட்டது.
- நகர் பகுதியில் உள்ள அனைத்து ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் முழுவதும் நிரம்பி விட்டது.
- இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விடுதி உரிமை யாளர்கள் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி லாபம் பார்க்கின்றனர்
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
தற்போது காலாண்டு மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
பில்லர்ராக், மோயர்பா ய்ண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, ேராஜா பூங்கா, நட்சத்திர ஏரி உள்ளிட்ட அனைத்து இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் மலைச்சாலை மற்றும் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நகர் பகுதியில் உள்ள அனைத்து ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் முழுவதும் நிரம்பி விட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் வில்பட்டி, அட்டுவம்பட்டி, நாயுடுபுரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளை தேடி சென்றனர்.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விடுதி உரிமை யாளர்கள் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி லாபம் பார்க்கின்றனர். 24 மணி நேரத்துக்கு பதிலாக 10 மணி நேரம் மட்டுமே கணக்டும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த கட்டண விபரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படுவதில்லை.
ஓட்டல்களில் விலை பட்டியல் இல்லை. சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டுகி ன்றனர். குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட வரும் பொதுமக்கள் இதுபோன்ற செயல்களால் விரக்தி அடைந்து திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
இணையதளத்தில் பதிவு செய்து ஓட்டல் மற்றும் தங்கும் விடுதிக்கு வருபவர்களுக்கு ஜி.எஸ்.டி. கட்டணத்துடன் சரியான கட்டணம் வசூலிக்கப்ப டுகிறது. ஆனால் புறநகர் பகுதியில் அனுமதியின்றி 300க்கும் மேற்பட்ட விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரூ.2 ஆயிரம் வாடகைக்கு விடப்படும் அறைகள் ரூ.5 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. அதற்கு முறையான ரசீது வழங்குவது கிடையாது. அடாவடி வசூலால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
உணவகங்களில் விலை பட்டியல் அதிகாரிகளின் செல்போன் எண்கள் வைக்க வேண்டும் என்பது விதியாகும். அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறாக உணவக ங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் நடைபெறும் கட்டண கொள்ளையை அதிகாரிகள் கண்டும் காணாமலும் உள்ளனர். பெயர் அளவுக்கு சோதனை செய்து விட்டு நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் அனுமதி பெறாத காட்டேஜ்கள் தங்கள் இஷ்டத்துக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்கின்றனர். ரசீது கொடுக்காததால் முறையாக வரி செலுத்துவதில்லை. இதனால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உழவுக்கு பின்னால் விதை போட்டுக்கொண்டு செல்லும் பெண்களுக்கு ரூ.350 கூலி வழங்கப்படுகிறது.
- டிராக்டர் மூலமாக ஒரு மணி நேரத்தில் உழவு செய்யும் நிலத்தில் 3 ஏர்பூட்டி 6 மணி நேரத்தில் உழவு செய்து வருகின்றனர்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆத்தூர், ராமநாதபுரம், தாதன்னூர் உள்ளிட்ட பகுதியில் இயற்கை விவசாயத்தை நம்பி உள்ள விவசாயிகள் பாரம்பரிய முறைப்படியே விவசாயம் செய்து வருகின்றனர். எவ்வளவு ரசாயன உரங்கள் மருந்துகள் இருந்தாலும் மண் வளம் கெடாமல் இருக்க இயற்கை உரங்களான மாட்டுச்சாணம், கண்மாய் கரம்பை எனப்படும் மண் வகைகளை நிலத்தில் போட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக தாதன்னூரைச் சேர்ந்த விவசாயிகள் ராஜா, செல்வேந்திரன் ஆகியோர் ராமநாதபுரம் அருகே உள்ள தனது விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிரிடுவதற்காக மாடுகளை ஏர்பூட்டி உழுது வயல்களை தயார்படுத்தினர். இந்த வயல்களில் அதிகாலை நேரத்தில் சூரியன் உதிக்கும்போது வயலின் சனி மூலையில் பாரம்பரிய முறைப்படி தேங்காய், வாழைப்பழம், பத்தி சூடம், எலுமிச்சம் பழம், குங்குமம், சந்தனம், நிறை செம்பு தண்ணீர், கதம்பம் பூ வைத்து இயற்கை பகவானை வழிபட்டு குடும்பப் பெண்கள் குலவையிட்டு ஏர்பூட்டி உழவில் ஈடுபடும் நாட்டு மாடுகளுக்கு கொம்பில் சந்தனம், குங்குமம் மற்றும் கதம்பம் பூ வைத்து மாட்டை தொட்டு வணங்கி விளைச்சல் சிறப்பாக இருக்க வேண்டும் என பூமியை தொட்டு வணங்கி ஏர் பூட்டி உழவை தொடங்கினர்.
இந்தப் பணிக்காக ஒரு ஏர் உழவனுக்கு ரூ.1350 கூலியாக கொடுக்கப்படுகிறது. மேலும் உழவுக்கு பின்னால் விதை போட்டுக்கொண்டு செல்லும் பெண்களுக்கு ரூ.350 கூலி வழங்கப்படுகிறது. டிராக்டர் மூலமாக ஒரு மணி நேரத்தில் உழவு செய்யும் நிலத்தில் 3 ஏர்பூட்டி 6 மணி நேரத்தில் உழவு செய்து வருகின்றனர். இந்த நவீன காலங்களிலும் ஒரு சில விவசாயிகள் பாரம்பரிய முறைப்படி ஏர் பூட்டி உழவு செய்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து விவசாயி செல்வேந்திரன் கூறுகையில், நவீன வசதிகள் இருந்தாலும் செயற்கை உரங்கள் மருந்துகள் இருந்தாலும் நான் இயற்கையை நம்பி இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். இதனால் மண் வளம் கெடாமல் இருக்கும். நல்ல விளைச்சல் கிடைக்கும். இதுபோன்று விவசாயம் செய்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
- தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை சேவை 2023 என்ற ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 12 இடங்களில் நடைபெற்றது.
- விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கியும், வீட்டு வாசல் முன்பு ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை சேவை 2023 என்ற ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 12 இடங்களில் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் 2- வது வார்டு ஈ.வே.ரா சாலை, அசோக் நகர் பகுதியில் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, கமிஷனர் ரவிச்சந்திரன் ஆகியோர் வீடு வீடாக சென்று பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என பிரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கியும், வீட்டு வாசல் முன்பு ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக ஆர்.எம். காலனி உள்ள அம்ருத் பூங்காவில் நடைபெற்ற டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் ஆனந்த், ஜான் பீட்டர், கவுன்சிலர் கணேசன், பொறியாளர் சுப்பிரமணியன், மாநகர் நல அலுவலர்கள் முத்துக்குமார், செபாஸ்டின், சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி பாலமுருகன் முகமது அனிபா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.






