என் மலர்
நீங்கள் தேடியது "Charge theft in hotels"
- நகர் பகுதியில் உள்ள அனைத்து ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் முழுவதும் நிரம்பி விட்டது.
- இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விடுதி உரிமை யாளர்கள் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி லாபம் பார்க்கின்றனர்
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
தற்போது காலாண்டு மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
பில்லர்ராக், மோயர்பா ய்ண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, ேராஜா பூங்கா, நட்சத்திர ஏரி உள்ளிட்ட அனைத்து இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் மலைச்சாலை மற்றும் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நகர் பகுதியில் உள்ள அனைத்து ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் முழுவதும் நிரம்பி விட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் வில்பட்டி, அட்டுவம்பட்டி, நாயுடுபுரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளை தேடி சென்றனர்.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விடுதி உரிமை யாளர்கள் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி லாபம் பார்க்கின்றனர். 24 மணி நேரத்துக்கு பதிலாக 10 மணி நேரம் மட்டுமே கணக்டும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த கட்டண விபரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படுவதில்லை.
ஓட்டல்களில் விலை பட்டியல் இல்லை. சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டுகி ன்றனர். குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட வரும் பொதுமக்கள் இதுபோன்ற செயல்களால் விரக்தி அடைந்து திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
இணையதளத்தில் பதிவு செய்து ஓட்டல் மற்றும் தங்கும் விடுதிக்கு வருபவர்களுக்கு ஜி.எஸ்.டி. கட்டணத்துடன் சரியான கட்டணம் வசூலிக்கப்ப டுகிறது. ஆனால் புறநகர் பகுதியில் அனுமதியின்றி 300க்கும் மேற்பட்ட விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரூ.2 ஆயிரம் வாடகைக்கு விடப்படும் அறைகள் ரூ.5 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. அதற்கு முறையான ரசீது வழங்குவது கிடையாது. அடாவடி வசூலால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
உணவகங்களில் விலை பட்டியல் அதிகாரிகளின் செல்போன் எண்கள் வைக்க வேண்டும் என்பது விதியாகும். அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறாக உணவக ங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் நடைபெறும் கட்டண கொள்ளையை அதிகாரிகள் கண்டும் காணாமலும் உள்ளனர். பெயர் அளவுக்கு சோதனை செய்து விட்டு நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் அனுமதி பெறாத காட்டேஜ்கள் தங்கள் இஷ்டத்துக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்கின்றனர். ரசீது கொடுக்காததால் முறையாக வரி செலுத்துவதில்லை. இதனால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






