என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vishwakarma Guru Jayanti"

    • நத்தத்தில் விஸ்வகர்மா தமிழ்நாடு தச்சு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விஸ்வகர்மா குரு ஜெயந்தி விழா நடந்தது.
    • விஸ்வகர்மா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நத்தம்:

    நத்தத்தில் விஸ்வகர்மா தமிழ்நாடு தச்சு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விஸ்வகர்மா குரு ஜெயந்தி விழா நடந்தது. இதற்கு வட்டார தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். செயலாளர் செல்லப்பா, பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ., நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விஸ்வகர்மா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் வேலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், வட்டார துணை தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் மாணிக்கம், ஆலோசகர்கள் கணபதி, கேசவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கபட்டது.

    ×