என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தம் அருகே விபத்தில் 4 பேர் காயம்
    X

    கோப்பு படம்.

    நத்தம் அருகே விபத்தில் 4 பேர் காயம்

    • மதுரை- நத்தம் 4 வழிச்சாலையில் உள்ள வலையபட்டி பிரிவு பகுதியில் திரும்பிய போது மதுரையில் இருந்து நத்தம் நோக்கி வந்த கார் அவர்கள் மீது மோதியது.
    • இதில் கீழே தவறி விழுந்த அவர்கள் பலத்த காயமடைந்தனர்.

    நத்தம்:

    நத்தம் அருகே எல்.வலையபட்டியை சேர்ந்தவர் அழகன்(வயது75). இவர் சொந்த வேலையாக வேம்பரளி பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் தனது மனைவி, பேரனுடன் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். வண்டியை லோகேஸ்வரன் ஓட்டி வந்தார்.

    இந்நிலையில் மதுரை- நத்தம் 4 வழிச்சாலையில் உள்ள வலையபட்டி பிரிவு பகுதியில் திரும்பிய போது மதுரையில் இருந்து நத்தம் நோக்கி வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் கீழே தவறி விழுந்த அவர்கள் பலத்த காயமடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் காயமடைந்த அழகன், அழகுநாச்சி, (70) லோகேஷ்வரன் (16) ஆகியோரை சிகிச்சைக்காக நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×