என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருந்தகங்களில் கண்காணிப்பு கேமரா"

    • குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 133-ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
    • கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் 1940 மற்றும் விதிகள் 1945இல் அட்டவணைகளில் குறிப்பிட்டுள்ள அனைத்து மருந்ததங்களிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 133-ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

    தவறும் பட்சத்தில் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் அல்லது மருந்து ஆய்வாளர் ஆய்வின் போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    ×