என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கறிக்கடை, உணவகங் களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 3.5 கிலோ மீன், கோழிக்கறி ஆகியவற்றை பறிமுதல் செய்து, கடை உரிமையாளருக்கு ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது.

    வத்தலக்குண்டு :

    வத்தலக்குண்டு, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கறிக்கடை, உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே உள்ள மீன் கடையில் ஆய்வு மேற்கொண்ட போது பழைய மீன்கள், கோழிக்கறி ஆகியவை மசாலா தடவி இரவு நேர விற்பனைக்கு குளிர்சாதன பெட்டிக்குள் வைத்திருப்பதை உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் கண்டறிந்தார்.

    இது போன்ற காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரித்து 3.5 கிலோ மீன், கோழிக்கறி ஆகியவற்றை பறிமுதல் செய்து, கடை உரிமையாளருக்கு ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது.

    • கடந்த 3 நாட்களாக காலை, மாலை, இரவு நேரங்களில் அறிவிக்கப்படாமல் திடீர் திடீரென அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
    • மின்தடையால் இரவு நேரங்களில் கொசு தொல்லையால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

    நத்தம்:

    நத்தம், செந்துறை, சிறுகுடி ஆகிய துணை மின் நிலையத்திலிருந்து சிறுகுடி, ஊராளிபட்டி, நத்தம், கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்க ளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக காலை, மாலை, இரவு நேரங்களில் அறிவிக்கப்படாமல் திடீர் திடீரென அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இது குறித்து மக்கள் கூறுகையில் குறைந்த அளவு மின்சாரத்தால் வீட்டில் உள்ள மிக்ஸி, குக்கர், பிரிட்ஜ், டிவி உள்பட எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் பொருட்கள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.

    மேலும் மின்சாரத்தை மட்டும் நம்பி தொழில் நடத்தும் வணிக நிறுவன ங்கள், பின்னலாடை தொழில் செய்யும் நிறுவன ங்கள், மாவு அரைக்கும் இயந்திரம் வைத்திருப்ப வர்கள் திடீரென மின்சாரம் நிறுத்தப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் இயந்திரங்களும் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால் தொழிலாளர்க ளும் குறித்த நேரத்தில் பணிகளை செய்து முடிக்க முடியாத நிலை உள்ளது.

    மின்தடையால் இரவு நேரங்களில் கொசு தொல்லையால் மக்கள் மிகவும் அவதிப்படு கின்றனர். மேலும் இரவு நேரங்களில் மின்விசிறி இல்லாத காரணத்தினால் குழந்தைகளும் வியர்வையில் நனைந்து தூங்க முடியாத அவல நிலை உள்ளது. அலுவலக நேரங்களில் மின்தடையால் பணியா ளர்கள் சிரமப்படுகின்றனர். மின்தடைக்கான காரணம் தெரியாமல் புலம்புகின்ற னர். எனவே இனிவரும் நாட்களில் மின்தடை ஏற்படாமல் இருக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்தால், ஒரு வார காலத்திற்குள் ஆத்தூர் காமராஜர் அணை நிரம்பி தண்ணீர் மறுகால்பாயும் நிலை உள்ளது.
    • அணைக்கு தண்ணீர் வரத்து தொடங்கியதால், இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ப்பகுதியான தாண்டிக்குடி, ஆடலூர், பன்றிமலை, பண்ணைக்காடு, புல்லாவெளி பகுதியில் மழை பெய்தால் செம்பட்டி அருகே உள்ள ஆத்தூர் காமராஜர் அணைக்கு மழை நீர் வரும்படி இயற்கை யாகவே மலையில் வா ய்க்கால்கள் அமைந்துள்ளன.

    ஆத்தூர் காமராஜர் அணை யின் மொத்த கொள்ளளவு 23.5 அடியாகும். திண்டுக்கல் மாநகராட்சி, சின்னா ளபட்டி, சித்தைய ன்கோட்டை பேரூராட்சிகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு 3 முறை அணை நிரம்பி மறுகால் பாய்ந்தது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையினால் அணை க்கு தண்ணீர் வருவதால் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்றைய நிலவரப்படி 16 அடி நீர் மட்டம் உள்ளது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்தால், ஒரு வார காலத்திற்குள் ஆத்தூர் காமராஜர் அணை நிரம்பி தண்ணீர் மறுகால்பாயும் என ஆத்தூர் நீர்பாசன விவசாயிகள் கூறுகின்றனர். அணைக்கு தண்ணீர் வரத்து தொடங்கியதால், இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வக்கம்பட்டியில் ரேசன்க டையை திறக்க அமைச்சர் இ.பெரியசாமி உத்தர விட்டதையடுத்து அதன் திறப்பு விழா நடைபெற்றது.
    • வருமான வரி செலுத்து வோர் தவிர, மற்ற அனைவருக்கும் கண்டிப்பாக ரூ.1000 கிடைக்கும். விடுபட்டவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என பேசினார்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று ரேசன் பொரு ட்களை வாங்கி வந்தனர். தங்கள் பகுதியில் ரேசன் கடையை திறக்க வேண்டும் என அமைச்சர் இ.பெரிய சாமியிடம் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வக்கம்பட்டியில் ரேசன்க டையை திறக்க அமைச்சர் இ.பெரியசாமி உத்தர விட்டதையடுத்து அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட திட்ட அலுவலர் திலகவதி தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர் பத்மா வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பேட்ரிக் பிரேம்குமார் வரவேற்றார்.

    விழாவில் ரேசன் கடையை திறந்து வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது:-

    இந்தியாவிலேயே தமிழ கத்தில்தான் கூட்டுறவு த்துறை சிறப்பாக செயல்படு கிறது. கடந்த 12-வருடங்க ளுக்கு முன்பு தி.மு.க ஆட்சியின் போது வருவா ய்துறை அமைச்சராக இருந்தநான் கிராமங்கள் தோறும் ரேசன் கடையை திறக்க உத்தரவிட்டதால் 300 குடும்ப அட்டை உள்ள கிராமங்களில் கூட பகுதி நேர நியாயவிலைக்கடைகள் திறக்கப்பட்டன. தற்போது மீண்டும் தி.மு.க ஆட்சியில் ஆத்தூர் தொகுதியில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ரேசன் கடைகள் திறக்கப்பட்டு ள்ளன. தற்போது இப்பகுதியில் புதிய ரேசன் கடை திறக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் இவர்களுக்கு சிரமமின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதி பொது மக்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்ககூடிய வகையில், தனியார் மற்றும் அரசு ஆஸ்பஸ்த்திரி அமைய உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறுவோர் மற்றும் வருமான வரி செலுத்து வோர் தவிர, மற்ற அனை வருக்கும் கண்டிப்பாக ரூ.1000 கிடைக்கும். விடுபட்டவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆத்தூர் ஒன்றிய தி.மு.க செயலா ளர்கள் ராமன், முருகேசன், தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், பொது விநியோ கதிட்ட துணைப்பதிவாளர் அன்புக்கரசன், பித்தளை ப்பட்டி கூட்டுறவு வங்கி செயல் ஆட்சியர் பொன்னு ச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பித்தளைப்பட்டி கூட்டுறவு வங்கி மேலாளர் சுப்பையா நன்றி கூறினார்.

    • சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தொகுதி மறுவரையறை செய்ய முடியாது.
    • பா.ஜ.க தமிழகத்தில் ஒரு நிலைபாட்டிலும், கர்நாடகாவில் வேறு நிலைபாட்டிலும் உள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் இன்று திண்டுக்கல், தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வாக்குச்சாவடி வட்டார, நகர, நிர்வாகிகளின் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து மோடி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளதாக பெருமைப்பட்டு கொள்கிறார். பாராளுமன்றத்தில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டாலும் தொகுதி வரையறை முடிந்த பிறகுதான் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் இந்தி பேசும் பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பா.ஜ.க சூழ்ச்சி செய்கிறது. மேலும் தனக்கு வாக்குவங்கி குறைவாக உள்ள தமிழ்நாடு, கேரளா போன்ற தென்மாநிலங்களில் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் திட்டம் வகுத்துள்ளது.

    தனக்கு சாதகமான மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பா.ஜ.க. எடுத்துவரும் முயற்சியை இந்தியா கூட்டணி கண்டிக்கிறது. மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதில் காங்கிரசுக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோதே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

    உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. தற்போது பா.ஜ.க தனது ஆட்சியின் நிறைவு காலத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி அதன்மூலம் வாக்குகளை பெற முடியுமா என திட்டம் வகுத்துள்ளது.

    சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தொகுதி மறுவரையறை செய்ய முடியாது. அதனால்தான் 33 சதவீத இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். வருகிற பாராளுமன்ற தேர்தலை அதிபர் தேர்தல் போல நடத்த மோடி முயன்று வருகிறார்.

    காவிரி பிரச்சனையை பொறுத்தவரையில் ஆணையமும், உச்சநீதிமன்றமும் தெளிவான தீர்ப்பினை வழங்கியுள்ளது. வறட்சியான காலகட்டங்களிலும், வெள்ள காலகட்டத்திலும் தமிழகத்திற்கு வழங்கவேண்டிய தண்ணீரை பங்கீடு செய்து வழங்க அறிவுறுத்தி உள்ளது. ஆனால் கர்நாடக அரசு இதனை பின்பற்றவில்லை. காவிரி நீர் பிரச்சனையில் நாங்கள் தமிழக அரசின் நிலைபாட்டிலேயே உள்ளோம்.

    ஆனால் பா.ஜ.க தமிழகத்தில் ஒரு நிலைபாட்டிலும், கர்நாடகாவில் வேறு நிலைபாட்டிலும் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொழிலாளி மது போதையில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
    • ரெயில் மோதியதில் தொழிலாளியின் கால்கள் துண்டானது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஆசாரி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் சுப்புராசு (45). சென்ட்ரிங் தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக மது போதைக்கு அடிமையாகி, திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் உள்ள போதை அடிமை மீட்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சீலப்பாடி டாஸ்மாக் கடை அருகே மீண்டும் மது போதையில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு 2 கணுக்கால்கள் துண்டானது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற மருத்துவ உதவியாளர்கள் இவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.
    • இந்த முகாமில், 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. முகாமில், மாற்றுத்திறனாளிக்கான 35 கிலோ அரிசி, வீட்டு மனைக்கான பட்டா வேண்டி மனு அளித்தனர்.

    மேலும், மத்திய அரசு வழங்கும் தனித்துவ அடையாள அட்டை வழங்க வேண்டி மனு அளித்தனர். முகாமில், நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, சமூக நலத்துறை தனி தாசில்தார் ஆறுமுகம் மனுக்களை பெற்றனர்.

    மேலும், மருத்துவ பரிசோதனை செய்து மாற்றுத்திறனாளிகளின் உடல் நிலைக்கேற்ப அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாமில் துணை தாசில்தார் அபிராமி, மண்டல துணை தாசில்தார்கள் பாலகுருநாதன், மூர்த்தி, நிலக்கோட்டை வருவாய் ஆய்வாளர் பிரியங்கா,

    கிராம நிர்வாக அலுவலர் கலா, டிசம்பர் 3 இயக்கம் மாநில துணைத்தலைவர் மோகன்ராஜ் மற்றும் எலும்பியல் மருத்துவர், நரம்பு மண்டல மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்கினர். இந்த முகாமில், 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    • மோயர் சதுக்கம் பகுதியில் நேற்று 5க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வந்து கடைகள் முழுவதையும் சேதப்படுத்தி உள்ளது.
    • சேதமடைந்த கடைகளை கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் , துணைத் தலைவர் ஆகியோர் வனத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது . இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர்.

    கொடை க்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரதான சுற்றுலா பகுதியாக உள்ள மோயர் சதுக்கம் பகுதியில் நேற்று 5க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வந்து கடைகள் முழுவதையும் சேதப்படுத்தி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு இரண்டு நாட்களாக தடை நீடித்து வருகிறது. தொடர்ந்து யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் காட்டு யானைகளால் சேதமடைந்த கடைகள் மற்றும் சுற்றுலா பகுதியை கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் வனத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர் . மேலும் யானையை விரட்டும் பணியில் அதிகாரிகள் பாதுகாப்பாக செயல்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.

    • மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பித்த சில பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
    • புதிதாக விண்ணப்பம் செய்பவர்கள் இ-சேவை மையங்களில் இலவசமாக விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது

    செம்பட்டி:

    தமிழகத்தில் கடந்த 15-ந் தேதி 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு உரிமைத் தொகை ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்த சில பெண்களின் விண்ண ப்பங்கள் நிராகரிக்கப்ப ட்டன.

    தமிழக அரசு தகுதியான வர்கள் விடுபட்டிருந்தால் அந்தந்த தாலுகா அலுவல கத்தில் மேல்முறையீடு செய்யலாம். புதிதாக விண்ணப்பம் செய்பவர்கள் இ-சேவை மையங்களில் இலவசமாக விண்ணப்பிக்க லாம் என அறிவித்துள்ளது.

    அதன்படி ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஏராளமான பெண்கள் குவிந்தனர். உரிமை த்தொகை திட்டத்தில் தாங்கள் விடுபட்டதற்கான காரணங்களை அறிந்து கொண்டு மேல்முறையீடு செய்தனர். சிலருக்கு விண்ணப்பம் பரிசீலனை யில் உள்ளதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தாலுகா அலுவலகத்தில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

    • வேடசந்தூர் டி.எஸ்.பி துர்காதேவி உத்தரவின்பேரில் வடமதுரை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
    • விசாரணையில் ரங்கநாதன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கூம்பூர் ராமநாயக்கனூர் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன்கள் ரங்கநாதன்(24), கருப்பசாமி(21). இவர்கள் 2 பேரும் பக்கத்து கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றனர். அப்போது சில நாட்கள் அங்கேயே தங்கினர்.

    உறவினரின் 9 மற்றும் 5 வயது மகள்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ரங்கநாதன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் 2 பள்ளி குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் சிறுமிகள் உடல் சோர்ந்து காணப்பட்டனர்.

    இதைஅறிந்ததும் அவர்களின் தாயார் 2 சிறுமிகளையும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்து சென்றார். அப்போது அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது டாக்டர்கள் மூலம் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் போலீசில் புகார் அளித்தார்.

    வேடசந்தூர் டி.எஸ்.பி துர்காதேவி உத்தரவின்பேரில் வடமதுரை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் ரங்கநாதன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வேடசந்தூர் சிறையில் அடைத்தனர்.

    • தற்போது கொடைக்கானலுக்கு வந்த ராமாராவ் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
    • போலீசார் விஜயகுமார், ரகு, பிரபுதேவா ஆகிய 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    கொடைக்கானல்:

    ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ராமாராவ்(60). இவர் கடந்த 37 ஆண்டுகளாக கொடைக்கானலில் தங்கி நிலம் வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 120 ஏக்கர் நிலம் மேல்மலை கிராமமான கிளாவரை பகுதியில் அக்கரைகாட்டில் உள்ளது.

    அங்கு இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு தனது சொந்த பிரச்சனை காரணமாக ராமாராவ் குடும்பத்துடன் ஆந்திரா சென்றுவிட்டார். அப்போது தனது 120 ஏக்கர் நிலத்தை வேலி அமைத்து பார்த்து கொள்ளுமாறு நாயுடுபுரத்தை சேர்ந்த விஜயகுமாரிடம் தெரிவித்து சென்றார்.

    இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட விஜயகுமார் மற்றும் அவரது நண்பர் ரகு ஆகியோர் அந்த நிலத்தில் விவசாயம் செய்து மகசூல் எடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது கொடைக்கானலுக்கு வந்த ராமாராவ் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    எனவே தனது நிலத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு அவர் கூறினார். அதற்கு விஜயகுமார், ரகு மற்றும் பா.ஜ.க பிரமுகர் பிரபுதேவா ஆகியோர் சேர்ந்து ராமாராவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் அவரை இனிமேல் நிலத்திற்குள் வரக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீசில் ராமாராவ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விஜயகுமார், ரகு, பிரபுதேவா ஆகிய 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் இந்த வழக்கில் சிலரை தேடி வருகின்றனர்.

    • கட்சி நிர்வாகிகள் பா.ஜ.க கூட்டணி குறித்தும், அண்ணாமலை குறித்தும் தேவையற்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
    • விடுதியில் தங்கியிருந்து தனக்கு நெருக்கமான ஒருசில அரசியல் கட்சியினரிடம் மட்டும் ஜெயக்குமார் பேசி வருகிறார்.

    கொடைக்கானல்:

    முன்னாள் முதல்வர் அண்ணா குறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க கூட்டணி இல்லை எனவும், தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முடியாது என்றும் கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

    இது தமிழக அரசியல் மட்டுமின்றி தேசிய அளவிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பா.ஜ.க கூட்டணி குறித்தும், அண்ணாமலை குறித்தும் தேவையற்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

    இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். தான் கொடைக்கானலில் இருப்பதை இணையதளத்தில் பதிவு செய்ததைதொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் செய்தியாளர்கள் அவரை சந்திக்க திரண்டனர்.

    ஆனால் அவர் யாரையும் சந்திக்கவில்லை. விடுதியில் தங்கியிருந்து தனக்கு நெருக்கமான ஒருசில அரசியல் கட்சியினரிடம் மட்டும் ஜெயக்குமார் பேசி வருகிறார். தற்போது அவர் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானல் வந்துள்ளதாகவும், கட்சி நிர்வாகிகள், செய்தியாளர்கள் யாரும் அவரை சந்திக்க வேண்டாம் எனவும் உதவியாளர் தெரிவித்தார்.

    ×