என் மலர்
திண்டுக்கல்
- தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.
- அய்யலூர் சந்தையில் 15 கிேலா கொண்ட பெட்டி ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனையானது.
வடமதுரை:
திண்டுக்கல் அருகே அய்யலூரில் தக்காளிக்கென தனி சந்தை உள்ளது. மாலை நேரத்தில் நடைபெறும் இந்த தக்காளி சந்தைக்கு சுற்று வட்டார பகுதிகளான கொம்பேறிபட்டி, கல்பட்டிசத்திரம், குருந்தம்பட்டி, கடவூர், நடுப்பட்டி, மோர்பட்டி, தீர்த்தாகிழவனூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தக்காளிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
வெளி மாவட்ட வியாபாரிகள் அதிகளவில் வந்து கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடமாநிலங்களில் கனமழை பெய்ததால் தக்காளி வரத்து குறைந்தது. இதனால் 1 கிலோ ரூ.200 வரை விற்பனையானது. அப்போது பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. அய்யலூர் சந்தையில் 15 கிேலா கொண்ட பெட்டி ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனையானது. 1 கிலோ ரூ.5 க்கு மட்டுமே விற்பனையானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
மேலும் வியாபாரிகளும் தக்காளி வாங்க ஆர்வம் காட்டாததால் பெருமளவு தேக்கமடைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் தக்காளியை சாலையோரம் கொட்டி சென்றனர்.
- கருத்து கேட்பு கூட்டம் வருகிற 26ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இணை ஆணையர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
- தொழிற்சங்க பிரதிநிதிகள், வேலையளிப்போர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க லாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
1948 ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி வேலை பழகு நர்களை தவிர பஞ்சாலை தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யும் பொருட்டு கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் திண்டுக்கல் தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் அசோசியேசன் கோபால கிருஷ்ணன் உட்பட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் உள்ளனர். இந்த குழுவினர் திண்டுக்கல் பகுதியில் பஞ்சாலை தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழி லாளர்களை நேரடியாக சந்தித்து விபரங்கள் பெற உள்ளனர்.
இக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம் வருகிற 26ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் இணை ஆணையர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் தொழி லாளர்கள் , தொழிற்சங்க பிரதிநிதிகள், வேலை யளிப்போர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் கருத்து க்களை தெரிவிக்க லாம் என அறிவிக்கப்பட்டு ள்ளது.
- வீரக்கல் குரும்பபட்டி பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசார் 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். 21 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே வீரக்கல் குரும்பபட்டி பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமை யில்,சப்-இன்ஸ்பெக்டர்கள் அழகுபாண்டி, பாலசுப்பிர மணியன், எஸ்.பி. தனிப்பிரிவு காவலர் வினோத் கண்ணன் மற்றும் பாலசுப்பிரமணியன், ரவி ச்சந்திரன், ஜெய ச்சந்திரன், செந்தில், சிவபெருமாள் ஆகியோர் கொண்ட போலீ சார் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சோலைக்காடு பகுதியில் 2 பெண்கள் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் சந்தேகத்துக்கிடமாக பதுங்கி இருந்தனர்.போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர்.போலீசார் தப்பி ஓடிய 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் காலாடிபட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 31),முருகன் (43),வீரக்கல் குரும்ப பட்டியைச் சேர்ந்த பிரபு (34) என்பதும் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக வைத்திருந்த தும் தெரியவந்தது.
இதை யடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களி டமிருந்து 21 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த வழக்கில் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய வட்டப்பாறையைச் சேர்ந்த செவ்வந்து (58), ராதா(38) ஆகிய 2 பெண்களை போலீ சார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- தமிழகத்தில் மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
- விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின்வேலிகளில் முறைகேடாக மின்சாரம் பாய்ச்சப்படுகிறதா என ஆய்வு நடத்தினர்.
பழனி:
தமிழகத்தில் மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு மின்வேலிகள் விதிகள் -2023 அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள மின்வேலி, சோலார் மின்வேலி குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து கொழுமம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பழனி, ஆண்டிபட்டி, பொந்து ப்புளி, பாப்பம்பட்டியில் வனப்பகு தியை ஒட்டியுள்ள பகுதி களில் திருப்பூர் வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம், கொழுமம் வனச்சரக அலுவலர் பிரபு, பழனி மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் ஆனந்த், சிவக்குமார் ஆகி யோர் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின்வேலிகளில் முறைகேடாக மின்சாரம் பாய்ச்சப்படுகிறதா என ஆய்வு நடத்தினர்.
மேலும் வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்து விவ சாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
- நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கன மழை பெய்து வந்தது.
- பலத்த மழையால் சேதமடைந்து திடீரென சிமெண்டாலான மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது மாலை முதலே நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கன மழை பெய்து வந்தது. அவ்வப்போது இடி மின்னல் அதிக அளவில் இருந்தது.
அதில் நத்தம் அருகே பாத சிறுகுடியைச் சேர்ந்த ஆண்டிச்சாமி என்பவரின் காலனி வீடு பலத்த மழையால் சேதமடைந்து திடீரென சிமெண்டாலான மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதில் அவரது மனைவி முனியம்மாள் (வயது 43) என்பவரின் காலில் சிமெண்ட் தளம் விழுந்ததால் பலத்த காயமடைந்தார்.
தகவல் அறிந்த நத்தம் போலீசார் காயமடைந்தவரை 108 வாகனம் மூலம் நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
- மழையால் புல்லா வெளி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
- இப்பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அழகாகவும் அமைதியாகவும் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் விழுந்து வருகிறது.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பெரும்பாறை, கானல்காடு, மஞ்சள்பரப்பு, நல்லூர்காடு, தடியன்கு டிசை, குப்பம்மாள்பட்டி, கல்லக்கிணறு உள்ளிட்ட இடங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் புல்லா வெளி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த தண்ணீர் ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்கிறது. இப்பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அழகாகவும் அமைதியாகவும் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் விழுந்து வருகிறது.
இந்த அருவிக்கு ஏரா ளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக மதுரை, திண்டுக்கல், வத்தல குண்டு, தேனி உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த ஏராள மானோர் கார், வேன், ஜீப், மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்து அருவியை பார்த்து ரசிப்ப தோடு குளித்து மகிழ்கின்றனர்.
- இவர் கொட்டாம்பட்டி சாலையில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார்.
- இவரது கடையில் நல்லபாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்ததை.பார்த்த அவர் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
நத்தம்:
நத்தத்தை சேர்ந்தவர் பெரியநாச்சியப்பன்(45)). இவர் கொட்டாம்பட்டி சாலையில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நல்லபாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதை பார்த்த அவர் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லெட்சுமணன் உள்ளிட்ட வீரர்கள் கடைக்குள் இருந்த 5 அடி நீளமுள்ள நல்லபாம்பை லாவகமாக கருவி மூலம் பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கபட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
- விதவிதமான கொலு பொம்மைகள் விற்பனை திண்டுக்கல்லில் மும்முரமாக நடந்து வருகிறது.
- ரூ.100 முதல் ரூ.6 ஆயிரம் வரை பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. செட் பொம்மைகள் ரூ.850 முதல் ரூ.3 ஆயிரம் வரை உள்ளது. இதனை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
திண்டுக்கல்:
புரட்டாசி மாதம் வரும் மஹாளய அமாவாசைக்கு மறு நாள் பிரதமை திதியில் தொடங்கி 9 நாட்கள் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும். அப்போது கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம். வீடுகளில் அமாவசை தினத்தன்றே படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு கொலு பொம்மைகள் வைப்பதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கும்.
நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களும் அம்மனுக்கு விதவிதமான நெய்வேத்தியங்கள் செய்து உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை வீட்டிற்கு அழைத்து சிறப்பு வழிபாடு செய்து பிரசாதங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும்.
அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா அடுத்த மாதம் 15ம் தேதி தொடங்குகிறது. இதற்காக தற்போதே விதவிதமான கொலு பொம்மைகள் விற்பனை திண்டுக்கல்லில் மும்முரமாக நடந்து வருகிறது. அஷ்டலட்சுமி, கார்த்திகை பெண்கள், தசாவதாரம், மீனாட்சி திருக்கல்யாணம், ராமர் பட்டாபிஷேகம் உள்ளிட்ட செட் பொம்மைகள், மகாத்மா காந்தி, பாரதியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் பொம்மைகளும் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.
வருடந்தோறும் புதுவகையான செட் பொம்மைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றனர். அதன்படி இந்த நவராத்திரிக்கு ஐஸ்வர்ய ஈஸ்வரன், நவ நரசிம்மர், தத்தாத்ரேயர் என்ற புதிய செட் பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ரூ.100 முதல் ரூ.6 ஆயிரம் வரை பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. செட் பொம்மைகள் ரூ.850 முதல் ரூ.3 ஆயிரம் வரை உள்ளது. இதனை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
இது குறித்து பெண்கள் கூறுகையில், நவராத்திரி விழா பெண்கள் வழிபட கூடிய முக்கிய விரதங்களில் ஒன்று. 9 நாட்கள் விரதமிருந்து, ஏழை எளியவர்களுக்கு முடிந்ததை தானம் செய்து வழிபடும் போது குடும்பத்தில் சுபிட்சம் மற்றும் செல்வம், நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு அமையும் என்பது ஐதீகம். அதனால் நவராத்திரி விரதத்தை பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
- திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது.
- மாவட்டத்தில் மொத்தம் 241 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. நேற்று திண்டுக்கல் நகரில் மாலை 6.30 மணிக்கு ெதாடங்கிய மழை சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது.
பின்னர் இரவு வரை விட்டுவிட்டு மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திண்டுக்கல் 44.6, கொடைக்கானல் ரோஸ்கார்டன் 14, பழனி 3, வேடசந்தூர் 87, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 71, காமாட்சிபுரம் 9.6, பிரையண்ட் பூங்கா 12.4 மி.மீ மழையளவு பதிவானது.
- கல்லறை தோட்டத்தில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி யிருந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை.
- இறந்த மூதாட்டியின் உறவினர்கள் உடலை நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் அந்தோணியார் தெருவில் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான கல்லறை தோட்டம் உள்ளது. இங்கு சவரியார்பாளையம், தோமையார்புரம், ஏ.பி.நகர், ஞானபிரகாசியார்புரம், அந்தோணியார் தெரு பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் இறந்தவர்களின் உடல்களை புதைத்து வருகின்றனர்.
சுமார் 600 கல்லறைகள் உள்ள இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பேகம்பூரில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீர் இங்கு தேங்கி குளம்போல் இருந்தது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாகவும், தண்ணீர் அதிகரித்து கல்லறைக்குள் செல்ல முடியாத நிலையில் இருந்தது.
இந்நிலையில் இன்று சவரியார்பாளையத்தை சேர்ந்த செபஸ்தியம்மாள்(85) என்பவர் இறந்துவிட்டார். அவரது உடலை புதைப்பதற்காக கல்லறைக்கு எடுத்து வந்தனர். ஆனால் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கியிருந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் இறந்தவர்களின் உறவினர்கள் பிணத்தை நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் செழியன் தலைமையில் நகர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் பார்த்து கொள்வதாகவும் உறுதி அளித்தனர். அதனைதொடர்ந்து இறந்த மூதாட்டியின் உடலை அவர்கள் அடக்கம் செய்து சென்றனர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- வீடு புகுந்து பணத்தை திருடியவர்கள் குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.
- சிசிடிவி காமிரா காட்சிகள் மூலம் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,25,000 பணம், கார் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் கோவிந்தாபுரம் நாயக்கர் புது தெரு 3 வது தெருவை சேர்ந்தவர் சரண்யா.(வயது 37).இவரது வீட்டில் கடந்த 12ந் தேதி இரவு வீட்டின் கதவை உடைத்து பணம் ரூ 1,50,000 த்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.இது குறித்து திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து டவுன் டி.எஸ்.பி.கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில்,நகர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில்,சப் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி,நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன்,ஜார்ஜ் எட்வர்டு,தலைமை காவலர்கள் ராதாகிருஷ்ணன்,முகம்மது அலி, விசுவாசம்,சக்திவேல் ஆகியோர் இணைந்து விசாரணை நடத்தினர்.அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அந்த காட்சியில் பதிவான வாலிபர்களின் புகைப்படம் மூலம் போலீசார் அவர்களை தேடினர்.
அதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் மணிகண்டன்,சக்திவேல் ஆகியோர் உதவியுடன் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் சீலப்பாடியைச் சேர்ந்த முகமது பிலால் (வயது 30),கோபால் நகரைச் சேர்ந்த நாகேந்திரன் (24)ஆகிய 2 பேர் என்பது தெரிய வந்தது.இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,25,000 பணம்,கார் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர் முகமது பிலால்,நாகேந்திரன் ஆகிய 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், 30 சதவீத தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- நடப்பு ஆண்டு 2023 விற்பனை குறியீடாக ரூ.85 லட்சம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், 30 சதவீத தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை, கலெக்டர் பூங்கொடி குத்துவிளக்கு ஏற்றி ெதாடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முதல் விற்பனையை தொடங்கி வைத்து கலெக்டர் தெரிவித்ததாவது:-
கோ-ஆப்டெக்ஸ், என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தொடர்ந்து 88 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது. இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் பேராதரவும்தான் முக்கிய காரணம் ஆகும்.
கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டுதோறும், பண்டிகை காலங்களில் சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
பண்டிகையை முன்னிட்டு பல வண்ணங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் பலவித வடிவமைப்புகளில் ஆர்கானிக் புடவை ரகங்கள். காஞ்சிபுரம் பட்டு, சேலம் பட்டு, திருப்புவனம் பட்டு. கோயம்புத்தூர் மென்பட்டு சேலைகள், கண்டாங்கிச் சேலைகள், கைத்தறி சுங்கிடி சேலைகள், காஞ்சி காட்டன், கோவை கோரா காட்டன், சேலம் காட்டன், பரமக்குடி காட்டன், திண்டுக்கல் காட்டன் மற்றும் அருப்புகோட்டை காட்டன் சேலைகள் ஏராளமாக உள்ளன. மேலும் நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக லினன் சட்டைகள், லினன்/பருத்தி சட்டைகள் லுங்கிகள் மற்றும் வேட்டிகள் உள்ளன. மேலும் மகளிருக்காக சுடிதார் ரகங்கள், நைட்டிகள் மற்றும் குர்தீஸ்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை இணைய தளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.
திண்டுக்கல் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.44.68 லட்சம் அளவிற்கு மேற்கொள்ளப்பட்டது. நடப்பு ஆண்டு 2023 விற்பனை குறியீடாக ரூ.85 லட்சம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.






