நத்தம் அருகே வீடு இடிந்து விழுந்து பெண் காயம்

நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கன மழை பெய்து வந்தது.பலத்த மழையால் சேதமடைந்து திடீரென சிமெண்டாலான மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது மாலை முதலே நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கன மழை பெய்து வந்தது. அவ்வப்போது இடி மின்னல் அதிக அளவில் இருந்தது.

அதில் நத்தம் அருகே பாத சிறுகுடியைச் சேர்ந்த ஆண்டிச்சாமி என்பவரின் காலனி வீடு பலத்த மழையால் சேதமடைந்து திடீரென சிமெண்டாலான மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதில் அவரது மனைவி முனியம்மாள் (வயது 43) என்பவரின் காலில் சிமெண்ட் தளம் விழுந்ததால் பலத்த காயமடைந்தார்.

தகவல் அறிந்த நத்தம் போலீசார் காயமடைந்தவரை 108 வாகனம் மூலம் நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com