என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.
    • ஸ்கூட்டர் தீ பிடித்து மளமளவென எரிந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே மேல் எண்டபட்டியை சேர்ந்தவர் வடிவேல், விவசாயி. இந்நிலையில் இன்று காலை தனது நிலத்தில் பயிரிட்ட சாமந்தி பூக்களை தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எடுத்து கொண்டு தருமபுரி பூ மார்க்கெட்டில் கொண்டு சென்றார்.

    பின்னர் தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பிய போது தருமபுரியில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் ராமக்காள் ஏரி அருகே சென்றபோது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனை கண்ட வடிவேல் ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்தி இறங்கி பார்த்தபோது ஸ்கூட்டர் மளமளவென தீ பிடித்து எரிய தொடங்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக வடிவேல் ஸ்கூட்டரை சாலை ஓரம் நிறுத்தியதால் அவர் உயிர் தப்பினார்.

    இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீ பிடித்து எரிந்த ஸ்கூட்டர் மீது தண்ணீரை பீச்சி அடித்து அணைக்க முயற்சித்தனர். அதற்குள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முழுவதும் எரிந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது. இது குறித்து தருமபுரி டவுண் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஆதனூர் பகுதியில் டாஸ்மாக்‌ மதுக்கடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.
    • எந்த போராட்டத்திற்கு செல்கிறோம் என தெரியாமல் சென்றோம்.

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பென்னாகரம் அருகே உள்ள ஆதனூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து ஆதனூர் பகுதியில் 'டாஸ்மாக்' மதுக்கடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.

    பொதுவாக மதுக்கடை வேண்டாம், இருக்கும் மதுக்கடையை வேறு பகுதிக்கு மாற்றக்கோரியும் தான் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

    தற்போது மதுக்கடை வேண்டும் என பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த சம்பவம் வினோதத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் தர்மபுரியில் டாஸ்மாக் வேண்டும் என பெண்கள் போராடிய விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக போராட்டம் நடத்திய பெண்கள் கூறுகையில்,

    எந்த போராட்டத்திற்கு செல்கிறோம் என தெரியாமல் சென்றோம். தலைக்கு ரூ.300 கொடுத்து போராட்டத்திற்கு அழைத்து சென்றனர்.

    மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற பின்னரே போராட்டம் குறித்து தெரிந்தது. போராட்டத்திற்கு அழைத்து சென்றவர்கள் கூறியதை பேட்டியில் கூறினோம் என்று தெரிவித்தனர்.

    • தங்கள் பகுதியில் மதுபான கடை வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்.
    • 20 கி.மீ சென்று மதுபானங்களை வாங்க வேண்டி உள்ளதாக மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மதுபான கடைகளை மூடச்சொல்லி அடிக்கடி பொதுமக்கள் போராட்டம் நடத்துவது வழக்கம். ஆனால் தர்மபுரி மாவட்டத்தில் தங்கள் பகுதியில் மதுபானக் கடை வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 60-க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் இயங்கி வருகிறது.

    இந்நிலையில், தரம்புரியில் உள்ள நலப்பரம் பட்டி, கெட்டூர், பலஞ்சர அள்ளி, ஆதனூர், நல்லாம்பட்டி, வண்ணாத்திப்பட்டி ஆகிய 7 கிராம மக்கள் தங்கள் பகுதியில் மதுபான கடை வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

    தங்கள் பகுதியில் இருந்து 20 கி.மீ சென்றுதான் மதுபானங்களை வாங்க வேண்டி உள்ளதாக மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யாமல் விட்டுள்ளனர்.
    • உடல் உபாதைகள், தொற்று நோய் பரவும் அபாயம்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா மாநில காவிரி கரையோர பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெண் காட்டு யானை ஒன்று உயிரிழந்திருக்கிறது. இந்த யானையை கர்நாடகா மாநில வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யாமல் அப்படியே விட்டுள்ளனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அந்த யானை அடித்து வரப்பட்டு பிலிகுண்டுலு வழியாக மிதந்து வந்து தற்போது ஒகேனக்கல் அடுத்த ஆலம்பாடி பகுதியில் நடு ஆற்றில் உள்ளது.

    உயிரிழந்த காட்டு யானைக்கு பிரேத பரிசோதனை செய்து இருப்பதால் உடல் பாகங்கள் தண்ணீரில் கலந்து மாசு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இதனால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பயன்பெறும் கிருஷ்ணகிரி தருமபுரி மாவட்ட மக்கள் அந்த குடிநீரை பருகுவதால் உடல் உபாதைகள், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலங்களில் கலங்களான ஆற்று நீர் காரணமாக பல உடல் உபாதைகள் வயிற்று வலி, காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    தற்போது இந்த உயிரிழந்த யானை ஆற்றில் அடித்து வரப்பட்டதன் காரணமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீரை நம்பியுள்ள மக்கள் மீண்டும் உடல் உபாதைகளுக்கு ஆளாக வாய்ப்புள்ளது.

    எனவே கர்நாடகா வனத்துறையினர் உயிரிழந்த பிரேத பரிசோதனை செய்யப்பட்ட யானையை அப்புறப்படுத்தி வனப்பகுதியிலேயே அடக்கம் செய்து இருந்தால் இது போன்ற நிலை ஏற்பட்டு இருக்காது.

    இதனையடுத்து கர்நாடக வனத்துறையினர் ஆற்றில் மிதந்து கிடக்கும் யானையை மீட்டு கர்நாடகா வனப்பகுதியிலேயே அடக்கம் செய்ய உள்ளோம் என தமிழக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    உயிரிழந்த யானை பிரேத பரிசோதனை செய்த நிலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மூலம் குடிநீர் அருகும் மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • பாதுகாப்பு கருதி அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது.

    பென்னாகரம்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதை தொடர்ந்து 2 அணைகளில் இருந்தும் தமிழக காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வருகிறது.

    இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    இதன் காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. எனினும் பாதுகாப்பு கருதி அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது.

    இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து காலை நிலவரப்படி 30 ஆயிரம் கனஅடியானது.

    ஒகேனக்கலில் தொடர்ந்து 27-வது நாளாக அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க தடை நீடிக்கிறது.

    நீர்வரத்து 30,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    • கிராம மக்கள் கள்ளத்துப்பாக்கி வைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர்.
    • வனத்துறையினர் துப்பாக்கிகளை ஒப்படைத்த பொதுமக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம், ஏரியூர், உள்ளிட்ட பகுதிகள் வனத்துறையையொட்டிய கிராமங்கள் அதிக அளவில் உள்ளதால் தங்கள் விளை நிலத்துக்குள் வன விலங்குகள் உள்ளே நுழையாமல் இருக்க ஆங்காங்கே கிராம மக்கள் கள்ளத்துப்பாக்கி வைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர்.

    இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அனுமதியின்றி கள்ளத்துப்பாக்கி மூலம் வனவிலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட வனஅலுவலர் வனத்துறையினருக்கு உத்தரவிட்டார்.

    அவரது உத்தரவின் பேரில் பென்னாகரம், ஏரியூர் வன பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வன அலுவலர்கள் பொது மக்களிடம் சட்ட விரோதமாக உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்கும் பட்சத்தில் அவர்கள் மீது எவ்வித வழக்கும் பதியப்படாது என தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பென்னாகரம் பகுதியில் உள்ள ஏரிமலை கிராமத்தில் சட்ட விரோதமாக உரிமம் இல்லாத வைத்திருந்த 12 நாட்டு துப்பாக்கிகளை கிராம மக்கள் தாமாக முன்வந்து வன துறையிடம் ஒப்படைத்தனர். அவற்றை கைப்பற்றி வனத்துறையினர் நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைத்த பொதுமக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

    • சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
    • சின்னாறு பரிசல் துறையில் இருந்து மணல்திட்டு பகுதி வரை பரிசல் இயக்கப்படுகிறது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா மாநிலங்களில் மழையின் அளவு குறைந்ததன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீர் அளவு குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து நேற்று வினாடிக்கு 17,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

    இதனால் இன்று காலை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக நீடித்து வந்தன. மேலும் காவிரி கரையோர பகுதிகளில் ஆங்காங்கே நேற்று கனமழை பெய்ததால் காவிரி ஆற்றில் இன்னும் கூடுதலாக தண்ணீர் வரத்து கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால் தமிழக-கர்நாடகா எல்லையான பிலிக்குண்டுலுவில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீராலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையாலும் படிப்படியாக அதிகரித்து இன்று வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நீர்வரத்தானது கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீராலோ அல்லது ஆங்காங்கே காவிரி கரையோர பகுதிகளில் பெய்யக்கூடிய மழையினாலோ நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்ற போதிலும் சின்னாறு பரிசல் துறையில் இருந்து மணல்திட்டு பகுதி வரை பரிசல் இயக்கப்படுகிறது.

    தொடர்ந்து 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் ஆர்ப்பரித்து செல்வதால் சுற்றுலா பயணிகள் அருவிகளில், காவிரி ஆற்றில் குளிக்க 27-வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது.

    இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருகை தந்தனர். ஆனால், குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மேலும் நீர்வரத்து காவிரி ஆற்றில் அதிகரிப்பதும் குறைவதும் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவைப் பொறுத்து உள்ளது என மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கும் இளைஞர்களின் வாக்குகளை பெறவே தமிழ் புதல்வன் திட்டம் என குற்றம் சாட்டினார்.
    • தமிழ்ப் புதல்வன் என்பதற்கு பதிலாக திராவிட புதல்வன் என்று வைக்க முடியுமா என கேள்வி கேட்டுயுள்ளார்.

    தருமபுரி:

    கோவை அரசு கலைக்கல்லூரியில் இருந்து, நேற்று தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்தினை தெரிவித்தார்.

    உலக பழங்குடியினர் தினத்தை ஒட்டி, தருமபுரி மாவட்டம் அரூரில் நாம் தமிழர் கட்சி பழங்குடியினர் பாதுகாப்பு பாசறையின் சார்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் அவர் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கும் இளைஞர்களின் வாக்குகளை பெறவே தமிழ்ப் புதல்வன் திட்டம் என குற்றம்சாட்டிய சீமான், தமிழ்ப்புதல்வன் என்பதற்கு பதிலாக திராவிட புதல்வன் என்று வைக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

    திராவிட கட்சிகள் காசே இல்லாமல் கூட்டத்தை கூட்டினால் கட்சியை கலைத்துவிட்டு செல்வதாக சவால் விட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். நாதக, பாஜகவின் B டீம் அல்ல என்றும் திமுக தான் பாஜகவின் மெயின் டீம் என்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடகா அணிகளில் இருந்து நேற்று மீண்டும் நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.
    • மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. அதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகள் நிரம்பி அதில் இருந்து உபரி நீர் தொடர்ந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

    இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடி அளவில் இருந்து 2 லட்சம் கனஅடி அளவு வரை அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து நீர்வரத்து படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்தது நேற்று நிலவரப்படி வினாடிக்கு 8ஆயிரம் கன அடி வரை வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் கர்நாடகா அணிகளில் இருந்து நேற்று மீண்டும் நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தானது படிபடியாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்ற போதிலும் சின்னாறு பரிசல் துறையில் இருந்து மணல்திட்டு பகுதி வரை பரிசல் இயக்கப்படுகிறது.

    தொடர்ந்து 20 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் ஆர்ப்பரித்து செல்வதால் சுற்றுலா பயணிகள் அருவிகளில், காவிரி ஆற்றில் குளிக்க 26-வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மேலும் நீர்வரத்து காவிரி ஆற்றில் அதிகரிப்பதும் குறைவதும் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவைப் பொறுத்து உள்ளது என மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • 8000 கன அடியில் இருந்து 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
    • பரிசல் பயணம் துவங்கிய நிலையில், மீண்டும் தடை விதிக்க வாய்ப்பு.

    ஒகேனக்கல் ஆற்றில், நீர் வரத்து வினாடிக்கு 8000 கன அடியில் இருந்து 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    இதனால், ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நேற்று மாலை வரை 8000 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை இரண்டு மடங்கு வரை அதிகரித்துள்ளது.

    இதனால், நீர் வரத்து குறைந்ததால் மேற்கொள்ளப்பட்டு வந்த சீரமைப்பு பணிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    25 நாட்களுக்கு பிறகு 2 நாட்களாக பரிசல் பயணம் துவங்கிய நிலையில், மீண்டும் தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறையத் தொடங்கி உள்ளது.
    • பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

    ஒகேனக்கல்:

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கலில் நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக குறைந்ததால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

    கர்நாடக மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது.

    இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் ஒகேனக்கலில் வரலாறு காணாத அளவு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    ஆற்றில் வினாடிக்கு 2.30 லட்சம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் கடந்த 23 நாட்களாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டது. தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால். ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைய தொடங்கி உள்ளது.

    நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்த இன்று காலை நிலவரப்படி 8 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

    இதனையடுத்து ஒகேனக்களுக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து நீடிக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    இதனையடித்து பென்னாகரம் எம்.எல்.ஏ. ஜி.கே. மணி, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன் மற்றும் சகிலா ஆகியோர்கள் ஒகேனக்கல் சின்னாறு பரிசல் துறையில் இருந்து மணல்மேடு வரை பரிசல் பயணத்தினை தொடங்கி வைத்தனர்.

    • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
    • நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக கேரளா மாநிலத்தின் வயநாடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

    அதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் இன்று வினாடிக்கு 38, உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

    இதனால் தருமபுரி மாவட்ட ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்து இருந்த நிலையில், கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 24 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

    நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, சினிப்பால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிக அளவில் வருவதால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவியில் குளிக்கவும் பரிசல் இயங்கவும் விதிக்கப்பட்ட தடையானது 24-வது நாளாக தொடர்ந்து நீடிக்கிறது.

    மேலும் நீர்வரத்து காவிரி ஆற்றில் அதிகரிப்பதும் குறைவதும் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவைப் பொறுத்து உள்ளது என மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காவிரி ஆற்றில் வரும் நீர் வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

    ×