என் மலர்
கடலூர்
- விஜயன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
- மேலும், செந்தில்வேலை, மாதேஷ் உட்பட 3 பேர் தாக்கினார்கள்.
கடலூர்:
கடலூர் சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 20). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜயன் என்பவ ருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத் தன்று மாதேஷ் வீட்டிற்கு விஜயன் உட்பட 5 பேர் நேரில் சென்று சரமாரியாக தாக்கினார்கள். அப்போது அதனை தடுக்க வந்த அவரது தாய் சந்திராவை கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும், செந்தில்வேலை, மாதேஷ் உட்பட 3 பேர் தாக்கினார்கள். இதில் காயமடைந்த மாதேஷ், செந்தில்வேல் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற னர். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் மாதேஷ் கொடுத்த புகாரின் பேரில் செந்தில்வேல், நடராஜன், கலை, சரவணன், விஜயன் ஆகிய 5 பேரும், செந்தில் வேல் கொடுத்த புகாரின் பேரில் மாதேஷ், குமரன், சந்திரா என மொத்த 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர்.
- வஞ்சிரம் மீன் ரூ. 800 முதல் ரூ. 900 வரை விற்பனை செய்யப்பட்டது.
கடலூர்:
கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதனை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மீன் வறுத்து குறைவாக இருந்து வந்ததால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டன. இன்று ஞாயிற்றுக்கிழமை கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் ஏராளமான மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றதை காண முடிந்தது. இதில் இன்று மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.
வழக்கமாக கிலோ ரூ.500 முதல் ரூ. 600 வரை விற்பனை செய்யப்படும் வஞ்சிரம் மீன் ரூ. 800 முதல் ரூ. 900 வரை விற்பனை செய்யப்பட்டது. இதே போல சங்கரா மீன் ரூ. 350 முதல் ரூ. 400 வரையும், சீலா மீன் ரூ.400-க்கு , நெத்திலி மீன் ரூ.20-க்கும், நண்டு கிலோ ரூ. 300-க்கும், சிறிய வகை இறால் ரூ. 300-க்கும், பெரிய வகை இறால் ரூ. 600-க்கு விற்பனை செய்யப்பட்டது. பன்னி சாத்தான் மீன் ரூ. 500-க்கும், பாறை ரூ. 350-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை ஏற்றத்தினால் கடலூர் துறைமுகத்தில் இன்று காலை பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மேலும் மீன் வாங்க வந்தவர்களும் குறைந்த அளவிலேயே மீன்களை வாங்கி சென்றதையும் காணமுடிந்தது.
- பண்ருட்டி அருகே மணல் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- அருண்குமார் சட்டத்திற்கு விரோதமாக மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த மேல் குமாரமங்கலம் தென் பெண்ணை ஆறுகளிலிருந்து மாட்டு வண்டிகளில் இரவில் சட்ட விரோதமாக மணல் ஏற்றி வருவதாக, பண்ருட்டி போலீஸ் நிலையத்திற்குத் தகவல் வந்தது. இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீஸார், இன்று அதிகாலை அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டு இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (26) சட்டத்திற்கு விரோதமாக மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார், அவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்து மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
- பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்து வர் அணி சார்பில் நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசையும், கவர்ன ரை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்ட த்தை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழி லாளர் நலத்துறை சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. க்கள் இள. புகழேந்தி, சரவணன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, பொதுக்குழு உறுப்பி னர் குறிஞ்சிப்பாடி பால முருகன், ஒன்றிய செய லாளர்கள் பொறியாளர் சிவக்குமார், காசிராஜன், சுப்பிரமணியன், நாராயண சாமி, வெங்கட்ராமன், தனஞ்ஜெயன், விஜய சுந்தரம், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்கள் கார்த்திகேயன், கணேஷ் குமார், மருத்துவர் அணி டாக்டர் கலைக்கோவன், நகர மன்ற தலைவர்கள் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன், சிவகுமார், சங்கவி முருகதாஸ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், பகுதி செய லாளர்கள் சலீம், நடராஜன், இளையராஜா, வெங்கடேசன், மாநகர துணை செயலாளர் சுந்தர மூர்த்தி , மண்டல குழு தலை வர்கள் பிரசன்னா, சங்கீதா செந்தில் முருகன், சங்கீதா, பேரூராட்சி மன்ற தலைவர் கோகிலா குமார், துணை தலைவர் ராமர், பகுதி துணை செயலாளர்கள் லெனின், ஜெயசீலன், கார் வெங்கடேசன், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி நிர்வாகிகள் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, கிளை, பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முன்னதாக காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கப்பட்டு இன்று மாலை 5 மணி வரை நடை பெற உள்ளது.
- பத்மநாபனுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது.
- அனைவரும் ஒன்று கூடி மன மகிழ்வுடன் வாழ்த்தியது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
கடலூர்:
கடலூர் அடுத்த திருமாணிக்குழி டி. புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பத்மநாபன்.
இவர் எம்.பி.ஏ பட்டதாரி. இவருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரோனமி டியாங்கோ குவாங்கோவுக்கும் கடலூர் நடுவீரப்பட்டு வெள்ளக்கரை பகுதியில் தமிழ் கலாச்சாரம் மற்றும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் கடலூர் பகுதியை சேர்ந்த அவரது உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மேலும் பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்தவர்கள் தமிழ் கலாச்சார முறைப்படி வேஷ்டி, சேலை அணிந்து திருமணத்தில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்கள்.
இது குறித்து மணமகன் பத்மநாபன் கூறுகையில், நான் எம்.பி.ஏ. படிப்பை முடித்துவிட்டு சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த நிலையில் அதே நிறுவனத்தில் பணிபுரிந்த ரோனமி டியாங்கோ குவாங்கோவுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. நாங்கள் ஒரு வருடமாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்து வந்தோம். அதன் பேரில் நான் குவாங்கோ பெற்றோர்களிடம் சென்று எங்கள் காதலை தெரிவித்தோம்.
அவர்கள் முழு சம்மதம் தெரிவித்த பிறகு இந்து முறைப்படி தமிழ் கலாச்சாரத்துடன் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் எனது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணமகள் ரோனமி டியாங்கோ குவாங்கோ கூறுகையில் , பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த நான் சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்தேன். அப்போது பத்மநாபனுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. எனது பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர்.தமிழ் கலாச்சாரம் மற்றும் இங்கு நடைபெறும் திருமணங்கள் மிக விமர்சையாகவும், திருவிழா போல் நடைபெறும் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் எங்கள் நாட்டில் மிக சாதாரணமாக திருமணம் நடைபெறுவது வழக்கம்.
ஆகையால் தமிழ் கலாச்சாரம் மற்றும் இந்து முறைப்படி திருவிழா போல் நடைபெற்ற எங்களது திருமணத்தில் அனைவரும் ஒன்று கூடி மன மகிழ்வுடன் வாழ்த்தியது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.
இவர்களது திருமணத்தை மணப்பெண்ணின் பெற்றோர்கள் வயது முதிர்வு காரணமாக ஆன்லைன் வீடியோ மூலமாக பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.இந்த திருமணத்தை காண பல்வேறு பகுதிகளிலிருந்து பலர் நேரில் வந்து இருந்தனர்.
- ஆடி மாதம் முடிந்து இன்று முகூர்த்த நாள் என்பதால் தேவநாத சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெறத் தொடங்கியது.
- திருவந்திபுரம் ஊர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன.
கடலூர்:
கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். தேவநாதசாமி கோவிலில் திருமணம் செய்து கொள்ள பிரார்த்தனை செய்து கொண்டவர்கள் இங்கு திருமணம் செய்து கொண்டு தேவநாதசாமியை தரிசித்து சென்று வருகின்றனர்.
இக்கோவிலில் முகூர்த்த நாட்களில் 100 முதல் 300-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும். திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் முன்பு உள்ள மலையில் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்று வருகிறது. மேலும் முகூர்த்த நாட்களில் அதிக அளவில் திருமணம் நடைபெற்று வருவதால் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் இந்து சமய அறநிலைய துறை சார்பில் திருவந்திபுரத்தில் புதிதாக திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஆடி மாதம் முடிந்து இன்று முகூர்த்த நாள் என்பதால் தேவநாத சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெறத் தொடங்கியது. இதனால் திருவந்திபுரம் ஊர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. மேலும் திருமண ஜோடிகள் திருவந்திபுரம் முகப்பு பகுதியில் இருந்து கோவிலுக்கு நடந்து சென்றனர். இந்த நிலையில் சாலையில் 75 திருமணங்களும், அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சுமார் 20 திருமணங்கள் என 95 திருமணம் நடைபெற்றது.
இதனால் கடலூர்-பாலூர் சாலையில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அதிகாலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்ததோடு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி வந்தனர்.
- 18 வயதிற்குட்பட்ட தகுதி வாய்ந்த குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்பிக்கடைசி நாள் 31.8.2023 ஆகும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது - தேசிய குழந்தைகள் விருது 2023-ற்கான இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது அறிவிக்கப்பட்டு 18 வயதிற்குட்பட்ட தகுதி வாய்ந்த குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதிய கண்டுபிடிப்பு , கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில் வீரத்தீர செயல் புரிந்த தனி தகுதிப்படைத்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக (பால் புரஷ்கார் )எனும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இவ்விருது ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை புத்தகம் ஆகியவற்றை கொண்டதாகும். இவ்விருதுக்கான தகுதியுடையோர் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிற முறைகளில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்பிக்கடைசி நாள் 31.8.2023 ஆகும். இறுதி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அந்த நபரை கூச்சலிட்டு கூப்பிட்டு பார்த்தனர்.
- தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் மூழ்கியவரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் கெடிலம் ஆறு உள்ளது. இந்த கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் இன்று காலை ஒருவர் ஆற்றின் கரையோரமாக சைக்கிளை நிறுத்திவிட்டு திடீரென தண்ணீரில் இறங்கியுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் திடீரென அந்த நபர் மாயமானர். இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அந்த நபரை கூச்சலிட்டு கூப்பிட்டு பார்த்தனர். ஆனால் அவர் நீரிலிருந்து வெளியில் வரவில்லை.
இதனை தொடர்ந்து கடலூர் தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் மூழ்கியவரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். அந்த நபர் தண்ணீரில் மூழ்கி இறந்தது கிடந்தார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விசாரணையில் அவர் கடலூர் நவநீதம் நகரை சேர்ந்த தொழிலாளி பன்னீர்செல்வம் (வயது 40) என்பது தெரிய வந்தது. ஆற்றில் மூழ்கி பலியான பன்னீர்செல்வம் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கடலூர் கூட்டுறவு அச்சகம் ஆகிய இடங்களிலும் ஆய்வு செய்தார்.
- மத்திய கூட்டுறவு வங்கியின் அலுவலர்கள், சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் சுப்பையன் நேரடியாக ஆய்வு செய்தார். பின்னர் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் சுய உதவி குழுக்கள், மாற்றத்திறனாளிகள், நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.1 கோடி 32 லட்சம் கடன் வழங்கினார். நபார்டு நிதி உதவி கீழ் வழி சோதனை பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு ரூ. 6.50 லட்ச மதிப்பில் சரக்கு வாகனம் வழங்கினார். விழாவிற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதியதாக துவக்கப்பட உள்ள வண்டிப்பாளையம் கிளையினை ஆய்வு செய்தார். மேலும் கடலூர் தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கி, கடலூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், கடலூர் கூட்டுறவு அச்சகம் ஆகிய இடங்களிலும் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் நந்தகுமார், கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் திலீப்குமார், துணைப் பதிவாளர்கள் துரைசாமி, ராஜேந்திரன், அன்பரசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை அலுவலர் எழில்பாரதி மற்றும் கூட்டுறவுதுறை அலுவலர்கள், மத்திய கூட்டுறவு வங்கியின் அலுவலர்கள், சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- ஆன்மீகசேவர் ரத்னா விருது பெற்ற கே.லட்சுமண குமார்தலை மையில் 1008 விளக்கு பூஜை நடைபெற்றது.
- மிளகாய்மண்டி அதிபர்கள் குபேரன், பாரத், சந்தானம் ஆகியோர் செய்திருந்தனர்.
கடலூர்:
திருச்சி மாவட்டம், தொட்டி யம்வட்டம் நாகைய நல்லூர் கிராமம் மேய்க்கல் நாயக்கன் பட்டி பதி னெட்டாம் படி கருப்பசாமி கோவிலில் உலக நன்மை வேண்டிவந்தாரை வாழ வைக்கும் வரம்தரும் பதினெட்டாம்படி கருப்ப சாமிகோவிலில் தெய்வஅருளை பெற்ற இளஞ் சித்தர், ஆன்மீகசேவர் ரத்னா விருது பெற்ற கே.லட்சுமண குமார்தலை மையில் 1008 விளக்கு பூஜைநடைபெற்றது.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறை வேறவும்நேர்த்தி கடனுக்காக வும் விளக்கேற்றி பூஜை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளைபதி னெட்டாம்படி கருப்பசாமி வழிபாட்டு மன்றத்தினர், விழாகுழுவினர், கிராம மக்கள் ஆகியோருடன் பண்ருட்டி, ஆரணி பி.கே.மிளகாய்மண்டி அதிபர்கள் குபேரன், பாரத், சந்தானம் ஆகியோர் செய்திருந்தனர்.
- அசோக்ராமன் அவ்வப்போது கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வருவார்.
- அசோக்ராமன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் முத்தாண்டிக்குப்பம் அடுத்த சொரத்தங்குழி மாரியம்மன்கோவில் தெரு ைவ சேர்ந்தவர் மாம்பழம்என்ற அசோக்ராமன் (26). இவர் நெய்வேலி சுற்று வட்டார பகுதிகளில் வியாபாரம் செய்பவர்களிடம் கத்தியை காட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்து அவ்வப்போது கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வருவார். இவர் கடந்த மாதம் 31-ந் தேதியன்று சொத்தங்குழி பஸ்நிறுத்தத்தில் இட்லி கடை வைத்திருக்கும் பாப்பன் கொள்ளையை சேர்ந்த பழனிவேலிடம் மாமூல் கேட்டு மிரட்டி கொடுக்க மறுத்தவரை கத்தியை காட்டி மிரட்டி கடையில் இருந்த 1000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்தது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரது தொடர் குற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக கலெக்டர் உத்தரவுபடி நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- அமீர் அப்துல் காதர் திடீரென்று போலீசாரை தள்ளிவிட்டு கை விலங்குடன் பஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடினார்.
- கண் இமைக்கும் நேரத்தில் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து கைதி தப்பி ஓடிவிட்டார்.
கடலூர்:
புதுச்சேரி உருளையன்பேட்டையை சேர்ந்தவர் அமீர் அப்துல் காதர் (வயது 22). இவர் மீது திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் திருட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை கைதியாக கடலூர் மத்திய சிறைச்சாலையில் கடந்த மே மாதம் 6-ம் தேதி முதல் இருந்து வருகிறார்.
நேற்று வழக்கு தொடர்பாக விசாரணைக்காக திண்டிவனம் போலீசார் கடலூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து கைதி அமீர் அப்துல் காதரை திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு மாலை போலீஸ்காரர்கள் முருகன், அப்துல் ரஷீத் ஆகியோர் மீண்டும் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைப்பதற்காக கைதி அமீர் அப்துல் காதரை கடலூர் பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பஸ் நிலையத்தில் இருந்து மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்வதற்காக பஸ்சில் ஏற முயன்றனர்.
அப்போது அமீர் அப்துல் காதர் திடீரென்று போலீசாரை தள்ளிவிட்டு கை விலங்குடன் பஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கைதி அமீர் அப்துல் காதரை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஆஞ்சநேயர் கோவில் வரை விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் கண் இமைக்கும் நேரத்தில் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் தப்பி ஓடிய கைதியை தேடி வருவதோடு, திண்டிவனம் போலீசாரும் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையம் பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.






