search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லிக்குப்பம்  நகராட்சி மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
    X

    நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனையில் கலெக்டர் அருண் தம்புராஜ் திடீர் ஆய்வு செய்த காட்சி. 

    நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு

    • மருத்துவ சிகிச்சை பெறு வதற்கு காலை முதல் மாலை வரை வந்து செல் கின்றனர்.
    • சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படு கிறதா? மருந்து மாத்திரை வழங்கப்படுகிறதா

    கடலூர்:

    நெல்லிக்குப்பத்தில் நகராட்சி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றன. இங்கு தினந்தோறும் ஏராள மான பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை பெறு வதற்கு காலை முதல் மாலை வரை வந்து செல் கின்றனர். நகராட்சி மருத்துவ மனையில் மாலைக்கு பிறகு டாக்டர்கள் பணியில் இல்லைஎன கூறப்படுகிறது. நர்சுகள் மட்டும் சிகிச்சை அளித்து வருகின்ற னர். மக்களுக்கு பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கலெக்டர் அருண் தம்புராஜ் நகராட்சி மருத்து வமனைக்கு நேரில் வந்தார். பின்னர் அங்கு இருந்த வருகை பதிவேடு மற்றும் சிகிச்சைக்கு வந்த மக்களி டம் சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படு கிறதா? மருந்து மாத்திரை வழங்கப்படுகிறதா? டாக்டர்கள் பணிக்கு வரு கிறார்களா? மற்றும் மருந்து மாத்திரை சரியான முறை யில் உள்ளதா? என்பதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது நகராட்சி மருத்துவமனையில் கழி வறை வசதி இல்லை என சமூக ஆர்வலர் குமரவேல் புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கலெக்டர் அருண் தம்புராஜ் உடனடியாக கழிவறை வசதி செய்வதற்கு இடத்தை பார்வையிட்டார். அங்கு இருந்த பெரிய அளவிலான மரத்தை வெட்டினால் கழிவறை கட்டலாம் என மருத்துவதுறை அலு வலர்கள் தெரிவித்தனர். அப்போது கலெக்டர் அருண் தம்புராஜ் திட்டவட்ட மாக மரத்தை வெட்டாமல், இருக்கும் இடத்தில் கழிவறை கட்ட வேண்டும் என தெரி வித்ததோடு உடனடியாக நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு உடனடியாக கழிவறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தர விட்டார்.

    Next Story
    ×