என் மலர்tooltip icon

    கடலூர்

    • ஜோதி அதே பகுதியில் உள்ள பண்ணை குட்டையில் இறங்கும்போது திடீரென்று கால் தவறி தண்ணீரில் விழுந்தார்.
    • ஜோதி உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கத்தை சேர்ந்தவர் சுப்பையன். இவரது மனைவி ஜோதி (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள பண்ணை குட்டையில் இறங்கும்போது திடீரென்று கால் தவறி தண்ணீரில் விழுந்தார். இதில் தண்ணீர் முழ்கி ஜோதி பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த தூக்கணாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜோதி உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் மாநகராட்சி பகுதியில் தாழ்வான பகுதிகள், எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தும்.
    • கவுன்சிலர்கள் விஜயலட்சுமி செந்தில், கவிதா ரகுராமன், பாலசுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    வடகிழக்கு பருவ மழை தொடங்குவதை யொட்டி கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் உள்ள வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து ஜே.சி.பி வாகனங்கள் மூலம் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதனை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை விரைந்து முடித்திட வேண்டும். மேலும் கடலூர் மாநகராட்சி பகுதியில் தாழ்வான பகுதிகள், எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து அந்தப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

    கடலூர் வண்டிப் பாளையம், முது நகர், பச்சையாங்குப்பம், நத்தவெளி சாலை, திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணியை மேயர் சுந்தரி ராஜா நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், மாநகர தி.மு.க செயலாளர் ராஜா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர் இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜயலட்சுமி செந்தில், கவிதா ரகுராமன், பாலசுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்திட கொசு உற்பத்தியை தடுப்பதே சிறந்த வழியாகும்.
    • ரத்த பரிசோதனை செய்து காய்ச்சலுக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக் குட்பட்ட தட்சிணாமூர்த்தி நகர், தேவனாம்பட்டினம் போட்மன் தெரு மற்றும் வண்டிப்பாளையம் குழந்தை காலனி ஆகிய பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் பொதுமக்களின் வீடுகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியினை முன்னிட்டு பல்வேறு வகையான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. திறந்த வெளியில் தூக்கி எறியப்படும் தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், வாகன டயர்கள் போன்ற வற்றில் மழை நீர் தேங்கு வதாலும் வீடுகளில் பயன் படுத்தப்படும் நீர் கொள்கலன்கள், குளிர் சாதனப்பெட்டி, ஏசி மெஷின்கள் போன்ற தண்ணீர் சேகரணமாகும் அனைத்து விதமான கொள்கலன்களில் பெருமள வில் இந்நோயினை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியா கின்றன.

    இந்நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்திட கொசு உற்பத்தியை தடுப்பதே சிறந்த வழியாகும். இதன் பொருட்டு பொது மக்கள் மழை நீர் தேங்கும் தேவை யற்ற பொருட்களை அப்புறப் படுத்துவது, வீட்டு உபயோகப் பொருட்களில் நீர் சேகரம் ஆவதை தவிர்ப்பது, நீர் கொள்கலன்களில் குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையாவது நன்கு சுத்தம் செய்து வெயிலில் உலர்த்து வதின் மூலமாகவும் இவ்வகையான கொசுக்க ளின் உற்பத்தியை பெரிதும் கட்டுப்படுத்தலாம். சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிகாப்பதின் மூலமாக வும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வருவதை தவிர்க்கலாம். 2 அல்லது 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்து இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்த பரிசோதனை செய்து காய்ச்சலுக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவுறுத்தினார். 

    • நடேசன் சென்னையில் விருகம்பாக்கத்தில் தனது மைத்துனர் வீட்டு புதுமனை புகுவிழாவிற்கு தனது குடும்பத்துடன் சென்றார்.
    • 8 பவுன் நகை மற்றும் 27,000 ரொக்க பணம், 15000 மதிப்புள்ள செல்போன் ஆகியவை திருடு போய் இருந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெரங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் (வயது 41). இவர் ராமநத்தம் ஊராட்சியில் சர்ச் ரோடு, கம்பன் தெருவில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சென்னையில் விருகம்பாக்கத்தில் தனது மைத்துனர் வீட்டு புதுமனை புகுவிழாவிற்கு தனது குடும்பத்துடன் சென்றார்.

    பின்னர் சென்னையில் இருந்து நேற்று ராமநத்தம் அருகே உள்ள எழுத்தூர் கிராமத்தில் தனது மாமனார் வீட்டிற்கு சென்றுவிட்டு கம்பன் தெருவில் உள்ள தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கு வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோவில் பொருட்கள் சிதறி கிடந்தது. அதிலிருந்த 8 பவுன் நகை மற்றும் 27,000 ரொக்க பணம், 15000 மதிப்புள்ள செல்போன் ஆகியவை திருடு போய் இருந்தது.

    இதுகுறித்து நடேசன் ராமநத்தம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் திருட்டு நடந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பண்ருட்டி காந்தி ரோடு வழியாக இந்து மக்கள் கட்சியினரும் ஊர்வலமாக புறப்பட்டனர்.
    • பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரி வித்தும், இனிப்புகளும் வழங்கினார்கள்.

    கடலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் நாடு முழு வதும் வெகு விமரிசையாக நடந்தது. கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் நகரம் மற்றும் கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடை பெற்றது. இதனை தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. பண்ருட்டி ராஜாஜி சாலை யில் இருந்து இந்து முன்னணி யினரும், பண்ருட்டி காந்தி ரோடு வழியாக இந்து மக்கள் கட்சியினரும் ஊர்வலமாக புறப்பட்டனர்.

    கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு குறித்து இஸ்லாமிய, கிறிஸ்துவ பெரியோர்களை அழைத்து சமூக நல்லிணக்கத்திற்கு முன்மாதிரி மாவட்டமாக கடலூர் மாவட்டம் இருக்க மதத் தலைவர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் எனவும் இளை ஞர்களுக்கு சரியான வழிகாட்டலை ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறி யிருந்தார். 

    இதனை தொடர்ந்து பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் சபியுல்லா, இஸ்ஸாமிய, கிறிஸ்தவ மதத்தை சார்ந்த பெரியோர்கள் மத நல்லிணக் கத்தை போற்றும் வகையில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது வந்த இந்து அமைப்பினரை வரவேற்று, அவர்களுக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரி வித்தும், இனிப்புகளும் வழங்கினார்கள்.பண்ருட்டியில் நடந்த இந்த நிகழ்ச்சி மத நல்லிணக் கத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது என பொது மக்கள் அனைவரும் பாராட்டினர்.

    • விநாயகர் சிலை வாங்கிக்கொண்டு வீட்டில் வைத்து சிறப்பு பூஜை செய்து தங்கள் குடும்பத்துடன் வழிபட்டனர்‌.
    • கிறிஸ்துவ பாதிரியார்கள் திரளாக கூடி விநாயகர் சிலை ஊர்வலத்தை வரவேற்றனர்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் 1300 இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு விநாயகர் சிலை வாங்கிக்கொண்டு வீட்டில் வைத்து சிறப்பு பூஜை செய்து தங்கள் குடும்பத்துடன் வழிபட்டனர். இந்த நிலையில் விநாயகர் சிலைகளை தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி உப்பனாறு, தேவனாம்பட்டினம் கடற்கரை, கொள்ளிடம் ஆறு மற்றும் வெள்ளாறு ஆகிய நீர் நிலைகளில் கரைப்பதற்கு மாவட்ட நிர்வாகம்அனுமதி அளித்திருந்தனர். இந்த நிலையில் காலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய நிலையில் மாலையில் ஏராளமான பொதுமக்கள் விநாயகர் சிலையை பயபக்தியுடன் கரைத்தனர். இதனை தொடர்ந்து இன்று 3 -ம்நாள் மற்றும் வெள்ளிக்கிழமை 5-ம் நாளில் விநாயகர் சிலை மாவட்டம் முழுவதிலிருந்து கரைப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு ஆரவாரத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்வது வழக்கம். இதைெயாட்டி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் பெரிய அளவில் விநாயகர் சிலையை கரைப்பதற்கு கொண்டு வந்தபோது போலீஸ் நிலையம் முன்பு விநாயகர் சிலையை இறக்கி அங்கிருந்து விநாயகர் சிலையை சிறிது தூரம் கொண்டு சென்று கற்பூரம், ஊதுவத்தி ஏற்றி அங்கு தயார் நிலையில் இருந்த களப்பணியாளர்கள் விநாயகர் சிலையை பாதுகாப்பாக கடலில் கரைத்தனர். மேலும் சிறிய அளவிலான விநாயகர் சிலையை பொதுமக்கள் கொண்டு சென்று வேறு இடத்தில் கரைப்பதற்கு தனியாக அனுப்பி வைத்தனர். அவர்களும் பயபக்தியுடன் விநாயகர் சிலையை கடலில் விட்டு கரைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் மாவட்டம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர்.

    பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து வந்தது. 3-வது நாளான இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலூர் கடலில் கரைக்கப்பட்டது. முன்னதாக பண்ருட்டி நகராட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான மேடையில் இருந்து இந்து முன்னணி முக்கிய பிரமுகர்கள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். இதே போல பண்ருட்டி படவேட்டம்மன் ஆலயம் முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். பண்ருட்டி 4 முனை சந்திப்பு பண்ருட்டி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பண்ருட்டியின் நகர முஸ்லிம் ஜமாத்தார்கள், பண்ருட்டி நகர கிறிஸ்துவ பாதிரியார்கள் திரளாக கூடி விநாயகர் சிலை ஊர்வலத்தை வரவேற்றனர். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ராஜ தாமரை பாண்டியன், நந்தகுமார், பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • இது குறித்து மாணவியின் பெற்றோர் புதுப்பேட்டை போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.
    • பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி விசாரணை நடத்தினார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த குடுமியான்குப்பம் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, வடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். பக்கத்து ஊரில் வசிக்கும் விஜயராம் (வயது 21) என்ற வாலிபர், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் புதுப்பேட்டை போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இதனை பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றி புதுப்பேட்டை போலீசார் பரிந்துரை செய்தனர்.

    அதன்படி பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி விசாரணை நடத்தினார். இதில் மாணவியை கடத்தி சென்ற விஜயராம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • நேற்று முதல் விண்ணப்பித்தவர்கள் ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்க வேண்டி மீண்டும் விண்ணப்பித்து வந்தனர்.
    • பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகளுக்கு பணம் சென்று உள்ளதும் தெரியவந்துள்ளது

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் வேண்டி விண்ணப்பித்த ஏராளமான பெண்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டன. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பித்த பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கப்பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், சப்-கலெக்டர்அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உதவி மையம் தொடங்கப்பட்டு, அங்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவித்ததை தொடர்ந்து நேற்று முதல் விண்ணப்பித்தவர்கள் ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்க வேண்டி மீண்டும் விண்ணப்பித்து வந்தனர்.

    இன்று காலை கடலூர் தாலுகா அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பித்து சென்றனர். இந்த நிலையில் ஏராளமான பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் பணம் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டன. ஆனால் விண்ணப்பித்த போது வழங்கப்பட்ட வங்கி கணக்கில் பணம் செல்லாமல் அவர்கள் ஏற்கனவே தொடங்கி இருந்து பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகளுக்கு பணம் சென்று உள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் கடும் குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதற்கான நிரந்தர தீர்வை ஏற்படுத்தி உரிய முறையில் தகவல் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

    • இந்நிலையில் நேற்று இரவு மரிய ஜோசப் வீட்டில் அனைவரும் தூங்க சென்று விட்டனர்.
    • இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் ராமசாமி நகரை சேர்ந்தவர் சூசை நாதன் மகன் மரிய ஜோசப் (30) இவர் மஞ்சக் குப்பத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு மரிய ஜோசப் வீட்டில் அனைவரும் தூங்க சென்று விட்டனர். காலையில் எழுந்து பார்த்தபோது மரிய ஜோசப் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரிய ஜோசப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பு
    • சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    கடலூர், செப்.20-

    கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டத்தில் 24 ந்தேதி போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நம்ம ஸ்ட்ரீட் நிகழ்ச்சி (ஆடல் பாடல் விளையாட்டு விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள்) காலை 6 மணி முதல் 10 மணி வரை சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது.

    எனவே, மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், சமூக நல அமைப்பினர், தன்னார்வலர்கள் மற்றும் அனைத்து பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டு களிக்கவும் கடலூர் மாவ ட்டத்தை போதை பொருள் இல்லா மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயலாற்றவும் கேட்டுக்கொள்ள ப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திட்டக்குடி நகர சாலையில் சென்ற பா.ம.க. நகர செயலாளர் சுரேஷ் உட்பட 10-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்தது.
    • முதியோர்கள் என அனை வரும் அச்சத்துடனேயே நடந்து செல்கின்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாய் செல்கின்றன. இதில் வெறி பிடித்த நாய்கள் மோட்டார் சைக்கிளில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோரை துரத்தி, துரத்தி கடிக்கிறது. கடந்த இரண்டு தினங்க ளுக்கு முன்பு திட்டக்குடி நகர சாலையில் சென்ற பா.ம.க. நகர செயலாளர் சுரேஷ் உட்பட 10-க் கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்தது. இவர்கள் திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சுரேசுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து திருச்சி தனி யார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களினால் பள்ளி குழந்தைகள், பாதசாரிகள், முதியோர்கள் என அனை வரும் அச்சத்துடனேயே நடந்து செல்கின்றனர்.

    எனவே, திட்டக்குடி நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றி தெரியும் தெரு நாய்களை பிடித்து செல்ல வேண்டுமென திட்டக்குடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாய் செல்கின்றன. இதில் வெறி பிடித்த நாய்கள் மோட்டார் சைக்கிளில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோரை துரத்தி, துரத்தி கடிக்கிறது. கடந்த இரண்டு தினங்க ளுக்கு முன்பு திட்டக்குடி நகர சாலையில் சென்ற பா.ம.க. நகர செயலாளர் சுரேஷ் உட்பட 10-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்தது. இவர்கள் திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சுரேசுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து திருச்சி தனி யார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களினால் பள்ளி குழந்தைகள், பாதசாரிகள், முதியோர்கள் என அனை வரும் அச்சத்துடனேயே நடந்து செல்கின்றனர்.

    எனவே, திட்டக்குடி நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றி தெரியும் தெரு நாய்களை பிடித்து செல்ல வேண்டுமென திட்டக்குடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சக்திவேல் உளுந்தூர்பேட்டை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
    • முந்திரி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அண்ணங்கார குப்பத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவர் உளுந்தூர்பேட்டை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உமா (30). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். சக்திவேலிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இதனால் அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி உமாவுடன் தகராறில் ஈடுபடுவார். இதேபோல் நேற்று மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து உமாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த உமா தனது விவசாய நிலத்திற்கு சென்று அங்கிருந்த முந்திரி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட உமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உமாவின் தாய் ராணி முத்தாண்டிக்குப்பம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×