என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வக்காரமாரி வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 44), விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளராக உள்ளார். ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கீழ் புளியங்குடி தாமரை ஏரியில் வண்டல் மண் எடுத்து விவசாயிகளுக்கு கொடுக்கும் ஒப்பந்தத்தையும் பெற்றுள்ளார்.
இந்த ஏரியில் இருந்து வண்டல் மண் ஏற்றிசெல் ம் டிராக்டர்கள் கீழ்புளியங்குடி பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி வழியாக சென்றுவந்தது. இதனால் அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது என கூறி அந்த வழியாக டிராக்டர்களை இயக்க அனுமதிக்கக்கூடாது என பள்ளி தலைமை ஆசிரியர் மெகரூன்நிஷா சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.
இதை அறிந்த ரவி பள்ளி தலைமை ஆசிரியர் மெகரூன் நிஷாவின் கணவர் சேட்டிடம் உங்கள் மனைவி எதற்காக புகார் கொடுத்தார் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்தனர்.
இந்தநிலையில் நேற்று இரவு ரவி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 15 பேருடன் ஸ்ரீமுஷ்ணம் அண்ணா சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சேட் மற்றும் அவரது உறவினர்களுக்கும் ரவி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கினர்.
இந்த தாக்குதலில் ரவி மற்றும் சேட் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ரவியை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து இரு தரப்பினரும் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தனர். இதில் ரவி கொடுத்த புகாரின் பேரில் சேட் உள்பட அவரது உறவினர்கள் 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சேட் அளித்த புகாரின் பேரில் ரவி உள்பட 15 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் பாரதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த மோதல் சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கொண்டு அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்கும் இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அது மட்டுமின்றி சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் அனுப்பப்படும்.
ஏரியின் நீர்மட்டம் குறைந்ததால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. நீர் வரத்து இல்லாததால் கடந்த 5 மாதங்களாக வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு காணப்பட்டது. பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் அவதி அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்த கன மழை காரணமாக காவிரி உபரிநீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது. அங்கிருந்து கடந்த 19-ந் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. கல்லணைக்கு வந்த தண்ணீர் கடந்த 26-ந் தேதி கீழணைக்கு திறக்கப்பட்டது.
கீழணையில் இருந்து நேற்று முன்தினம் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை அது 2200 கனஅடியாக உயர்த்தப்பட்டது. இதனால் வீராணம் ஏரிக்கு அதிகமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் வீராணம் ஏரி நிரம்பி விடும் என கூறப்படுகிறது.
வீராணம் ஏரி நிரம்பிய பின்னர் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. #VeeranamLake
சிதம்பரம்:
நகராட்சிகளில் சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதனை உடனடியாக திரும்பப் பெறக் கோரியும், சிதம்பரம் நகராட்சி சீர் கேட்டை கண்டித்தும் சிதம்பரம் நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் தென்னவன் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், நகர துணைச்செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கடலூர் கிழக்கு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ., புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ. துரை சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியதாவது:-
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்த்தியது கண்டிக்கத்தக்கது. இதை உடனடியாக திரும்ப பெறவேண்டும்.
மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத அரசாக இந்த அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. சிதம்பரம் நகராட்சியை பொறுத்தவரை மக்கள் குடியிருக்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. சாலை, குடிநீர் வசதி மற்றும் சுகாதாரம் ஆகியவை சீர்கெட்டு உள்ளது.
மக்களுக்கு எந்தவித திட்டப்பணிகளும் நடைபெறவில்லை. இந்த அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஜாபர்அலி, ஒன்றிய செயலாளர்கள் மனோகர், சபாநாயகம், வாக்கூர் முருகன், ராயர், சோழன், முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நகர துணை செயலாளர் பாலசுப்பிர மணியன் நன்றி கூறினார். #propertytaxhike
கடலூர்:
சிதம்பரத்தை அடுத்த கீழ்பொன்குடியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 33) இவர் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந் தேதி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று காலை ராஜசேகருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இவரை சிறை அதிகாரிகள் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். பின்னர் ராஜசேகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜசேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சிறைத்துறை காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Prisonerdeath
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் அனுப்பப்படும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வரத்தொடங்கியது. தொடர்ந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவ மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் வீராணம் ஏரி நிரம்பி கடல்போல காட்சியளித்தது.
பின்னர் தொடர்ந்து மழை இல்லாததாலும், ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததாலும் நீர்மட்டம் குறைந்தது.
இதனால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த 19-ந் தேதி காவிரி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணைக்கு கடந்த 22-ந் தேதி வந்தடைந்தது. இதையடுத்து கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று இரவு 8 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழணைக்கு வந்து சேர்ந்தது.
கீழணையின் மொத்தம் நீர்மட்டமான 9 அடியை எட்டியது. பின்னர் அங்கிருந்து வடவாறு வழியாக கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இன்று காலை காவிரி நீர் வீராணம் ஏரிக்கு வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது ஏரிக்கு காவிரி தண்ணீர் வேகமாக வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்து அதிகரித்தால் இன்னும் 2 நாட்களில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீராணம் ஏரி நிரம்பியவுடன் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வந்தது குறித்து கொள்ளிடம் கீழணை பாசன விவசாய சங்க தலைவர் விநாயகமூர்த்தி கூறியதாவது:-
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும்போது வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வந்து சேரும். கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆடி மாதத்தில் தற்போது வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வந்து சேர்ந்துள்ளது.
ஏரியில் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். விவசாயத்திற்கு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதிக்கு பிறகு வீராணம் ஏரியிலிருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். இந்த ஆண்டு ஒரு போக சம்பா சாகுபடி செய்ய வாய்ப்பு உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் கொள்ளிடம் ஆற்றுக்கு வருகிறது. அங்கிருந்து அதிக அளவு தண்ணீர் கடலில் சென்று வீணாக கலக்கிறது.
எனவே இதை தடுக்க கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Kallanai #VeeranamLake
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கல்லுமேட்டு பகுதியில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கலியங்குப்பத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவர் பூசாரியாக உள்ளார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக கோவில் வளாகத்தில் 2 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பூஜை முடிந்ததும் கொளஞ்சி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலை கொளஞ்சி வழக்கம் போல் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது கோவிலில் இருந்த 2 உண்டியல்களும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த காணிக்கை பணத்தை காணவில்லை. மேலும் கோவிலில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கி கருவிகள், 100 கிலோ எடையுள்ள பித்தளை மற்றும் செப்பு பாத்திரங்களையும் காணவில்லை. இதுகுறித்து அவர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நேற்று முன்தினம் இரவு பூசாரி கொளஞ்சி கோவிலை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த 2 உண்டியல்களை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தையும், கோவிலில் இருந்த ஒலிபெருக்கி கருவிகள், பித்தளை உள்ளிட்ட பொருட்களையும் திருடி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. 2 உண்டியல்களிலும் ரூ.10 ஆயிரம் இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
சிதம்பரம் அருகே உள்ள வேளக்குடி ஆணைக்கார தெருவை சேர்ந்தவர் துரை மகன் பாபு(வயது 25), கூலி தொழிலாளி. இவரும் சிதம்பரம் மடத்தான்தோப்பு பகுதியை சேர்ந்த சிவகாமசுந்தரி(22) என்பவரும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அனேஷ்கா என்ற 1 வயது பெண் குழந்தை உள்ளது.கடந்த சில மாதங்களாக பாபுவுக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் வீட்டுக்கு வந்த பாபு, மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவகாமசுந்தரி கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பாபு, மனைவியை நேரில் சந்தித்து தனது குழந்தையை தன்னிடம் கொடுத்து விடு என கேட்டுள்ளார். அதற்கு சிவகாமசுந்தரி குழந்தையை உங்களிடம் தரமுடியாது என கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த பாபு வீட்டுக்கு வந்து, புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து துரை கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அழகப்பா சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கந்தவேல்(வயது 45). இளநீர் வியாபாரி. இவர் காட்டுவேகாக்கொல்லை பகுதிக்கு இளநீர் கொண்டு சென்றார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(40). அவரது மகன்கள் ஜெயசந்திரன், மதியழகன் ஆகியோர் கந்தவேலிடம் தகராறு செய்து அவரை தாக்கினர். பின்பு அவரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் காயமடைந்த கந்தவேல் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் கடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவி வழக்கு பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தார். ஜெயசந்திரன், மதியழகன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கதை சேர்ந்தவர் முத்து. லாரி டிரைவர். இவருடைய மகள் ஹேமலதா (வயது 18). கடந்த 20-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார்.
கடந்த 22-ந் தேதி மதியம் இறந்த நிலையில் ஹேமலதாவின் உடலை ஒரு வாலிபர் மேல்பட்டாம் பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஹேமலதா தந்தை முத்துவிடம் ஹேமலதா எப்படி இறந்தார், உடலை வைத்து விட்டு தப்பி ஓடிய வாலிபர் யார் என்று பல்வேறு கோணத்தில் விசாரணை செய்தனர்.
அதில் பல புதிய தகவல்கள் கிடைத்தது.
ஹேமலதா பகண்டை பகுதியை சேர்ந்த காத்தவராயன் என்பவரை நடுவீரப்பட்டு கோவிலில் கல்யாணம் செய்துகொண்டார். பின்னர் காத்தவராயனுடன் ஹேமலதா கொடைக்கானல் மற்றும் பழனிக்கு சுற்றுலா சென்றார்.
அங்கு தனியார் விடுதியில் ஹேமலதா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதன் பிறகு ஹேமலதா உடலை மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள அவரது தந்தை முத்து வீட்டில் வைத்து விட்டு காத்தவராயன் சென்று விட்டார் என்று தெரிந்தது.
ஹேமலதா வரதட்சணை கொடுமையால் இறந்திருக்கலாம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்-கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காத்தவராயனை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் அகரம் பகுதியை சேர்ந்தவர் குமார்(வயது 47). விவசாயி. இவர் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக சென்றார்.
குமாருக்கு ஏ.டி.எம். மூலமாக பணம் எடுக்க தெரியாததால் அங்கு பணம் எடுக்க வந்த மற்றொரு நபரிடம் குமார் தனது ஏ.டி.எம்.கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறினார்.
உடனே அந்த நபர் குமாரின் ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி ஏ.டி.எம்.எந்திரத்தில் இருந்து பணம் எடுக்க முயன்றார். அந்த எந்திரத்தில் பணம் வரவில்லை எனக்கூறிவிட்டு அங்கிருந்த மற்றொரு எந்திரத்தில் குமாருக்கு பணம் எடுத்து கொடுத்தார். உடனே குமார் அங்கிருந்து சென்று விட்டார்.
பின்னர் அந்த நபர் ஏற்கனவே பணம் வரவில்லை எனக்கூறிய ஏ.டி.எம்.எந்திரம் மூலம் குமார் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இந்தநிலையில் 2 நாட்கள் கழித்து குமார் வங்கி ஏ.டி.எம்.மிற்கு சென்றபோது அவரது வங்கி கணக்கில் ரூ.15 ஆயிரம் குறைவாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர் வங்கி அதிகாரியிடம் கேட்ட போது, அவர் உங்கள் வங்கி கணக்கில் ரூ.15 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இதைகேட்ட அதிர்ச்சியடைந்த குமார் குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் ஏ.டி.எம்.எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சியை ஆய்வு செய்தபோது அதில் குமார் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடிய அந்த நபர் முகம் பதிவாகியிருந்தது.
இதைத்தொடர்ந்து அந்த மர்மமனிதரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த கீழ்அனுவம்பட்டை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(31) என்பதும், அவர் என்ஜினீயர் என்பது தெரியவந்தது. பின்னர் கோபாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.15 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். #tamilnews
பண்ருட்டி அடுத்த ஏ.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி, விவசாயி. இவரது மகள் பிரேமா (வயது 27). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் சின்னமணி (28) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
ஆசிரியை பிரேமாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சின்னமணி அவருடன் முந்திரி தோப்பில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சின்னமணியிடம் பிரேமா கூறினார். இதற்கு சின்னமணி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவரது தந்தை கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் ரவிச்சந்திரன், ஜெயக்குமாரி, முத்துலட்சுமி ஆகியோர் பிரேமாவை தலை முடியை இழுத்து தள்ளி அடித்து தாக்கியதாக தெரிகிறது.
இது பற்றி பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் பிரேமா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரேவதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து கல்லூரி பேராசிரியர் சின்னமணியை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். நீதிபதி கணேஷ் விசாரித்து சின்னமணியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பேராசிரியர் சின்னமணி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #Tamilnews






