என் மலர்
நீங்கள் தேடியது "மத்திய சிறைச்சாலை கைதி மரணம்"
கடலூர் மத்திய சிறைச்சாலையில் கைதி திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Prisonerdeath
கடலூர்:
சிதம்பரத்தை அடுத்த கீழ்பொன்குடியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 33) இவர் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந் தேதி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று காலை ராஜசேகருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இவரை சிறை அதிகாரிகள் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். பின்னர் ராஜசேகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜசேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சிறைத்துறை காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Prisonerdeath






