என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். தொழிலாளி. இவரது மகள் காயத்திரி (வயது 14).
சம்பவத்தன்று இரவு ராஜேந்திரன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். காலையில் எழுந்த அவர் தனது மகள் காயத்திரி காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து காயத்திரியின் தாய் அஞ்சலை பண்ருட்டி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடிவருகிறார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் கீழணையில் இருந்து கடந்த ஜூலை 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 1,300 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 1,100 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது நேற்றைய அளவைவிட 200 கனஅடி குறைவாகும். ஆனால் ஏரியின் நீர் மட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. தொடர்ந்து 47 அடியாக உள்ளது.
விவசாய பாசனத்துக்கு கடந்த 26-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று ஏரியில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்றும் தொடர்ந்து அதே அளவான 300 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த மாதம் 14-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 74 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இன்றும் அதே அளவான 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. #VeeranamLake
குறிஞ்சிப்பாடி:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சத்திரம் செல்லும் சாலையில் இன்று மதியம் குறிஞ்சிப்பாடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒன்றன் பின் ஒன்றாக 26 லாரிகள் வேகமாக வந்து கொண்டிருந்தன. அந்த லாரிகளை போலீசார் வழி மறித்தனர். இதை பார்த்த லாரி டிரைவர்கள் 14 பேர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். மீதி 12 லாரிகளில் வந்த டிரைவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.
அதில் அவர்கள் நாகை மாவட்டம் வேடங்குடி கிராமத்தில் உள்ள ஆற்றில் இருந்து லாரியில் மணல் கடத்தி, அவற்றை சென்னைக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்திய 26 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
லாரியை ஓட்டி வந்த காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல் பட்டு பள்ள மேடை சேர்ந்த கன்னியப்பன் (வயது 39), மதுராந்தகத்தை சேர்ந்த ஜெயக்குமார் (36), செந்தில், ஏழுமலை, சக்திவேல் உள்ளிட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
தப்பி ஓடிய 14 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரிகள் அனைத்தையும் குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மணல் கடத்தி வந்த 26 லாரிகளை ஒரே நேரத்தில் போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள எய்யலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 48).
இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலைபார்த்துவந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வம் விடுமுறையில் எய்யலூருக்கு வந்தார்.
செல்வம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது. இதில் மயக்கமடைந்த செல்வத்தை உறவினர்கள் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை கடித்த பாம்பையும் எடுத்து சென்றனர். அங்கு செல்வத்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் செல்வம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சோழதரம் அருகே உள்ள காவாளக்குடி பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 57), விவசாயி. இவர் அந்த பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார்.
இவரது வயலில் புடையூர் பகுதியை சேர்ந்த சங்கர் (38) என்பவர் வேலைபார்த்து வருகிறார். சங்கருக்கு சம்பளம் கொடுப்பதற்காக பாண்டியராஜ் நேற்று மாலை புடையூர் பகுதிக்கு சென்றார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பூபாலன் மற்றும் அவரது உறவினர்கள் 8 பேருடன் சேர்ந்து பாண்டியராஜை வழிமறித்தனர்.
பின்னர் எதற்காக நீ எங்கள் ஊருக்கு வருகிறாய், சங்கருக்கு பணம் கொடுக்க கூடாது என கூறி பாண்டியராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் தகராறு முற்றி பூபாலன் மற்றும் அவரது உறவினர்கள் 9 பேரும் சேர்ந்து பாண்டியராஜை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த பாண்டிய ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து சோழதரம் போலீசில் பாண்டிய ராஜ் புகார் செய்தார். புகாரின் பேரில் பூபாலன் மற்றும் அவரது உறவினர்கள் சகுந்தலா, சிவநேசன், விஜய லட்சுமி, விஜயா, அழகேசன், ஸ்ரீதர், ராஜேந்திரன், தட்சணா மூர்த்தி ஆகிய 9 பேர் மீதும் வழக்குபதிவு செய்தனர். இவர்களில் சிவநேசன், தட்சணா மூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மற்றவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
கும்பகோணத்தில் இருந்து சேலம் நோக்கி நேற்று இரவு 11 மணி அளவில் லாரி ஒன்று புறப்பட்டு சென்றது.
அந்த லாரி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி எதிரே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்பு அந்த லாரி தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரியில் இருந்த டிரைவர், கிளினர் உள்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் விரைந்துசென்று போக்குவரத்தை சரி செய்தனர். பின்பு பொக்லைன் எந்திரம் மூலம் அந்த லாரி அகற்றப்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள குன்னத்தேரி பகுதியில் கடலூர் மாவட்ட மணல் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 5 மாட்டுவண்டிகளை போலீசார் வழிமறித்து நிறுத்தினர். பின்னர் மாட்டுவண்டிகளை சோதனை செய்ததில் கள்ளிப்பாடி வெள்ளாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மாட்டுவண்டிகளை ஓட்டி வந்த 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி வி.எஸ்.பி. நகரில் வசித்து வருபவர் பழனி (வயது 50) பெயிண்டர். இவரது மகன் வினோத் (25) என்பவருக்கும், கல்குணம் கிராமத்தை சேர்ந்த சூர்யா (21) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
திருமணத்துக்கு வரதட்சணையாக 20 பவுன் நகை, ரூ.2.50 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை வாங்கி கொடுத்துள்ளனர்.
மேலும் வரதட்சனை கேட்டு மாப்பிள்ளை வீட்டார் சூர்யாவை கொடுமைப்படுத்தி தாக்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு விரட்டியுள்ளனர்.
இது குறித்து பண்ருட்டி மகளிர் போலீசில் சூர்யா புகார் செய்தார். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி இரவு இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. வீட்டுக்கு போய் நகை வாங்கி வா என கணவன், மாமனார், மாமியார் ஆகியோர் சூர்யாவிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த சூர்யா துப்பட்டாவால் கடந்த 14-ந் தேதி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி டி.எஸ்.பி. சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுப்பிரியா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கடலூர் சப்-கலெக்டர் சரயுவும் விசாரணை நடத்தினார்.
இதனை தொடர்ந்து சூர்யாவின் கணவர் வினோத், மாமனார் பழனி (50), மாமியார் ராஜேஸ்வரி (45) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்
அவர்கள் அனைவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கணேஷ் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் கீழணையில் இருந்து கடந்த ஜூலை 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 1,300 கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவான 1,300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர் மட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 47 அடியாகவே வைக்கப்பட்டுள்ளது.
விவசாய பாசனத்துக்கு கடந்த 26-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று ஏரியில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்றும் தொடர்ந்து அதே அளவான 300 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த மாதம் 14-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 73 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று 74 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது நேற்றைய விட 1 கன அடி அதிகமாகும். #VeeranamLake
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள அகரபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகள் பாலா(வயது 27). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்திருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பாலா வீட்டில் விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சோழத்தரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி சேதுராப்பட்டு மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் செந்தில்குமார் (வயது 32). இவர் அதே பகுதியில் தையல்கடை வைத்துள்ளார். இவருக்கும் கடலூர் அருகே பி.வடுகப்பாளையத்தை சேர்ந்த சசிரேகா (27) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் லோகஸ்ரீ என்கிற மகள் உள்ளார்.
இந்நிலையில் பி.வடுகப்பாளையத்தில் நடந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக நேற்று செந்தில்குமார், சசிரேகா ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் துக்க நிகழ்ச்சியை முடித்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். அவர்கள் வண்டிப்பாளையம் அரசு பள்ளிக்கூடம் அருகே வந்த போது, பின்னால் வந்த டிப்பர் லாரி அவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் ரோட்டோரம் தூக்கி வீசப்பட்ட அவர்கள் ரத்தக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் நேர்ந்த இந்த விபத்தில் கணவன், மனைவி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
கடலூர்:
கடலூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் இன்று கடலூர் சப்-ஜெயில் ரோட்டில் உள்ள கருவூலக கணக்குதுறை அலவலகம் அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் தினகரன் தலைமை தாங்கினார்.
இதில் காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், பொங்கள் போனஸ் நாள் கணக்கில் வழங்கவேண்டும், சமாபந்தி சிறப்பு படி வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






