என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேத்தியாத்தோப்பு அருகே உதவி பேராசிரியை விஷம் குடித்து தற்கொலை
    X

    சேத்தியாத்தோப்பு அருகே உதவி பேராசிரியை விஷம் குடித்து தற்கொலை

    சேத்தியாத்தோப்பு அருகே உதவி பேராசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    சேத்தியாத்தோப்பு:

    சேத்தியாத்தோப்பு அருகே உள்ள அகரபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகள் பாலா(வயது 27). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்திருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பாலா வீட்டில் விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சோழத்தரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×