என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீமுஷ்ணம் அருகே மணல் கடத்திய 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
    X

    ஸ்ரீமுஷ்ணம் அருகே மணல் கடத்திய 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

    ஸ்ரீமுஷ்ணம் அருகே மணல் கடத்திய 5 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மாட்டுவண்டிகளை ஓட்டி வந்த 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள குன்னத்தேரி பகுதியில் கடலூர் மாவட்ட மணல் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 5 மாட்டுவண்டிகளை போலீசார் வழிமறித்து நிறுத்தினர். பின்னர் மாட்டுவண்டிகளை சோதனை செய்ததில் கள்ளிப்பாடி வெள்ளாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மாட்டுவண்டிகளை ஓட்டி வந்த 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×