search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "veeranam lake water inflow decrease"

    கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 1,300 கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர் இன்று 1,100 கனஅடியாக குறைந்தது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் கீழணையில் இருந்து கடந்த ஜூலை 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 1,300 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 1,100 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது நேற்றைய அளவைவிட 200 கனஅடி குறைவாகும். ஆனால் ஏரியின் நீர் மட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. தொடர்ந்து 47 அடியாக உள்ளது.

    விவசாய பாசனத்துக்கு கடந்த 26-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று ஏரியில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்றும் தொடர்ந்து அதே அளவான 300 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த மாதம் 14-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 74 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இன்றும் அதே அளவான 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. #VeeranamLake

    ×