என் மலர்
கடலூர்
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்தி வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு முதல் தாள் தேர்வும், 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு 2-ம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் ஆசிரியர் தகுதி முதல் தாள் தேர்வு நேற்று நடைபெற்றது. இதற்காக மாவட்டம் முழுவதும் 15 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. என்றாலும் தேர்வர்கள் காலை 8.30 மணிக்கே தேர்வு மையத்துக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டதால் காலை 7 மணியில் இருந்தே தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு வந்தனர். அவர்களை தேர்வு மைய நுழைவு வாசலில் போலீசார் சோதனை செய்தனர். இதன் பின்னரே அவர்கள் தேர்வறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்(ஒருங்கிணைந்த கல்வி திட்டம்) பொன்னையன், முதன்மை கல்வி அதிகாரி(பொறுப்பு) முனுசாமி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோர் தேர்வு மையங்களை பார்வையிட்டனர். தேர்வு எழுத விண்ணப்பித்த 6,689 பேரில் 5,960 பேர் தேர்வு எழுதினர். 729 பேர் தேர்வு எழுத வரவில்லை.முன்னதாக தேர்வு மையத்துக்கு ஹால்டிக்கெட், நீல மற்றும் கருப்பு நிற பந்துமுனைப்பேனாவை தவிர வேறு எதையும்கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதால் தேர்வர்கள் கொண்டு வந்திருந்த செல்போன்கள், பைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் வாங்கி தனி அறையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். மேலும் சில ஆசிரியைகள் தங்கள் குழந்தைகளையும் உடன் அழைத்து வந்தனர். தேர்வறைக்கு செல்லும்போது குழந்தையை தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர்.
தொடர்ந்து இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) ஆசிரியர் தகுதி தேர்வு (2-ம் தாள்) நடைபெறுகிறது. இன்று நடைபெறும் 2-ம் தாள் தேர்வை மாவட்டம் முழுவதும் 47 மையங்களில் 17 ஆயிரத்து 735 பேர் எழுதுகிறார்கள்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வேப்பூர் பகுதியை சேர்ந்த உழவாரப்பணி சிவனடியார்கள் 151 பேர் கடந்த 28-ந் தேதி காசிக்கு யாத்திரை சென்றனர்.
வட நாட்டில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு யாத்திரை சென்ற அவர்கள் சென்னை வந்தனர். அங்கிருந்து ராமேஸ்வரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று நள்ளிரவு விருத்தாசலம் வந்தனர்.
சிவனடியார்கள் அனைவரும் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றவுடன் இறங்கி ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே சென்றனர்.
அப்போது ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் நின்று கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர் ஒருவர் அவர்களை வழிமறித்து உங்களிடம் டிக்கெட் உள்ளதா? என கேட்டார். அப்போது டிக்கெட் வைத்திருப்பவர் பின்னால் வந்து கொண்டிருக்கிறார் என்று அவர்கள் கூறினர்.
அதற்கு அந்த டிக்கெட் பரிசோதகர் சிவனடியார்களிடம் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து டிக்கெட் வைத்திருந்த நபர் அங்கு வந்து அனைத்து டிக்கெட்டையும் டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினார். ஆனாலும் டிக்கெட் பரிசோதகர் சிவனடியார்களை மீண்டும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
சிவனடியார்கள் அனைவரிடமும் டிக்கெட் இருப்பதை உறுதி செய்த அவர்கள் டிக்கெட் பரிசோதகரை சமாதானப்படுத்தினர்.
ஆனால் அவர் சமாதானம் ஆகவில்லை, சிவனடியார்கள் தன்னை தாக்க முயன்றதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீசாரிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சிவனடியார்கள் டிக்கெட் பரிசோதகரை கண்டித்து ரெயில் நிலைய வளாகத்திலேயே அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து போலீசார் சிவனடியார்களை சமாதானப்படுத்தினார்கள். பின்னர் ரெயில் நிலைய அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நள்ளிரவில் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் சிவனடியார்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜர் நகர் இந்திரா காந்தி சாலையை சேர்ந்தவர் பட்டுச்சாமி. இவரது மனைவி சரசு (வயது70). பட்டுசாமி இறந்து விட்டதால் சரசு மட்டும் தனியாக வசித்து வருகிறார்.
சரசு அவரது வீட்டின் முன்பு இட்லி கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று இரவு சரசு வீட்டில் தூங்கினார். பின்னர் அதிகாலை சரசு வழக்கம்போல் எழுந்து வீட்டின் முன்பக்கவாசலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம மனிதன் சரசுவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றான். உடனே சரசு திருடன்...திருடன்...என்று அலறினார்.
இதனால் கோபம் அடைந்த மர்ம மனிதன் அங்கு கிடந்த இரும்பு கம்பி யை எடுத்து சரசுவின் தலையில் ஓங்கி அடித்தான். இதில் சரசுவின் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.
உடனே அந்த மர்ம மனிதன் சரசுவின் கழுத்தில் கிடந்த ½ பவுன் தங்க சங்கிலி மற்றும் காதில் கிடந்த ½ பவுன் கம்மல் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சரசு, ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடலூர் போலீஸ் சூப்பிரண்டு சரவணன், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மூதாட்டியை தாக்கி விட்டு நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனிப்படை போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி.கேமராக்களில் கொள்ளையனின் முகம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். இட்லிகடையில் சாப்பிட வந்தவர்கள் சரசு தனியாக இருப்பதை நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்று பல்வேறு கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி போலீஸ் நிலையம் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள சரசு வீட்டில் நடந்துள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுவை மாநிலம் நல்லாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரசு(வயது70). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் பண்ருட்டி இந்திரா காந்தி சாலை அருகில் உள்ள ஒரு வீட்டை வாடகை எடுத்து அந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
அந்த வீட்டின் முன்பு இட்லி கடையும் நடத்தி வந்தார். நேற்று இரவு சரசு வீட்டில் தூங்கினார். இன்று அதிகாலை சரசு வழக்கம் போல் எழுந்து வீட்டின் முன்பக்க வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம மனிதன் சரசுவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றான். உடனே சரசு திருடன்...திருடன்...என்று அலறினார்.
இதனால் கோபம் அடைந்த மர்ம மனிதன் அங்கு கிடந்த உருட்டு கட்டையை எடுத்து சரசுவின் தலையில் ஓங்கி அடித்தான். இதில் சரசுவின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் சரசு ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். உடனே அந்த மர்ம மனிதன் சரசுவின் கழுத்தில் கிடந்த ½ பவுன் தங்க சங்கிலி மற்றும் காதில் கிடந்த ½ பவுன் கம்மல் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சரசு, ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மூதாட்டியை தாக்கி விட்டு நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கலைச்செல்வன். இவர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்தார்.
இதையடுத்து இவரிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். தன்மீது நடவடிக்கை எடுக்ககூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் கலைச்செல்வன் எம்.எல்.ஏ. மனு தாக்கல் செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்தநிலையில் கலைச்செல்வன் எம்.எல்.ஏ. கடலூரில் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வனை சந்தித்து தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து மனு அளித்தார்.

ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் எனக்கு வாக்களித்தனர். சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கியவர்கள் தான் அவரை முதல்-அமைச்சர் என்றனர். எம்.எல்.ஏ.க்கள் நாங்களும் அதனையே கூறினோம். சசிகலாவை நாங்கள் ஆதரிக்கிறோம்.
இரட்டை இலை சின்னம் எங்கு உள்ளதோ அங்குதான் இருப்பேன். முதல்வரை சந்திப்பதற்கு தற்போது அவசியம் ஏற்படவில்லை. அவசியம் ஏற்பட்டால் நிச்சயமாக அவரை சந்திப்பேன். சட்டசபையில் எப்போதும் அ.தி.மு.க.கொறடா உத்தரவுப்படியே நடந்து வந்துள்ளேன். அதற்கு எதிராக செயல்பட்டதில்லை.
ஆட்சியை நான் எப்போதும் எதிர்த்ததில்லை. ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தோல்வி அடைந்தது. இதையடுத்து அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் டி.டி.வி.தினகரனை விட்டு விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த கலைச்செல்வன் எம்.எல்.ஏ. அவருடன் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அன்புசெல்வன் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்த பொதுமக்களிடம் கலெக்டர் அன்புசெல்வன் மனுக்களை பெற்றுக்கொண்டிருந்தார்.
அப்போது குறைகேட்பு கூட்டம் மற்றும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து துறைவாரியாக அதிகாரிகளிடம் கலெக்டர் அன்புசெல்வன் கேட்டறிந்தார். இதில் சில அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை. மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வராமல் வேறு ஊழியர் வந்ததால் கலெக்டரின் கேள்விக்கு சரியான பதில் கூற தெரியாமல் திருதிருவென விழித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கலெக்டர் அன்புசெல்வன் அதிகாரிகளை கண்டித்தார். அவர் கூறும்போது, பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது அலட்சியம் காட்டுகிறீர்கள். ஒரு குட்டி ராஜ்ஜியமே நடத்துகிறீர்கள்.
குறைகேட்பு கூட்டத்துக்கு சம்பந்தப்பட்ட அதிகாரியோ அல்லது ஊழியரோ வருவதில்லை. சம்பந்தப்பட்ட துறையின் சார்பில் ஒருவர் கலந்துகொள்ள வேண்டும் என்று யாரோ ஒரு கடைநிலை ஊழியர்தான் வருகிறார். அவரிடம் கேட்டால் சரியாக பதில் கூற தெரியவில்லை. இதனால் நேரம் வீணடிக்கப்பட்டு, கூட்டம் நடைபெறுவதற்கான நோக்கமே சிதைந்துபோகிறது. பொதுமக்கள் மத்தியில் பல்வேறு துறைகள் மீது அவப்பெயர்தான் உள்ளது.
பொதுமக்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அவர்கள் கொடுக்கும் நியாயமான மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். பெறப்பட்ட மனுக்கள் மீது அதை ஏற்கப்பட்டது, நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை பதிலாக கொடுக்க வேண்டும். முடிந்த வரை பெறப்படும் மனுக்கள் மீதான கோரிக்கையை எந்தவகையிலாவது செய்து கொடுக்க முடியுமா? என்று நேர்மறையான எண்ணத்தோடு செயல்படுங்கள். சில மனுக்களுக்கு தீர்வுகாண சலுகை வழங்க கேட்டு உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யலாம். அப்போதுதான் மக்கள் மத்தியில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.
முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு தீர்வுகாண 15 நாட்கள்தான் கால அவகாசம் உண்டு. வேண்டுமானால் கூடுதலாக 15 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம். 30 நாட்களுக்குள் மனுக்கள் மீது தீர்வுகாண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுக்களை பதிவேடுகளில் குறித்து பராமரிக்க வேண்டும்.

கூட்டத்தில் ரேஷன்கார்டு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 325 மனுக்கள் பெறப்பட் டன. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி அதற்கான பதிலை சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு குறித்த காலத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
முன்னதாக கடலூர் மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூர் தெற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஓ.எல்.பெரியசாமி தலைமையில் மன்றத்தினர் மாவட்ட கலெக்டர் அன்பு செல்வனிடம் மனு கொடுத்தனர்.
மேலும் இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வங்கி கடன் மானியத்துக்கான காசோலையையும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.400 மதிப்பிலான கருப்பு நிற மூக்கு கண்ணாடி மற்றும் மடக்கு குச்சியையும் கலெக்டர் அன்புசெல்வன் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) பரிமளம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜஸ்ரீ, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பானுகோபன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல். விவசாயி. இவருடைய மனைவி சிவகாமி. இவர்களுடைய மகன்கள் பரணிதரன்(வயது 9), தரணிதரன்(9).
அதே கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன்-நந்தினி தம்பதியரின் மகன் பூவரசன்(9). இவர்கள் 3 பேரும் அதே கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வந்தனர். கோடை விடுமுறைக்கு பின் நேற்று காலையில் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. 4-ம் வகுப்புக்கு செல்லப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் 3 பேரும் புத்தாடை அணிந்து பள்ளிக்கு சென்றனர்.
மாலை 4 மணிக்கு பள்ளிக்கூடம் முடிந்ததும், 3 பேரும் தங்களது வீட்டிற்கு புவனகிரி-குறிஞ்சிப்பாடி சாலையில் நடந்து சென்றனர். அப்போது வழியில் இருந்த சாத்தப்பாடி ஏரியில் தண்ணீர் கிடந்ததை கண்டதும், 3 பேருக்கும் அதில் குளிக்க ஆசை ஏற்பட்டது.
உடனே 3 பேரும் அந்த ஏரிக்கு சென்று, தங்களது புத்தகப்பை மற்றும் ஆடைகளை கரையோரத்தில் வைத்தனர். பின்னர் 3 பேரும் ஏரியில் இறங்கி குளித்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றுவிட்ட 3 பேரும் நீச்சல் தெரியாமல் தத்தளித்து தண்ணீரில் மூழ்கினர்.
இதற்கிடையில் பள்ளிக் கூடத்திற்கு சென்றவர்கள், மாலை 6.45 மணி வரையிலும் வீட்டிற்கு வராததால் மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதற்றமடைந்தனர். பள்ளிக்கூடத்துக்கு சென்று பார்த்தனர். ஆனால் பள்ளிக்கூடம் பூட்டி கிடந்தது. இவர்கள் பற்றி சக மாணவர்களிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது பள்ளிக்கூடம் முடிந்ததும் 3 பேரும் வீட்டிற்கு ஒன்றாக நடந்து சென்றதாக அந்த மாணவர்கள் கூறினர்.
உடனே பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் தேடிச்சென்றனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரையில் புத்தகப்பை மற்றும் ஆடைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஏரியில் மூழ்கி இருக்கலாம் என்ற அச்சத்தில் அவர்கள் ஏரியில் இறங்கி தேடிப்பார்த்தனர். சுமார் 1 மணி நேர தேடுதலுக்குப்பிறகு அடுத்தடுத்து 3 மாணவர்களும் பிணமாக மீட்கப்பட்டனர். ஏரியில் குளித்தபோது 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பலியாகி இருப்பது தெரியவந்தது.
இதனிடையே தகவல் அறிந்ததும் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 3 மாணவர்களின் உடலை கைப்பற்றி, அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக 3 பேரது உடலும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்கூடம் திறந்த முதல் நாளிலேயே ஏரியில் மூழ்கி 3 மாணவர்கள் பலியான சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
விருத்தாச்சலம்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சென்னை நோக்கி நள்ளிரவு 12 மணி அளவில் அரசு பஸ் ஒன்று சென்றது. விருத்தாசலத்தில் பஸ் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு அங்கிருந்து மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டது.
விருத்தாசலம் பஸ் நிலையத்தின் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வேகமாக வந்தனர். அவர்களுக்கு பஸ் வழி விடவில்லை எனக் கூறி பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டரை திட்டினர்.
இதையடுத்து பஸ் விருத்தாசலம் எல்ஐ.சி அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தன. அந்த 3 மர்ம நபர்களும் அங்கு மறைந்து நின்று கொண்டு பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கற்களை வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். உடனே பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். மேலும் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பஸ் மீண்டும் சென்னை நோக்கிப் புறப்பட்டது. அரசு பஸ் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் ஊராட்சி புதிய காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் மினிகுடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து ஆழ்துளை கிணற்றில் இருந்து மினிகுடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற பயன்படுத்தப்பட்ட மின்மோட்டார் பழுதானது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மினிகுடிநீர் தொட்டி பயன்பாடின்றி காட்சிப்பொருளாக இருந்தது.
இதுகுறித்து பொதுமக்கள், ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டனர். அதன் பேரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 வாரமாக இப்பகுதி மக்களுக்கு செம்மண் கலந்த நிலையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஆழ்துளை கிணற்றை முறையாக பராமரிக்காததே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் அருகில் உள்ள விளை நிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் அலைந்து திரிகின்றனர். அதனால் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பண்ருட்டி அடுத்த வாத்திப்பாளையம் ஊமை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சத்தியா. இவர்களுக்கு 11 வயதில் மனவளர்ச்சி குன்றிய ஒரு மகள் உள்ளார்.
சென்னையில் உள்ள மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் படித்து வந்த அந்த சிறுமி விடுமுறைக்காக வாத்திப்பாளையத்துக்கு வந்திருந்தார். காலையில் சத்தியாவும், சரவணனும் விவசாய வேலைக்கு சென்று விட்டனர்.
வீட்டில் சிறுமி தனியாக இருந்தார். அப்போது எழுமேடு அகரம், திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரிமுத்து (58) என்பவர் சிறுமியை கத்திரிக்காய் தோட்டத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதை அறிந்த சிறுமியின் தாயார் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து மாரிமுத்து வை கைது செய்தனர்.






