என் மலர்tooltip icon

    கடலூர்

    வேப்பூர் அருகே சாப்பாடு ருசியாக இல்லை என்று கூறி பெண்ணை அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
    வேப்பூர்:

    வேப்பூர் அருகே உள்ள பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல்(வயது 77). விவசாயி. இவரது மனைவி கலியம்மாள்(60). சாப்பாடு ருசியாக சமைத்து தருவதில்லை என கூறி தங்கவேல் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. நேற்றும் சாப்பாடு ருசியாக இல்லை எனவும், குடிக்க தண்ணீர் கொண்டு வருமாறும் தங்கவேல் கூறியுள்ளார்.

    ஆனால் கலியம்மாள் தண்ணீர் கொண்டு வர தாமதமானது. இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த தங்கவேல், தனது மனைவி என்றும் பராமல் அவரை அடித்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

    இதில் சுவற்றில் தலை மோதியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கலியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கொலை ஆகாத மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கவேலை கைது செய்தனர்.
    கடலூரில் ஒரு வாரத்துக்கு முன்பு வேனில் கடத்தப்பட்ட டிரைவர் 2 கால்களை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
    கடலூர்;

    கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் அருள்மொழி. இவருடைய மகன் வினோத்குமார்(வயது 27). இவர் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான கால் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த வாரம் வினோத்குமார் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    கடந்த 16-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த அவரை, 5 பேர் கொண்ட கும்பல் வேனில் கடத்தி சென்றது. இதுபற்றி அவரது தந்தை அருள்மொழி கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனில் கடத்திச் செல்லப்பட்ட வினோத்குமாரையும், அவரை கடத்திச் சென்ற 5 பேரையும் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பா அடுத்த ராமாபுரம் பகுதியில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையிலும், தலை சிதைந்த படியும் இருந்தது. மேலும் அந்த உடலின் அருகில் அடையாள அட்டை ஒன்று கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் ராமாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார், அடையாள அட்டையை பார்த்த போது, அதில் வினோத்குமார், செம்மண்டலம், கடலூர் மாவட்டம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதையடுத்து ராமாபுரம் போலீசார், கடலூர் புதுநகர் போலீசாரை தொடர்பு கொண்டு கடலூரில் யாராவது காணாமல் போனதாக புகார் வந்துள்ளதா? என விசாரித்தனர். அப்போது செம்மண்டலத்தை சேர்ந்த வினோத்குமார் காணாமல் போனதாக புகார் வந்தது பற்றி தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் ஆந்திரா மாநிலத்தில் இறந்து கிடந்தது வினோத்குமார் தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து ராமாபுரம் போலீசார் நேற்று கடலூர் வந்து, புதுநகர் போலீசார் உதவியுடன், வினோத்குமாரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் உடலை அடையாளம் காட்டுவதற்காக, அவர்களை ஆந்திர மாநிலத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

    மேலும் வினோத்குமாரை வேனில் கடத்தி சென்று ஆந்திராவில் வைத்து கால்களை துண்டித்து கொன்றார்களா? அல்லது கொலை செய்து அவரது உடலை ஆந்திராவில் வீசிச்சென்றார்களா? என்பது குறித்தும், அவரது கொலைக் கான காரணம் என்ன? என்பது குறித்தும் ராமாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை கடத்தி கொலை செய்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூரில் வேனில் கடத்தப்பட்ட டிரைவரை கொன்று உடல் ஆந்திராவில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விருத்தாசலம் அருகே தகராறில் மனைவியை கணவன் கல்லால் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வேப்பூர் போலீஸ் சரகம் பில்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 60). விவசாயி. இவரது மனைவி கலியம்மாள் (54).

    கணவன்-மனைவி இருவருக்கும் இடையே நேற்று இரவு திடீரென்று வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்கு வாதம் முற்றி தகராறாக மாறியது.

    ஆத்திரம் அடைந்த தங்கவேல் தனது மனைவி கலியம்மாளை சரமாரியாக தாக்கினார். பின்னர் அருகில் கிடந்த கல்லை எடுத்து கலியம்மாளின் தலையில் ஓங்கி அடித்தார்.

    இதில் கலியம்மாளின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ரத்த வெள்ளத்தில் கீழே சாய்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அங்கு பிணமாக கிடந்த கலியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தனியார் துறையில் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்;

    மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். ஊனத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். 

    தனியார் துறையில் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கடலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆளவந்தார் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    கொரோனா நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என கட்டுமான தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் மத்திய சங்கத்தினர், கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இணையவழி பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்புமனு சமர்ப்பித்தலை எளிமையாக்கிட வேண்டும். புதுப்பித்துள்ள தகுதியான அனைவருக்கும் விடுபட்டு போன கொரோனா நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும். உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இடைக்கால தீர்ப்பின்படி இணையவழி செயல்பாடுகள் சீரான நடைமுறைக்கு வரும் வரை, பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும். பதிவு செய்யும் போது, அனைத்து ஆவணங்களும் தரப்பட்டுள்ளதால் பதிவை புதுப்பிக்கும் போது மீண்டும் அந்த ஆவணங்கள் கேட்பதை கைவிட வேண்டும். எப்போதும் பணிகளை மேற்கொள்ளும் வகையில் சர்வர், முழு அளவில் வேலை செய்திட ஏற்பாடு செய்ய வேண்டும். விண்ணப்பங்கள், குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்) உள்பட அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும். அனைத்து அஞ்சலகம், கிராம மக்கள் சேவை மையம் போன்ற அனைத்திலும் ஆதார் எண்ணுடன் புதிய தொலைபேசி எண்ணை இணைத்திட வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    சிதம்பரத்தில் பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பால் கழிவுநீர் வழிந்து ஓடுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
    அண்ணாமலைநகர்:

    சிதம்பரத்தில் பிரசித்திபெற்ற அனந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் உள்ள செல்வவிநாயகர் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், பாதாள சாக்கடை குழாய் வழியாக செல்கிறது.

    இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் பாதாள சாக்கடை மேன்கோலில் இருந்து கழிவுநீர் பொங்கி தெருவில் ஓடுகிறது. அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும் தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

    இது குறித்து அப்பகுதி மக்கள், சிதம்பரம் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து, கழிவுநீர் உறிஞ்சும் டேங்கர் லாரி மூலமாக கழிவுநீரை அகற்றினார்கள். ஆனால் பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்யவில்லை.

    இதனால் தொடர்ந்து அந்த பகுதியில் கழிவுநீர் பொங்கி, வழிந்து ஓடுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருக்கும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மனித உரிமை காப்பாளர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் மனித உரிமை காப்பாளர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் பிரபா கல்விமணி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் திருமேனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மனித உரிமை காப்பாளர் பாபுவை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டிப்பது, கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருக்கும் போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாவட்டத்தில் இளைஞர்களின் வாழ்க்கையை பாழாக்கும் கஞ்சா விற்பனையை தடுக்க கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களின் சார்பில் வருகிற 1-ந் தேதி கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் குளோப், அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு வெண்புறாகுமார், நிர்வாகிகள் முருகப்பன், ரமேஷ், காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர் அருகே சவாரி ஏற்றுவதில் ஆட்டோ டிரைவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் செம்மண்டலம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 33). இவர் பஸ் நிலையத்தில் உள்ள 5-ம் எண் ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் அவரது ஆட்டோ நிறுத்தத்தை சேர்ந்த டிரைவர் இரண்டாயிரம் விளாகத்தை சேர்ந்த சரத்பாபு என்பவர் 2-ம் எண் ஆட்டோ நிற்கும் இடத்தில் சவாரி ஏற்றியதாக தெரிகிறது. 

    இதை பார்த்த 2-ம் எண் ஆட்டோ நிறுத்த டிரைவர்கள் உத்திரவேல் (35), அன்புதாஸ் (32), வீரமணி (38), திவான்குமார் (30), அருள் (31), காந்தி (42), விமல் (30), சக்திவேல் (45) ஆகிய 8 பேரும் சரத்பாபுவை ஆபாசமாக பேசி நெட்டி தள்ளினர். இதை அறிந்த முருகன் அவர்களிடம் தட்டிக்கேட்டார். 

    இதனால் ஆத்திரமடைந்த 8 பேரும் முருகனை தாக்கியதாக தெரிகிறது. பதிலுக்கு முருகன், விஜய் (25), புகழேந்தி (32), சரத்பாபு (36), ஜெயமூர்த்தி (24), மந்திரமூர்த்தி என்கிற ராஜ்குமார் (28) ஆகிய 6 பேரும் 2-ம் எண் ஆட்டோ டிரைவர் கோண்டூரை சேர்ந்த திவான்குமாரை தாக்கியதாக தெரிகிறது. இது பற்றி முருகன், திவான்குமார் ஆகிய 2 பேரும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் தனித்தனியே புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு தரப்பை சேர்ந்த 14 பேரை கைது செய்தனர்.

    கடலூர் முதுநகர் அருகே சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்த பெட்டிக்கடைக்காரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    கடலூர் முதுநகர்:

    கடலூர் முதுநகர் அருகே உள்ள அன்னவெளி சீதகுப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகுமார், (வயது 52). இவர் அதேஊரில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று சுகுமார் ஒரு மோட்டார் சைக்கிளில் விருத்தாசலம் நோக்கி புறப்பட்டார். 

    விருத்தாசலம் சாலையில் சென்றபோது, முன்னாள் சென்ற காரை ஓட்டிச் சென்ற டிரைவர், காரை திடீரென பிரேக் போட்டு நிறுத்தியதோடு, முன்பக்க கதவை சட்டென திறந்தார். அந்த சமயத்தில் பின்னால் வந்த சுகுமார் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சுகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி அருகே ஓட்டல் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஆகாஷ்பவுல்(வயது 20). இவர் பண்ருட்டியில் தங்கி, கும்பகோணம் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். ஆகாஷ்பவுல் நேற்று முன்தினம் இரவு தான் தங்கியிருந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஆகாஷ்பவுல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சொந்த ஊரில் உள்ள காதலியை பிரிந்து வந்த ஏக்கத்தில் இருந்த ஆகாஷ்பவுல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கடலூர் அருகே ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பழனிசாமி, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.
    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள கே.என்.பேட்டையை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 45). இவரது குடிசை வீடு நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அவரது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தது. 

    இது பற்றி அறிந்த ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பழனிசாமி, சம்பவ இடத்திற்கு சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, அரிசி, வேட்டி- சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். 

    அப்போது ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி விஜயராயலு, கிளைக் கழக செயலாளர்கள் மும்மூர்த்தி, விஜயகுமார், நிர்வாகிகள் முருகன், கந்தவேல், கோபி நாராயணன், விக்கி, பிரசன்னா, நீலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் போக்குவரத்து போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராயபெருமாள் நேற்று நகராட்சி பூங்கா அருகில் வாகன சோதனை நடத்தி வந்தார். அப்போது புதுச்சேரி சாரம் சக்திநகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன்கள் கிருஷ்ணமூர்த்தி (32), சவுந்தரராஜன் (33) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். 

    அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராயபெருமாள் வழிமறித்து சோதனை செய்தார். அதற்கு அவர்கள் நாங்கள் 2 பேரும் சப்-இன்ஸ்பெக்டரை ஆபாசமாக திட்டி, அவரை பணி செய்ய விடாமல் தடுத்தனர். 

    மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி கோவிந்தராயபெருமாள் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி, சவுந்தரராஜன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    ×