என் மலர்
கடலூர்
கடலூரில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,112 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.10 கோடியே 43 லட்சத்து 66 ஆயிரத்து 899-க்கு தீர்வு காணப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், கடலூர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று சிறிய அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றம் (மைக்ரோ நேஷனல் லோக் அதாலத்) நடைபெற்றது. இதற்கு சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான கே.கோவிந்தராஜன் திலகவதி தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி செந்தில்குமார், மக்கள் நீதிமன்ற நீதிபதி செம்மல், குடும்பநல நீதிமன்ற நீதிபதி மகாலட்சுமி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆணைக்குழு செயலாளர் ஜோதி வரவேற்றார்.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், குற்றவியல் வழக்குகள், வங்கி சாரா கடன் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் விசாரணை செய்யப்பட்டன. இதில் மொத்தம் 3,685 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, சமரச அடிப்படையில் தீர்வு காணப்பட்டது. இதன் முடிவில் 3,112 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.10 கோடியே 43 லட்சத்து 66 ஆயிரத்து 899-க்கு தீர்வு காணப்பட்டது.
இதில் கடலூர் மாவட்ட பார் அசோசியேஷன் தலைவர் சுந்தரமூர்த்தி, வக்கீல் சங்க தலைவர் சிவராஜ், செயலாளர் வனராசு மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், திட்டக்குடி, விருத்தாசலம் ஆகிய நீதிமன்றங்களிலும் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

கடலூரில் பழைய 1000 ரூபாய் நோட்டுகளை மர்ம நபர் கால்வாயில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி மத்திய அரசு பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. மேலும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள குறிப்பிட்ட நாட்கள் காலக்கெடு விதித்தது. இதனால் பொதுமக்கள் தாங்கள் வைத்திருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொண்டு சென்று மாற்றினர்.
இதற்கிடையே காலக்கெடு முடிந்த பிறகு பலர் தாங்கள் வைத்திருந்த பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத விரக்தியில் குப்பைகளில் வீசிய சம்பவமும், தீவைத்து எரித்த சம்பவமும் நடந்தன.
இந்த நிலையில் கடலூரில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பிறகு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மர்ம நபர் கால்வாயில் வீசி சென்ற சம்பவம் நேற்று நடந்துள்ளது.
கடலூர் புதுப்பாளையத்தில் ராமதாஸ் நாயுடு தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் நேற்று காலை பழைய 1000 ரூபாய் நோட்டுகள் கிழிந்த படி கழிவுநீரில் மிதந்து சென்றுகொண்டிருந்தது. இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை பார்ப்பதற்காக அந்த இடத்தில் ஒன்று திரண்டனர். மேலும் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகளை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் யாரோ மர்ம நபர் தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த பல ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அதிகாலை நேரத்தில் கொண்டு வந்து கிழித்து கால்வாயில் வீசிச் சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
தொடர்ந்து கால்வாயில் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வீசி சென்ற நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் இன்றும், நாளையும் நடக்கிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் 1.1.2021-ந் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணியின் கீழ், வருகிற 15.12.2020 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்ப்பதற்கு விரும்பும் வாக்காளர்கள் படிவம் 6-ம், பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7-ம், வெளிநாட்டில் வசிப்பவர்கள் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6ஏ-விலும், பெயர், வயது, பாலினம், உறவுமுறை ஆகிய பதிவுகளில் திருத்தம் ஆகியவைகளுக்கு படிவம் 8-ம், ஒரு சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே வாக்காளர்களின் வசிப்பிடம் மாறியிருந்தால் படிவம் 8ஏ-விலும் கோரிக்கை மனுக்களை சப்-கலெக்டர், கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் கொடுத்துக்கொள்ளலாம். மேலும் வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதற்காக கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, திட்டக்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இன்று (சனிக்கிழமையும்), நாளை (ஞாயிற்றுக்கிழமையும்) சிறப்பு முகாம் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இம்முகாமில் வாக்குச்சாவடியில் பணியில் இருக்கும் வாக்குச்சாவடி அமைவிட நியமன அலுவலரிடம் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய படிவத்தில் கோரிக்கை மனுக்களை வாக்காளர்கள் கொடுக்கலாம். மேலும் படிவம் 6-ல் பெயர் சேர்த்தலுக்கான படிவத்துடன் வயதிற்கான ஆதாரமாக பிறப்புச்சான்று அல்லது கல்லூரி, பள்ளி மாற்றுச்சான்றிதழ், இருப்பிடத்திற்கு ஆதாரமாக ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடத்தை குறிக்கும் முகவரி உள்ள ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம் நகல் இவைகளின் ஏதேனும் ஒரு ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
மேலும் வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணைய இணையதளமான https://www.nvsp.in/ என்ற முகவரி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். பொதுமக்களுக்கு வாக்காளர் பட்டியல் தொடர்பாக தகவல்கள் ஏதும் தேவைப்பட்டால் அலுவலக வேலை நாட்களில், வேலை நேரங்களில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மையத்தை 1950 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 405 ஆக உயர்ந்துள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 392 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 24 ஆயிரத்து 57 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். 278 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேற்று வெளியான உமிழ் நீர் பரிசோதனை முடிவில் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்களில் பீகார், டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து என்.எல்.சி. பகுதிக்கு வந்த 2 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 4 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 405 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 7 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். மேலும் 544 பேருடைய உமிழ் நீர் பரிசோதனை முடிவு வரவேண்டி உள்ளது.
விருத்தாசலம் அருகே ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
காரைக்குடியில் இருந்து சென்னைக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று காலை 8.40 மணியளவில் விருத்தாசலம் அடுத்த வயலூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த என்ஜின் டிரைவர் இதுபற்றி, ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த பெண்ணின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர்.
இருப்பினும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார்? தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அருகே கல்லறைக்கு செல்லும் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லிக்குப்பம்:
கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு சி.என்.பாளையம் பகுதியில் கிறிஸ்தவர்கள் கல்லறைக்கு செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் இறந்தவர்களின் சடலத்தை ஓடை வழியாக செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் இந்த பகுதி மக்கள் பெரும் பாதிப்பு அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் குளோப் மற்றும் பொதுமக்கள், நிர்வாகிகள் ஆகியோர் கல்லறைக்கு செல்லக்கூடிய ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அறிந்த தாசில்தார் பலராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தற்காலிகமாக ஓடையை ஒட்டி உள்ள புதர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சிவகங்கையை மையமாக கொண்டு இயங்கி வரும், ‘ஆவே மரியா தமிழ் கத்தோலிக்க ஊடகத்தோட்டம்‘ என்ற சர்வதேச வாட்ஸ்-அப் குழு சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
கடலூர்:
கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சிவகங்கையை மையமாக கொண்டு இயங்கி வரும், ‘ஆவே மரியா தமிழ் கத்தோலிக்க ஊடகத்தோட்டம்‘ என்ற சர்வதேச வாட்ஸ்-அப் குழு சார்பில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி, கடலூர் செம்மண்டலம் பகுதியில் நடந்தது.
நிகழ்ச்சியில் பெரியகங்கணாங்குப்பம் கிராம நிர்வாக அதிகாரி பெ.தணிகாசலம், கடலூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் தினகரன், போலீஸ்காரர் அமிர்கான் ஆகியோர் கலந்து கொண்டு 50 குடும்பத்தினருக்கு அரிசி, எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் ஆவே மரியா தமிழ் கத்தோலிக்க ஊடகத்தோட்டத்தின் கடலூர்-புதுச்சேரி மறைமாவட்ட பொறுப்பாளரும், கடலூர் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியையுமான அனிதா, குழு உறுப்பினர்கள் அமலதாஸ், விண்ணரசன், பீட்டர், மேரி, இன்பன்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆவே மரியா தமிழ் கத்தோலிக்க ஊடகத்தோட்ட தலைவர் ஆரோக்கிய அமிர்தராஜ், துணைத்தலைவர் ஜோசப் கென்னடி, செயலாளர் வளநாடன், துணைச்செயலாளர் அன்பரசி, பொருளாளர் மார்க்கிரெட் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
குறிஞ்சிப்பாடி அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குறிஞ்சிப்பாடி:
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆடூர் அகரம் மேல காலனி தெருவை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி ஆதிலட்சுமி (வயது 21). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கோபால் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, ஆதிலட்சுமியிடம் பெற்றோர் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆதிலட்சுமி கோபித்துக் கொண்டு, குறிஞ்சிப்பாடி அருகே ரெங்கநாதபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வசித்து வந்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களாக அவர் மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆதிலட்சுமி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார், ஆதிலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அவரது தந்தை பழனி கொடுத்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆதிலட்சுமிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், அவரது சாவு குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீமுஷ்ணத்தில் மின்சாரம் தாக்கி பெண் பலியானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
ஸ்ரீமுஷ்ணம் வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (வயது 36). இவருடைய மனைவி தேன்மொழி(36). இவர்களுக்கு ஹாசினி(8) என்ற மகளும், ஹர்ஷிக்(3½) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் தூங்கி எழுந்த தேன்மொழி, வீட்டில் இருந்து வெளியே வந்து மின்விளக்கை போடுவதற்காக சுவிட்ச் போர்டில் கை வைத்ததாக தெரிகிறது.
அப்போது அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே எழுந்து வந்த மணிகண்டன், தேன்மொழி பிணமாக கிடந்ததை கண்டு கதறி அழுதார். இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, இறந்து கிடந்த தேன்மொழியின் உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் வீட்டில் இருந்த சுவிட்ச் போர்டில் மின்கசிவு ஏற்பட்டிருந்ததும், அதில் கை வைத்ததால் தான் தேன்மொழி மின்சாரம் தாக்கி இறந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டக்குடி அருகே சேறும், சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நாற்றும் நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி:
திட்டக்குடி அருகே மேலூர் கிராமம் காந்திநகர் பகுதியில் முறையான சாலை வசதி இல்லாமல் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சாலைகளை சிமெண்ட் சாலைகளாக அமைக்க கோரி பொதுமக்கள் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த ஒருவாரமாக பெய்த கனமழை காரணமாக இப்பகுதியில் உள்ள தெருக்கள் சேறும், சகதியுமாக மாறியதால் பொது மக்கள் மிகவும் அவதியடைந்தனர்.
ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் சேறும், சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி நாற்றும் நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த அதிகாரிகள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று பொது மக்கள் அமைதியாக போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

புதுப்பேட்டை அருகே ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுப்பேட்டை:
பண்ருட்டி அருகே உள்ள மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் அரவிந்த் (வயது 17). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் அரவிந்த், அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர்களான ஸ்ரீதர்(22), அருண்(18) ஆகியோருடன் எலந்தம்பட்டு கெடிலம் ஆற்றுக்கு குளிக்க சென்றார். அங்கு அவர்கள் ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை அருகில் நின்று குளித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அரவிந்த், எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதில் அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர், அருண் ஆகியோர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அரவிந்த் ஆற்றில் மூழ்கினார். இதையடுத்து அப்பகுதி மக்கள் ஆற்றில் இறங்கி, அவரை தேடினர். ஆனால் அவர்களால் அரவிந்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, ஆற்றில் மூழ்கிய அரவிந்தை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அரவிந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணாகிராமம் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நெல்லிக்குப்பம்:
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லிக்குப்பம் செயற்பொறியாளர் லீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கீழ் கவரப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் சிறப்பு பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ள இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேல் கவரப்பட்டு, கீழ் கவரப்பட்டு, கோழிப் பாக்கம், கொங்கராயனூர், ஏ.கே.பாளையம், எஸ்.கே.பாளையம், சின்ன பகண்டை, பெரிய பகண்டை, குச்சிபாளையம், பாபு குளம், மேல் குமாரமங்கலம், அண்ணாகிராமம், பக்கிரி பாளையம், முத்துகிருஷ்ணாபுரம், எழுமேடு, ஆண்டிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மின்சார வினியோகம் இருக்காது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.