என் மலர்tooltip icon

    செய்திகள்

    செம்மண்டலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் உதவி வழங்கப்பட்ட காட்சி
    X
    செம்மண்டலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் உதவி வழங்கப்பட்ட காட்சி

    செம்மண்டலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

    கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சிவகங்கையை மையமாக கொண்டு இயங்கி வரும், ‘ஆவே மரியா தமிழ் கத்தோலிக்க ஊடகத்தோட்டம்‘ என்ற சர்வதேச வாட்ஸ்-அப் குழு சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
    கடலூர்:

    கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சிவகங்கையை மையமாக கொண்டு இயங்கி வரும், ‘ஆவே மரியா தமிழ் கத்தோலிக்க ஊடகத்தோட்டம்‘ என்ற சர்வதேச வாட்ஸ்-அப் குழு சார்பில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி, கடலூர் செம்மண்டலம் பகுதியில் நடந்தது.

    நிகழ்ச்சியில் பெரியகங்கணாங்குப்பம் கிராம நிர்வாக அதிகாரி பெ.தணிகாசலம், கடலூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் தினகரன், போலீஸ்காரர் அமிர்கான் ஆகியோர் கலந்து கொண்டு 50 குடும்பத்தினருக்கு அரிசி, எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் ஆவே மரியா தமிழ் கத்தோலிக்க ஊடகத்தோட்டத்தின் கடலூர்-புதுச்சேரி மறைமாவட்ட பொறுப்பாளரும், கடலூர் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியையுமான அனிதா, குழு உறுப்பினர்கள் அமலதாஸ், விண்ணரசன், பீட்டர், மேரி, இன்பன்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆவே மரியா தமிழ் கத்தோலிக்க ஊடகத்தோட்ட தலைவர் ஆரோக்கிய அமிர்தராஜ், துணைத்தலைவர் ஜோசப் கென்னடி, செயலாளர் வளநாடன், துணைச்செயலாளர் அன்பரசி, பொருளாளர் மார்க்கிரெட் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×