என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
    X
    நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

    திட்டக்குடி அருகே சாலை வசதி கோரி பெண்கள் நாற்று நடும் போராட்டம்

    திட்டக்குடி அருகே சேறும், சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நாற்றும் நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திட்டக்குடி:

    திட்டக்குடி அருகே மேலூர் கிராமம் காந்திநகர் பகுதியில் முறையான சாலை வசதி இல்லாமல் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சாலைகளை சிமெண்ட் சாலைகளாக அமைக்க கோரி பொதுமக்கள் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    கடந்த ஒருவாரமாக பெய்த கனமழை காரணமாக இப்பகுதியில் உள்ள தெருக்கள் சேறும், சகதியுமாக மாறியதால் பொது மக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

    ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் சேறும், சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி நாற்றும் நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த அதிகாரிகள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று பொது மக்கள் அமைதியாக போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
    Next Story
    ×