என் மலர்
கடலூர்
- கடலூர் மாவட்டத்திற்கு விடுக்கப் பட்ட கனமழை எச்சரிக்கை
- கரைக ளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்லவேண்டும்
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது - சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் முன்னறி விப்பின்படி, டெல்டா மாவட்டமான கடலூர் மாவட்டத்திற்கு விடுக்கப் பட்ட கனமழை எச்சரிக்கை மற்றும் மோசமான வானி லை காரணமாக கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்யக் கூடும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதன் காரணமாக இடிமின்னலுடன் கனமழை பெய்து வரும்போதுதிறந்த வெளியில் நிற்பதையும், நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச்செல்வதை முற்றிலும் தவிர்க்குமாறும், தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின்இரு கரைக ளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்லவேண்டும். கால்நடைகளை பாது காப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம். கடலூர் மாவட்ட மீன வர்கள் யாரும் மறு அறி விப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது.
கடலூர்மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பேரிடர் கால நடவடிக்கை கள் மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல் படும் வகையில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் கீழ்க்கண்ட தொலை பேசி எண்களும் செயல்பட்டு வருகிறது. தொலைபேசி எண்கள் கட்டணமில்லால்லாதது.04142-220700, தொலைபேசி எண் - 107704142-௨௩௩௯௩௩ மேற்படி தொலை பேசி எண்களை தொடர்பு கொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம். இதில் பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறை அலு வலர்களுக்கு நேரடி யாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- மழை காரணமாக சாலைகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
- தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
கடலூர்:
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகுகிறது. நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் கடலூர் மற்றும் காவிரி டெல்டா உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறி ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளனர். இதன் காரணமாக இன்று ஒரு நாள் கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் விடுமுறை அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி, வேப்பூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் இன்று காலை வரைகன மழை கொட்டி தீர்த்து வருகிறது.
கடலூரில் தலைமை தபால் நிலையம், பஸ் நிலையம், லாரன்ஸ் சாலை கோண்டூர் உள்ளிட்ட மாநகராட்சி பகுதி முழுவதும் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. மழை காரணமாக கடலூரில் முக்கிய சாலைகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
தொடர் மழை காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தாழ்வான பகுதிகள் மற்றும் மழையால் பாதிக்கப்படக் கூடிய இடங்களை கண்டறிந்து தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இது மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு மரம் அறுக்கும் கருவி, மணல் மூட்டைகள், குளோரின் கலந்த குடிநீர், ஜெனரேட்டர் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் இருந்து வருகின்றன.
கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் நிலப் பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வருவதோடு குளங்கள் தற்போது வேகமாக நிரம்பி வருவதையும் காண முடிகிறது.
இந்த நிலையில் கடலூரில் 123 மில்லி மீட்டர் மழையும் சிதம்பரத்தில் 103 மில்லி மீட்டர் மழை ஒரே இரவில் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும் . கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
- 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம்
- பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காத மத்திய அரசை கண்டித்து நடுவீரப்பட்டு சி.என். பாளையம் பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து ஒன்றிய தலைவர் வைத்தி லிங்கம் தலைமையில் தீபாவளி பண்டிகையின் போது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் சம்பளம் வழங்காததால் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்ட தோடு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டமும் செய்தனர்.மேலும் சம்பளம் வழங்காததால் தீபாவளி பண்டிகை கொண்டாட முடியாத அவல நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- வீடு தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
- போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்:
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று தீபாவளியை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் ராக்கெட் வெடி வெடித்துள்ளனர்.
சிதம்பரம் அருகே பரங்கிபேட்டை பகுதியில் அனிதா என்பவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
அப்போது ராக்கெட் நேராக குடிசை வீட்டின் மேல் விழுந்து வெடித்து சிதறியதில் வீடு தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைப்பதற்குள் வீடு முழுவதுவமாக எரிந்து நாசமானது.
இதில் வீட்டில் இருந்த பிரிட்ஜ், டிவி, நகை மற்றும் கல்வி சான்றிதழ்கள் போன்றவை எரிந்து நாசமானது.
விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தொடர்ந்து வருவதால் பூக்களின் விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது.
- தங்களுக்கு தேவை யான பூக்களை மட்டும் வாங்கி சென்றதையும் காணமுடிந்தது
கடலூர்:
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. நாளை மறுநாள் அமாவாசை மற்றும் சஷ்டி விரதம் தொடங்கு வதால் கடலூர் திருப்பா திரிப்புலியூர் பஸ் நிலையம் அருகே உள்ள பூ மார்க் கெட்டிற்கு வழக்கத்தை விட கூடுதலாக பூக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் விழாக்கா லங்கள் தொடர்ந்து வருவதால் பூக்களின் விலை கிடுகிடு வென உயர்ந் துள்ளது. அதன்படி அரும்பு மற்றும் மல்லிகை பூ ஆயிரம் ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ரோஜா பூ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக வியா பாரிகள் மற்றும் பொது மக்கள் தங்களுக்கு தேவை யான பூக்களை மட்டும் வாங்கி சென்றதையும் காணமுடிந்தது. தற்போது மழை காலம் என்பதால் பூக்களின் விலை உயர்ந்து உள்ளதாக தெரிகிறது.
- இவர் பண்ருட்டியில் உள்ள துணிக்கடையில் ஜவுளி எடுக்க வந்தார்.
- புகாரின் பேரில் அங்கிருந்த சி.சி.டி.வி. கோமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
கடலூர்:
புதுவை மாநிலம் கரியமாணிக்கத்தை சேர்ந்தவர் முத்துகுமாரசாமி. இவர் பண்ருட்டியில் உள்ள துணிக்கடையில் ஜவுளி எடுக்க வந்தார். அப்போது அவரது மணிபர்சை தவறவிட்டார். அதில் ரூ.8 ஆயிரம் இருந்தது. பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் காணாமல் போன மணி பர்ஸை தேடி கண்டுபிடித்து உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
- கடந்த 9-ந் தேதி காலை தனது வீட்டை சுத்தம் செய்தபோது பரணை யில் இருந்த பாம்பு இவரை கடித்தது.
- மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கோட்ட லாம்பாக்கத்தை சேர்ந்தவர் நாகப்பன் மகள் கங்கா (வயது 31), திருமணம் ஆனவர். இவர் கடந்த 9-ந் தேதி காலை தனது வீட்டை சுத்தம் செய்தபோது பரணை யில் இருந்த பாம்பு இவரை கடித்தது.
இதனால் மயங்கி விழுந்த கங்காவை, பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- குழந்தையின் அழுகையை நிறுத்த பிஸ்கட் போன்ற உணவு பொருட்களை வாங்கி கொடுத்தனர்.
- அவரது பெற்றோர் இருந்ததை குழந்தை அடையாளம் காட்டியது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் பஸ் நிலையத்தில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று அழுது கொண்டு இருந்தது. இதனை கண்ட பொதுமக்கள் அங்கிருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சென்று குழந்தையை மீட்ட னர். குழந்தையின் அழுகை யை நிறுத்த பிஸ்கட் போன்ற உணவு பொருட்களை வாங்கி கொடுத்தனர்.
தொடர்ந்து குழந்தை யிடம் விசாரித்தபோது, காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள டீ.நெடுஞ்சேரி கிராமத்தை சேர்ந்த குழந்தை என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்துக் கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் காட்டுமன்னார்கோவில் கடை வீதியில் வலம் வந்தார். அங்கிருந்த பிள்ளையார் கோவில் தெருவில் ஒரு பாத்திர கடையில் அவரது பெற்றோர் இருந்ததை குழந்தை அடையாளம் காட்டியது. அங்கிருந்த பெற்றோரை அழைத்து அறிவுரை கூறிய சப்- இன்ஸ்பெக்டர், அவர்களி டம் குழந்தையை ஒப்படைத்தார்.
- இதையடுத்து 3 பேரும் ஒறையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்றனர்.
- குரங்குகளை பிடிக்க உத்தரவிடுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த ஓறையூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குரங்குகளின் அட்டகாசம் அதிக அளவில் உள்ளது. நேற்று மாலை விவசாய வேலைக்கு சென்று திரும்பிய கூலி தொழிலாளர்கள் சரஸ்வதி (வயது 43), காத்தவராயன் (55), ஆசைத்தம்பி (53) ஆகிய 3 பேரை குரங்கு கடித்தது.
இதையடுத்து 3 பேரும் ஒறையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்றனர்.மேலும், இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. இதனால் வீட்டை விட்டு வெளியே வர பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக குரங்குகளை பிடிக்க உத்தரவிடுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் முன்னிலையிலும் கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
கடலூர்:
கடலூர் மாநகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி கடலூர் டவுன்ஹால் எதிரில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையிலும் அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் முன்னிலையிலும் கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பேரணியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாநகர ஆணையாளர் காந்திராஜ், மாநகர நல அலுவலர் எழில் மதனா, மண்டல குழு தலைவர் சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் அருள் பாபு, சுபாஷ்ணி ராஜா, டாக்டர் காரல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- 500-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் பயணிகளை ஏற்றி சென்று வருகிறது.
- பொதுமக்கள் செல்வதற்கு இரவு நேரத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
கடலூர்:
நாடு முழுவதும் நாளை மறுநாள் (12-ந் தேதி) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது . இதனை தொடர்ந்து தமிழகத்தில் வெளியூரில் இருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடையூறு இல்லாமல் வந்து செல்வதற்கு தமிழக அரசு சார்பில் ஆயிரக்கணக்கான பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி,சிதம்பரம் ,விருத்தாச்சலம், நெய்வேலி, காட்டுமன்னானர்கோவில் உட்பட 11 பஸ் டெப்போ செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இருந்து வெளியூருக்கு தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் பயணிகளை ஏற்றி சென்று வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக இருக்கக்கூடிய பஸ்கள் மட்டுமின்றி கூடுதலாக 200 பஸ்கள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றது.
இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து சென்னை, சேலம், திருச்சி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் ,விருத்தாச்சலம் நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு இரவு நேரத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இது மட்டும் இன்றி கிராமப்புற பகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கும் கூடுதல் நேரமாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று முதல் நாளை வரை3 நாட்களுக்கு கூடுதலாக தினந்தோறும் 200 பஸ்களும் தீபாவளி முடிந்து அடுத்த2 நாட்களுக்கு இதே போல் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளது. ஆகையால் பொதுமக்கள் கூடுதலாக இயக்கப்படும் பஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம் .மேலும் பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- கடலூர் மாவட்டத்தில் 57 இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
- போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அதன் பின்னர் செல்ல வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், சேத்தியாதோப்பு, திட்டக்குடி, ஆகிய 7 உட்கோட்டங்கள் உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் 7 உட்கோட்டங்களில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் 57 இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் 11 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் 96 குழுவினர் இரவு நேர வாகன ரோந்து பணிகள் ஈடுபட்டு குற்ற செயல்கள் தடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் வெளியூருக்கு செல்லும் சமயத்தில் அந்தந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அதன் பின்னர் செல்ல வேண்டும். கடலூர் மாவட்ட எல்லை பகுதியில் மது பாட்டில்கள் மற்றும் சாராயம் போன்றவற்றை கடத்துவதை தடுப்பதற்கு 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






