என் மலர்
கடலூர்
- பாதாள சாக்கடை அடைத்து நிரம்பி கழிவு நீர் முழுவதும் சாலையில் வழிந்து ஓடுகிறது.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாதாள சாக்கடையை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
கடலூர்:
கடலூர் கடற்கரை சாலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. மேலும் இந்த சாலை வழியாக தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதன் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்திலும், பாதசாரிகள் சென்று வருகின்றனர்.மேலும் ஆயிரக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் இவ்வழியாக தினந்தோறும் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடற்கரை சாலையில் வேன் ஸ்டாண்ட் அருகே பாதாள சாக்கடை அடைத்து நிரம்பி கழிவு நீர் முழுவதும் சாலையில் வழிந்து ஓடுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் செல்லும் போது எதிர்பாராமல் கழிவு நீர் பொதுமக்கள் மீது தெளித்து அருவருப்பை ஏற்படுவதோடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இது மட்டும் இன்றி வழிந்தோடும் கழிவுநீரால் துர்நாற்றம் கடுமையாக வீசி வருவதால் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். மேலும் கழிவுநீர் வழிந்து வருவதால் இவ்வழியாக செல்லக்கூடிய அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதோடு இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாதாள சாக்கடையை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- பஸ்சை வழிமறித்து சரமாரியாக கல் வீசி தாக்கியதில் முன் பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.
- வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத 2 நபர்களை தேடி வருகின்றனர்.
கடலூர்:
விருத்தாசலத்தில் இருந்து கடலூர் நோக்கி சம்பவத்தன்று தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது கடலூர் அடுத்த பெத்த நாயக்கன் குப்பம் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று இரண்டு நபர்கள் பஸ்சை வழிமறித்து சரமாரியாக கல் வீசி தாக்கியதில் முன் பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. அப்போது பஸ்ஸில் இருந்த பயணிகள் அலறி கத்தினர். இதனைத் தொடர்ந்து 2 நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இந்த கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் டிரைவர் ராஜவன்னியன், நடத்துனர் பாலமுருகன் ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத 2 நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர்கள் மாணவி எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
- காலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் அவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
கடலூர்:
கடலூரை அடுத்த உச்சிமேடு பகுதியை சேர்ந்த 19 வயது தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு பி.ஏ. படித்து வரும் மாணவி சம்பவத்தன்று வீட்டில் இருந்து திடீர் என மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர்கள் மாணவி எங்கு தேடியும் கிடைக்கவில்லை. உடனே மாணவியின் பெற்றோர் இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடிவருகின்றனர். இதேபோன்று கடலூரை அடுத்த வெள்ளைக்கரை பகுதியை சேர்ந்த 19 வயது தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவி சம்பவத்தன்று காலையில் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கல்லூரி மாணவியை எங்கு தெரியும் கிடைக்கவில்லை. இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.
- ஏகாம்பரம் அதே பகுதியை சேர்ந்த முகுந்தன் என்பவரிடம் ரூ.10 லட்சம் வாங்கியுள்ளார்.
- ஏகாம்பரம் கொடுத்த புகாரின் பேரில் முகுந்தன், புருஷோத்தமன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூரை அடுத்த முதுநகரை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 48). இவர் அதே பகுதியை சேர்ந்த முகுந்தன் என்பவரிடம் ரூ.10 லட்சம் வாங்கியுள்ளார். இதில் ரூ.8 லட்சத்தை திருப்பி செலுத்திவிட்டார். மீதமுள்ள தொகையை ஏகாம்பரம் கொடுக்கவில்லை. இதையடுத்து ஏகாம்பதிடம் முகுந்தன் பணம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் முகுந்தன் மற்றும் அவர்களுடன் இருந்த 3 பேர் ஏகாம்பரத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஏகாம்பரம் கொடுத்த புகாரின் பேரில் முகுந்தன், புருஷோத்தமன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று காலை குளிக்க சென்ற பாபுநாத் சுரேன் கால் வழிக்கி கீழே விழுந்தார்.
- மேல் சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
கடலூர்:
கொல்கத்தா மாநிலம் புருளியாவை சேர்ந்தவர் பாபுநாத் சுரேன் (வயது 26). இவர் ரெட்டிச்சாவடியை அடுத்த பெரிய காட்டுபாளையம் தனியார் கம்பெனியில் சமையல் காரராக வேலை பார்த்து வந்தார். இன்று காலை குளிக்க சென்ற பாபுநாத் சுரேன் கால் வழிக்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் பாபுநாத் சுரேனை மீட்டு பெரிய காட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது பாபுநாத் சுரேனை சோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனார். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூரில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.
- அன்பரசன், சூர்யா ஆகியோர் தகராறில் ஈடுபட்டவர்களிடம் தட்டி கேட்டனர்.
கடலூர்:
கடலூரில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் பயணம் செய்த 6 பேர் கும்பல் கடுமையாக வாக்குவாதம் செய்து கொண்டனர். இதனால் பஸ் கண்டக்டர்கள் அன்பரசன், சூர்யா ஆகியோர் தகராறில் ஈடுபட்டவர்களிடம் தட்டி கேட்டனர். அப்போது அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க பஸ்சை நிறுத்தினர். அப்போது பஸ்சில் இருந்த கும்பல் திடீரென்று தப்பி ஓடினர்.
மீண்டும் அந்த பஸ் கடலூர் நோக்கி மீனாட்சி பேட்டை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த கும்பல் பஸ்சை வழிமறித்து டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நடத்துனர்கள் அன்பரசன் மற்றும் சூர்யாவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயம் அடைந்த 2 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் டிரைவர் தனவேல் கொடுத்த புகாரின் பேரில் வடலூரை சேர்ந்த லோலிசின், ஹரிஷ், அப்பு, வினோத் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- நீர்நிலை புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டு உள்ளது.
- ஜேசிபி எந்திரம் முன்பு படுத்து வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
கடலூர்:
கடலூர் வண்டிப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகே குளம் பகுதியில் 8 வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டு உள்ளதால் காலி செய்யக்கோரி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இன்று காலை மாநகராட்சி சார்பில் பொறியாளர் புண்ணியமூர்த்தி தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் சம்பவ இடத்திற்கு கொண்டு வந்தனர். இதனை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், மாநகர செயலாளர் அமர்நாத் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு இருந்தனர்.
அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டதாக கூறப்படும் வீடுகளை இடிக்க தயாரானார்கள். உடனே அங்கிருந்த ஒரு நபர் திடீரென்று ஜேசிபி எந்திரம் முன்பு படுத்து வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அங்கு இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் இந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டதாக இருந்தாலும் கூட இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய இடமாகும். மேலும் இந்த இடத்திற்கும் மாநகராட்சிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. மேலும் இந்து அறநிலை துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும்போது நாங்கள் உரிய பதில் அளிக்கிறோம். ஆகையால் மாநகராட்சி அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து கடலூர் தாசில்தார் பூபாலச்சந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது தற்சமயம் வீடுகள் இடிக்க மாட்டோம். வீட்டிற்கு வெளியில் உள்ள கழிப்பறைகளை இடிக்கவுள்ளோம் என கூறினார். இதனை தொடர்ந்து அங்கு இருந்த நபர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். பின்னர் வெளியில் இருந்த கழிப்பறைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கும் பணியினை தொடங்கினார்கள் இந்த நிலையில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.
- பெரியக்குப்பம் பகுதியில் தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
- கும்பலை மடக்கி பிடித்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே பெரியக்குப்பம் பகுதியில் தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களாக கோடிக்கணக்கான ரூபாயில் இருந்த இரும்பு பொருட்களை நூற்றுக்கணக்கான நபர்கள் தொடர்ந்து திருடி சென்று வந்தனர். இன்று காலை ஒரு கும்பல் தனியார் கம்பெனி வளாகத்தில் இரும்பு பொருட்கள் திருடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த செக்யூரிட்டி மனோகரன் தலைமையில் ஊழியர்கள் சோதனை செய்து கொண்டு இருந்தபோது, ஒரு கும்பல் இரும்பு பொருட்கள் திருடி இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து ஆறு பேர் கொண்ட கும்பலை அவர்கள் மடக்கி பிடித்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 150 கிலோ இரும்பு பொருட்களும் ஒப்படைத்தனர். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வெள்ளக்கரையை சேர்ந்த ஜெகநாதன் (வயது 38), குண்டியமல்லூரை சேர்ந்த சுபாஷ் (வயது 42), தச்சக்காடு பகுதியை சேர்ந்தவர் சுகன்ராஜ் (வயது 26), தியாகவல்லியை சேர்ந்த சத்தியசீலன் (வயது 45), ஆலப்பாக்கத்தை செல்லப்பன் (வயது 40), தியாகவல்லியை சேர்ந்த இளையபெருமாள் (வயது 49) என தெரியவந்தது. இதனை தொடர்ந்து இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 6 பேர் கைது செய்தனர்.
- ஆஷிஷ்குமார் வடகரை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.
- எதிர்பாராத விதமாக எக்ஸ்பிரஸ் ெரயில் மோதி உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.
கடலுார்:
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அருகே நந்திமங்கலத்தைச் சேர்ந்த முருகன். அவரது மகன் ஆஷிஷ்குமார்(வயது 14) இவர் வடகரை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார். நேற்று இரவு 9 மணியளவில் அப்பகுதியில் செல்லும் விழுப்புரம் – திருச்சி ரயில் மார்க்கத்தில் இயற்கை உபாதைக்கு ரயில் பாதையை கடந்து சென்று மீண்டும் அவ்வழியே கடந்து வந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ெரயில் மோதி உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து வந்த விருத்தாசலம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமை யிலான போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். எக்ஸ்பிரஸ் ரயில் மோதி மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
கடலூர்:
சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெறுகிறது. இதனால் சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மின்சார நிறுத்தம் சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான பின்னலூர், எறும்பூர், ஒரத்தூர், சோழத்தரம், பாளையங்கோட்டை, கொழை, ராமாபுரம், கானூர், காவாலக்குடி, முடி கண்டநல்லூர், கொண்ட சமுத்திரம், வானமாதேவி, அறந்தாங்கி, நித்தமல்லி, மஞ்சக்கொல்லை, மிராலூர், மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என பொறியாளர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
- வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருக்கும் இடங்களில் சோதனை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
- அரசு விதிமுறைகளின்படி முழு ஒத்துழைப்பு வழங்கி பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது- கடலூர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக பட்டாசு மற்றும் வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருக்கும் இடங்களில் சோதனை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றது. விருத்தாச்சலம் அருள்ஜோதி என்பவர் வீட்டில் தீபாவளிக்கு விற்பனை செய்வதற்காக ஒரு லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும், மேல் ஆதனூர் பகுதி சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மளிகை கடையில் நாட்டு வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருந்ததையும், அம்பாள் புரம் கிராமத்தில் கொளஞ்சி கண்ணன் என்பவர் வீட்டில் 35 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை ஆன்லைன் மூலமாக வாங்கி இருந்ததையும் போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
ஆகையால் கடலூர் மாவட்டத்தில் அரசு உரிமைப் பெறாமல் சட்டவி ரோதமாக பட்டாசுகள் பதுக்கி விற்பனை செய்தாலோ, அரசு உரிமம் பெற்று பட்டாசு விற்பனை செய்பவர்கள் அளவுக்கு அதிகமாக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தாலோ அரசு வழிமுறைகளின் படி பாதுகாப்பு முன்னெ ச்சரிக்கை நடவடி க்கைகள் முறையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு அரசு வழிமுறைகளை பின்பற்றாத பட்டாசு கடை மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆகையால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அரசு விதிமுறைகளின்படி முழு ஒத்துழைப்பு வழங்கி பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.
- ராமாபுரத்தைச் சேர்ந்த விதவை பெண்ணின் 17வயது மகளை சிவமணி கர்ப்பமாக்கி உள்ளார்.
- இருவரும் சிவமணியை தாக்கியதில் அவர் கீழே விழுந்தார்.
கடலுார்:
கடலுார் அருகே குறவன்பாளை யத்தைச்சேர்ந்தவர் சிவமணி, (வயது38). ஆட்டோ டிரைவர். திருமணமாகி, ஆண் குழந்தை உள்ளது. இவர் கிழக்கு ராமாபுரம்-நடுக்குப்பம் சாலை, வாழைத்தோப்பில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுகிடந்தார். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிழக்கு ராமாபுரத்தைச் சேர்ந்த விதவை பெண்ணின் 17வயது மகளை சிவமணி கர்ப்பமாக்கி உள்ளார். இதன் காரணமாக சிவமணியை கொலை செய்ய விதவை பெண், அவரது தம்பி வேல்முருகன், நண்பர் அம்பாள்புரம் சங்கர் ஆகியோர் திட்டமிட்டனர். அதன்படி, கிழக்கு ராமாபுரம் திரவுபதியம்மன் கோவில் திருவிழாவிற்கு விதவை பெண் அழைத்ததின் பேரில், சிவமணி அங்கு சென்றார். அப்போது, விதவைபெண் , வேல்முருகன், சங்கர் ஆகியோர் சிவமணியை கோவிலுக்கு போகலாம் எனக் கூறி, ஆட்டோவில் அழைத்துச் சென்று கொலை செய்தது தெரிந்தது. விதவை பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக 2 பேரை தேடிவந்தனர். அதன்படி என்.எல்.சி., சுரங்கத்தில் கனரக வாகன டிரைவரான வேல்முருகன், பெயிண்டர் சங்கர், ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசில் வேல்முருகன் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:- என் அக்கா மகளை சிவமணி கர்ப்பமாக்கினார். இதுகுறித்து எனது அக்கா தட்டிக் கேட்டபோது சிவமணிவாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால்சி வமணியை கொலை செய்ய திட்டமிட்டோம். பேச வேண்டும் எனக்கூறி சிவமணியை, விதவை பெண் வாழைத்தோப்பிற்கு அழைத்து வந்தார். அங்கு வந்த நானும், சங்கரும் சேர்ந்து சிவமணியுடன் மது அருந்தினோம். பின், இருவரும் சிவமணியை தாக்கியதில்,அவர் கீழே விழுந்தார். அப்போது, கத்தியால் கழுத்தறுத்து கொலைசெய்தோம். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.






