search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் கடற்கரை சாலையில் வழிந்து ஓடும் கழிவு நீர்; தொற்று நோய் பரவும் அபாயம்
    X

    கடலூர் மஞ்சக்குப்பம் பீச் ரோடு சாலையில் பாதாள சாக்கடை வழிந்து ஓடுவதை படத்தில் காணலாம்.

    கடலூர் கடற்கரை சாலையில் வழிந்து ஓடும் கழிவு நீர்; தொற்று நோய் பரவும் அபாயம்

    • பாதாள சாக்கடை அடைத்து நிரம்பி கழிவு நீர் முழுவதும் சாலையில் வழிந்து ஓடுகிறது.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாதாள சாக்கடையை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கடலூர்:

    கடலூர் கடற்கரை சாலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. மேலும் இந்த சாலை வழியாக தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதன் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்திலும், பாதசாரிகள் சென்று வருகின்றனர்.மேலும் ஆயிரக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் இவ்வழியாக தினந்தோறும் சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கடற்கரை சாலையில் வேன் ஸ்டாண்ட் அருகே பாதாள சாக்கடை அடைத்து நிரம்பி கழிவு நீர் முழுவதும் சாலையில் வழிந்து ஓடுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் செல்லும் போது எதிர்பாராமல் கழிவு நீர் பொதுமக்கள் மீது தெளித்து அருவருப்பை ஏற்படுவதோடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இது மட்டும் இன்றி வழிந்தோடும் கழிவுநீரால் துர்நாற்றம் கடுமையாக வீசி வருவதால் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். மேலும் கழிவுநீர் வழிந்து வருவதால் இவ்வழியாக செல்லக்கூடிய அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதோடு இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாதாள சாக்கடையை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×